Published:Updated:

சிட்டி, வெர்னாவுக்குக் கடும்போட்டி! பெரிய வென்ட்டோவா ஃபோக்ஸ்வாகன் வர்ட்யூஸ்?

ஃபோக்ஸ்வாகன் வர்ட்யூஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஃபோக்ஸ்வாகன் வர்ட்யூஸ்

ஃபர்ஸ்ட் டிரைவ்: ஃபோக்ஸ்வாகன் வர்ட்யூஸ்

சிட்டி, வெர்னாவுக்குக் கடும்போட்டி! பெரிய வென்ட்டோவா ஃபோக்ஸ்வாகன் வர்ட்யூஸ்?

ஃபர்ஸ்ட் டிரைவ்: ஃபோக்ஸ்வாகன் வர்ட்யூஸ்

Published:Updated:
ஃபோக்ஸ்வாகன் வர்ட்யூஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஃபோக்ஸ்வாகன் வர்ட்யூஸ்
சிட்டி, வெர்னாவுக்குக் கடும்போட்டி!
பெரிய வென்ட்டோவா ஃபோக்ஸ்வாகன் வர்ட்யூஸ்?

ஸ்லாவியாவை ஓட்டும்போதே வர்ட்யூஸ் (Virtus) பற்றி விசாரித்தேன். ‘இதோ அதோ’ என்று பூச்சாண்டி காட்டவில்லை ஃபோக்ஸ்வாகன். ‘‘அமிர்த்ஸருக்கு வந்துடுங்க’’ என்று சொல்லியது. வர்ட்யூஸை ஓட்ட அமிர்த்ஸர் வரை நம் டீமோடு போனேன்.

ஸ்லாவியாவின் ஒண்ணுவிட்ட…இல்லை ஒரே மாதிரி தம்பி கார்தான் வர்ட்யூஸ். ‘வென்ட்டோ என்னாச்சு’ என்று ‘உச்’ கொட்டுபவர்களுக்கு ‘நச்’ என ஒரு செடானை இறக்கியிருக்கிறது ஃபோக்ஸ்வாகன். அதுதான் வர்ட்யூஸ். வென்ட்டோவைவிட பெரிய அண்ணனாக, ஹோண்டா சிட்டி – ஹூண்டாய் வெர்னாவுக்குப் போட்டியாக, ஸ்லாவியாவின் ட்வின் ப்ரதராக வந்திருக்கும் வர்ட்யூஸ் எப்படி இருக்கு?

டிசைன்

ஃபோக்ஸ்வாகனின் ‘இந்தியா 2.0’ ப்ராஜெக்ட்டில் ரெடியாகி இருக்கும் 4–வது கார் வர்ட்யூஸ். 3D–ல் ஜொலிக்கும் ஃபோக்ஸ்வாகன் பேட்ஜையும், அந்த நீளமான ஸ்லிம்மான கிரில்லையும் தவிர்த்துவிட்டுப் பார்த்தால்… அப்படியே ஸ்லாவியாதான். ஸ்லாவியா கொஞ்சம் ஸ்போர்ட்டியாக இருந்தால்… இது கொஞ்சம் அமுக்க சடக்கமான பொண்ணாக/பையனாக இருக்கிறது. க்ரோம் வேலைப்பாடுகளில் ஸ்லாவியாவுக்கும் வர்ட்யூஸுக்கும் கொஞ்சம் வித்தியாசமும் காட்டியிருக்கிறார்கள். கதவைத் திறந்து மூடும்போது, ஜெட்டாவின் கட்டுமானம் தெரிகிறது வர்ட்யூஸில்.

இதன் டீட்டெயிலிங், கொஞ்சம் ப்ரீமியமாக இருப்பதால்… வர்ட்யூஸ் ப்ரீமியம் காராகவே ஜொலிக்கிறது. ‘எல்’ வடிவ எல்இடி ஸ்ட்ரிப்புகள் அப்படியே கிரில்லில் இணைவது அழகு. ஹெட்லைட்ஸும் ஸ்லிம்மாக நச்சென்று டிசைன் செய்திருக்கிறார்கள். பின் பக்கம் Blacked out டெயில் லைட்களும், கறுப்பு B பில்லர்களும், கறுப்பு ORVM-களும், 16 இன்ச் அலாய் வீல்களும் செம ஸ்போர்ட்டி. ஆனால், இந்தப் பெரிய செடானுக்கு 17 இன்ச் கொடுத்திருக்கலாம். GT மாடலுக்குக் கறுப்பு நிற அலாய் வீல்கள், பின் பக்கம் GT பேட்ஜ், மைக்ரோ பூட்– லிட் ஸ்பாய்லர் போன்றவை வித்தியாசம்.

இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 179 மிமீ. ஓகேதான். கான்ட்ராஸ்ட்டான இதன் ரூஃப் அருமை. ஓவர்ஆலாக எல்லோருக்கும் பிடிக்கும் இந்த வர்ட்யூஸ்.

சிட்டி, வெர்னாவுக்குக் கடும்போட்டி!
பெரிய வென்ட்டோவா ஃபோக்ஸ்வாகன் வர்ட்யூஸ்?


இன்டீரியர் மற்றும் வசதிகள்

உங்களுக்கு டிகுவானின் இன்டீரியர் பரிச்சயம் என்றால், வர்ட்யூஸின் இன்டீரியரைப் பார்த்துப் பிரமிப்பாக இருக்காது. ஃபோக்ஸ்வாகனின் உள்பக்கத் தரம், நல்ல தரமான மெட்டீரியல்களில் செய்திருக்கிறார்கள். டேஷ்போர்டு சென்டர் கன்சோலுக்கு அந்தச் சிவப்பு நிற ட்ரிம் வேலைப்பாடு ஸ்போர்ட்டி! இதுவும் 1.5TSI -ல் மட்டும்தான்.

எனக்கு வர்ட்யூஸில் மிகவும் பிடித்தது, அந்த இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல். அதற்கு ஒரு சில்வர் வேலைப்பாடு கொடுத்திருக்கிறார்கள்; அதுவும் அருமை. அதற்குள்ளே டிஜிட்டலுக்குள்ளே அனலாக் ஸ்டைல் டயல்கள் அருமை.

ஸ்லாவியாவுக்கும் இதற்கும் சில சின்னச் சின்ன வித்தியாசங்கள் கண்டுபிடிக்க முடிந்தது. முக்கியமாக, அந்த புஷ் பட்டன் ஸடார்ட். ஸ்கோடாவில் ஸ்டீயரிங் காலம் பின்னே இருக்கும். வர்ட்யூஸில், சென்டர் கன்சோலில், கியர் லீவருக்குக் கொஞ்சம் மேலே பொசிஷன் செய்திருக்கிறார்கள். ஸ்கோடாவில் லாக்/அன்லாக் பட்டனை சென்டர் கன்சோலில் வைத்திருந்தால்… இதில் டோர் ஹேண்டிலுக்கு அடுத்து வைத்திருக்கிறார்கள்.

டச் ஸ்க்ரீன் பார்ப்பதற்கே ப்ரீமியமாக இருக்கிறது. சாஃப்ட் டச்சாக இருந்தது. இதிலும் கனெக்டட் வசதிகள் உண்டு. ஒயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உண்டு. பிராக்டிக்கலாகவும் வர்ட்யூஸின் இன்டீரியர் கலக்குகிறது. அங்கங்கே வாட்டர் பாட்டில்கள் வைக்க இடம், ஏகப்பட்ட யுஎஸ்பி ஸ்லாட்கள், கூல்டு க்ளோவ் பாக்ஸ், முழங்கைக்குக் கீழும் ஒரு பாக்ஸ் என்று பயன்பாட்டில் பக்கா!

சீட்கள்

சீட்டில் உட்கார்ந்து, அந்த ஃப்ளாட் பாட்டம் ஸ்டீயரிங் வீலைப் பிடிப்பதற்கே ஆசையாக இருக்கிறது. வென்டிலேட்டட் சீட்கள் கொடுக்காமல் இருந்திருந்தால் ஃபோக்ஸ்வாகனுக்குக் கண்டனங்கள் விழுந்திருக்கும். கூல்டு சீட்ஸ் அருமை. கம்ஃபர்ட் ஆகவும், சப்போர்ட்டிவ் ஆகவும் இருக்கின்றன முன் பக்க சீட்கள். இதில் டிரைவர் சீட்டை ஃப்ளோர் வரை இறக்கிக் கொள்ளலாம். சன்ரூஃப் வேறு கேபினை வெளிச்சமாகக் காட்டுகிறது. செடானாக இருந்தபோதிலும், வெளிப்பக்க விஸிபிலிட்டி பக்கா!

பின் பக்க சீட்களைப் பொருத்தவரையும் நல்ல சொகுசாகவே இருக்கிறது. இதை ஒரு சாஃபர்டிரைவன் கார் ஆகப் பயன்படுத்தினால்… ஓனர்கள் சொகுசாக வரலாம். ஸ்லாவியா மாதிரியே லெக்ரூம் தாராளம். காரணம், இதன் வீல்பேஸ் அதே 2,651 மிமீ. ஆனால், சீட்கள் அகலமாக இல்லாததால், கொஞ்சம் தடிமனான 3 பேர் அமர்ந்து வருவது வர்ட்யூஸில், கொஞ்சம் சிக்கல்தான். அதேநேரம், 3 பாயின்ட் சீட் பெல்ட்டும், 3 ஹெட்ரெஸ்ட்டும் இருந்தன. 2 பேர் என்றால், நடுவில் ஆர்ம்ரெஸ்ட்டை இறக்கிவிட்டு ஜம்மென்று பயணிக்கலாம்.

இந்த நேரத்தில் வென்ட்டோவில் உள்ள ஒரு வசதியை மிஸ் செய்தேன். வென்ட்டோவில் பின் பக்கப் பயணிகளிடம் ஒரு லீவர் இருக்கும். அதை வைத்து முன் பக்கப் பயணிகளை ஃபார்வேர்டில் தள்ளிக் கொள்ளலாம். வர்ட்யூஸில் அந்த வசதி மிஸ்ஸிங்.

இதன் பூட் வசதி 521 லிட்டர். ஸ்கோடா, ஃபோக்ஸ்வாகன் கார்களில் இதை அடித்துக் கொள்ள முடியாது.

சிட்டி, வெர்னாவுக்குக் கடும்போட்டி!
பெரிய வென்ட்டோவா ஃபோக்ஸ்வாகன் வர்ட்யூஸ்?
அப்படியே டிகுவானின் இன்டீரியரைப் பார்ப்பதுபோலவே இருக்கிறது. புஷ் ஸ்டார்ட் பட்டனை, கியர் லீவருக்குப் பக்கத்தில் வைத்திருக்கிறார்கள். இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் டிசைன் அருமை. முன்பக்கம் கூல்டு சீட்டில் உட்கார்ந்து ஸ்டீயரிங் பிடித்தால், விஸிபிலிட்டி நன்றாகவே கிடைக்கிறது.
அப்படியே டிகுவானின் இன்டீரியரைப் பார்ப்பதுபோலவே இருக்கிறது. புஷ் ஸ்டார்ட் பட்டனை, கியர் லீவருக்குப் பக்கத்தில் வைத்திருக்கிறார்கள். இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் டிசைன் அருமை. முன்பக்கம் கூல்டு சீட்டில் உட்கார்ந்து ஸ்டீயரிங் பிடித்தால், விஸிபிலிட்டி நன்றாகவே கிடைக்கிறது.
3 ஹெட்ரெஸ்ட் இருந்தாலும், தடிமனான 3 பேர் பயணிப்பது சிரமம்.
3 ஹெட்ரெஸ்ட் இருந்தாலும், தடிமனான 3 பேர் பயணிப்பது சிரமம்.
சிட்டி, வெர்னாவுக்குக் கடும்போட்டி!
பெரிய வென்ட்டோவா ஃபோக்ஸ்வாகன் வர்ட்யூஸ்?


3 இன்ஜின்; 3 கியர்பாக்ஸ்… ஆனால்?

அமிர்தசரஸில் இருந்து வாகா பார்டர் வரை வர்ட்யூஸை வெரைட்டியான டெரெய்ன்களில் ஓட்டினோம். குறுகலான சாலை, டிராஃபிக், கானல் நீர் ஹைவேஸ் என்று வாகா வரை வாகாகவே இருந்தது வர்ட்யூஸ்.

ஸ்லாவியாவைப் போலவே இதிலும் 3 விதமான இன்ஜின்களும், 3 விதமான கியர்பாக்ஸ்களும் இருக்கின்றன. 1.0TSI மற்றும் 1.5TSI டர்போ பெட்ரோல் என எல்லாமே பெட்ரோல்தான். ஆட்டோமேட்டிக்கிலேயே வெரைட்டி காட்டுகிறது வர்ட்யூஸ். 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் மற்றும் 7 ஸ்பீடு DCT ட்ரான்ஸ்மிஷன். இத்தனை வெரைட்டி காட்டியும் டீசல் இன்ஜினை மட்டும் ஏன் கண்டுகொள்ளவில்லை ஃபோக்ஸ்வாகன் என்று தெரியவில்லை.

முதலில் 1.0TSI–க்கு வரலாம். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் என்றால், இந்த 1.0TSI–ல் மட்டும்தான். அப்படியே ஸ்லாவியாவை ஓட்டுவதுபோல்தான் இருக்கிறது. என்னைக் கேட்டால், சிட்டிக்கு இந்த மேனுவலை ஓகே செய்வேன். இதன் லைட் வெயிட் க்ளட்ச்சும், ஸ்மூத்னெஸ்ஸான கியர்பாக்ஸும் ஆசையாக இருக்கிறது காரை ஓட்ட.

1.0TSI ஆட்டோமேட்டிக்குக்கு வரலாம். இது டைகூன் மற்றும் குஷாக்கில் இருப்பதுதான். எஸ்யூவியின் இன்ஜினை செடானுக்குப் பொருத்தியிருப்பதால், வர்ட்யூஸின் எடைக்கு ஏற்ப இதை காலிபரேட் செய்துள்ளார்கள். இதன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ், அப்படியே மின்னல் போலெல்லாம் மாறவில்லை. கொஞ்சம் ‘பாஸ்’ விட்டுத்தான் டவுன்ஷிஃப்ட் ஆகிறது. ஆனால், இது சிட்டிக்குள் ஓட்டுவதற்குப் பெரிய குறையாகத் தெரியவில்லை. சொல்லப்போனால், ஜாலியாகவே இருக்கிறது. யாருமே இல்லாத ஹைவேஸிலும்தான். ‘சின்ன இன்ஜினாக இருந்தாலும் நல்லா இருக்குடா’ என்பதுபோல் இதுவும் ஃபன் டு டிரைவை வழங்குகிறது. இதற்கு இன்னொரு காரணம், இதிலுள்ள பேடில் ஷிஃப்டர்கள். மேனுவலாக ஓட்ட ஸ்போர்ட்டியாக இருக்கிறது. சிட்டிக்குள் சில நேரங்களில், அதாவது குறைவான நேரங்களில்… ‘ஹலோ… நான் 3 சிலிண்டர்தான் பார்த்து மிதிங்க’ என்பதுபோல், கொஞ்சம் வைப்ரேஷன்களும், சத்தமும் தெரிகின்றன. ஹைவேஸில் ரெட்லைனை நெருங்கும்போதும் இதே அலறல். டர்போ லேக்கும் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. சிட்டிக்குள் ஓட்ட, என்னுடைய சாய்ஸ், இந்த 1.0TSI – 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர்.

அடுத்து, 1.5TSI. உங்களுக்கு டிரைவிங்கில் ஒரு பன்ச் வேண்டும் என்றால், இருக்கவே இருக்கு பெரிய 1,498 சிசி இன்ஜின். இந்த 1,275 கிலோ எடை கொண்ட செடானுக்கு 3 சிலிண்டர் கொண்ட 1.0லிட்டரே பக்காவாக இருக்கிறது என்றால், 4 சிலிண்டர்கள் கொண்ட 1.5 லிட்டர் எப்படி இருக்கும்! இதன் பவர் 150bhp. பறக்கிறது. அதிலும் அந்த 7 ஸ்பீடு டூயல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக், வேற லெவல் டிரைவிங் ரகம். எனினும், இந்த கியரிலும் லேசான ’பாஸ்’ இருப்பதுபோல் தெரிந்தாலும், பெரிய குறையாகத் தெரியவில்லை. ‘போதும் போதும்’ என்கிற அளவுக்கு பவரையும் பெர்ஃபாமன்ஸையும் வாரி வழங்குகிறது. ஒரு லீனியரான மேனரில் இது பவரை டெலிவரி செய்யும் விதம் அற்புதம். கியர் லீவரை D மோடுக்குத் தள்ளி, ஆக்ஸிலரேட்டர் மிதித்தால்… என்னைப் பின்னே தள்ளி வர்ட்யூஸ் முன்னே செல்கிறது. ஒரு அவசரமான உதாரணம் சொல்கிறேன். நீங்கள் ஒரு அவசர பார்ட்டி… சட் சட் என்று ஓவர்டேக் செய்து போக விரும்புபவர் என்றால்… இந்த 1.5லி, 7 ஸ்பீடு டிசிடி… சூப்பராக இருக்கும். இதை நான் சிட்டிக்குள்ளும் முயற்சித்துப் பார்த்தேன். ஹைவேஸிலும் முயற்சித்தேன். அருமை!

இப்போதுள்ள ஃபோக்ஸ்வாகன் குழும கார்களில், அந்த சிலிண்டர் டி–ஆக்டிவேஷன் தொழில்நுட்பம்தான் பேசப்படுகிற ஒரு விஷயம். தேவையில்லாத நேரங்களில், 2 சிலிண்டர்கள் ஆஃப் ஆகிக் கொள்ளும். உதாரணத்துக்கு, யாரையாவது பிக்–அப் செய்ய நிற்கும்போது, சிக்னலில் ஐடிலிங்கில் உறுமும்போது என்று இந்த மாதிரியான நேரங்களில் 2 சிலிண்டர்கள் மட்டும்தான் வேலை செய்வதால், மைலேஜும் அதிகரிக்கும். இதை நீங்கள் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலில் பார்த்துக் கொள்ளலாம். மேலும், ஸ்டார்ட்/ஸ்டாப் தொழில்நுட்பமும் மைலேஜுக்குக் கைகொடுக்கிறது.

இது மாதிரியான ஸ்போர்ட்டி கார்களை பேடில் ஷிஃப்ட்டர் பயன்படுத்தி ஓட்டிப் பாருங்கள். ஃபன் டு டிரைவ் இன்னும் கூடும். இதன் 179 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ்… ஸ்பீடு பிரேக்கர்களை நன்றாகவே சமாளிக்கிறது. அதிவேகங்களில் நிலைத்தன்மையாக இருந்து நம்பிக்கை தருகிறது இதன் டைனமிக் லெவல். ஆனால், பிரேக்ஸ் மட்டும் பின் பக்கம் டிரம்தான் கொடுத்திருந்தார்கள்.

ஒரு விஷயம் தோன்றுகிறது. கார்னரிங்கில் சட் சட்னு புகுந்து போவதற்கு, 1.0 TSI, இன்னும் பிரமாதமாக இருக்கிறதோ என்று தோன்றியது.

சிட்டி, வெர்னாவுக்குக் கடும்போட்டி!
பெரிய வென்ட்டோவா ஃபோக்ஸ்வாகன் வர்ட்யூஸ்?

வர்ட்யூஸ் வாங்கலாமா?

கட்டுமானம்தான் ஃபோக்ஸ்வாகன் கார்களின் பெரிய பலம். சிட்டி, வெர்னா கார்களை ஒப்பிடும்போது, இதன் கி.கிளியரன்ஸும் பக்காவாக இருக்கிறது. இன்டீரியர், வசதிகள், 1.0லி., 1.5லி, 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர், 7 ஸ்பீடு டிசிடி என வெரைட்டியான ஆப்ஷன்களுடன் வந்திருப்பதால், வாடிக்கையாளர்களுக்குத் தேர்வு செய்து கொள்ளும் வசதியில் முன்னே நிற்கிறது வர்ட்யூஸ். டீசல் வேணும் என்பவர்கள், ஃபோக்ஸ்வாகன் ஷோரூம் பக்கம் ஒதுங்கக் கூட முடியாது என்பதுதான் சோகம். இதன் விலையை 12 – 18 லட்சத்துக்குள் பொசிஷன் செய்தால், ஒரு வெல் பேக்கேஜ்டு காராக வர்ட்யூஸ், ஒரு பெரிய வென்ட்டோ வாங்க விரும்பும் வாடிக்கையாளரைத் திருப்திப்படுத்தும்.

கிரவுண்ட் கிளியரன்ஸ் 179 மிமீ...
கிரவுண்ட் கிளியரன்ஸ் 179 மிமீ...
சிட்டி, வெர்னாவுக்குக் கடும்போட்டி!
பெரிய வென்ட்டோவா ஃபோக்ஸ்வாகன் வர்ட்யூஸ்?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism