கார்ஸ்
Published:Updated:

நானும் வர்றேன் மேனுவல் போட்டிக்கு! - வர்ட்யூஸில் புது வரவு!

ஃபோக்ஸ்வாகன் வர்ட்யூஸ் MT
பிரீமியம் ஸ்டோரி
News
ஃபோக்ஸ்வாகன் வர்ட்யூஸ் MT

அறிமுகம்: ஃபோக்ஸ்வாகன் வர்ட்யூஸ் MT

 நானும் வர்றேன் மேனுவல் போட்டிக்கு!  - வர்ட்யூஸில் புது வரவு!

டர்போ இன்ஜின் கொண்ட ஆட்டோமேட்டிக் கார்களைவிட, மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட கார்களுக்குத் தனியாக ரசிகர்கள் உண்டு. அவர்களைக் குறிவைத்துத்தான் ஃபோக்ஸ்வாகன் வர்ட்யூஸ் தனது 1.5 லிட்டர் TSI டர்போ மாடலில் MT வேரியன்ட்டை அறிமுகப்படுத்தி இருக்கிறது. வர்ட்யூஸ் 1 லிட்டர் மாடலில் ஏற்கனவே MT வேரியன்ட் இருந்தாலும், இந்த 1.5 லிட்டர் TSI டர்போ இன்ஜின் கொண்ட மாடலில்தான் அதன் ரசிகர்கள் மேனுவல் வேரியன்ட்டை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். விலை குறைந்த GTயில் இந்த MT வசதியை கொடுக்காமல், விலை உயர்ந்த GT Plus-ல் MTயைக் கொடுத்திருக்கிறார்கள் என்பது சிலருக்குக் குறையாக இருக்கலாம்.

ஃபோக்ஸ்வாகன் இந்த மேனுவல் வேரியன்ட்டை இப்போது களம் இறக்க இன்னொரு முக்கியக் காரணம், இதன் போட்டிக் காரான ஸ்கோடா ஸ்லாவியாவின் டர்போ மாடலில் இந்த மேனுவல் வேரியன்ட் உள்ளது. இன்னொரு போட்டிக் காரான ஹூண்டாய் வெர்னாவின் டர்போ மாடலிலும் இருக்கிறது.

ஆனாலும், இதில் வர்ட்யூஸுக்குச் சாதகமான விஷயம் என்னவென்றால், வரும் ஜூன் மாதம் அறிவிக்கப்பட இருக்கும், இந்த MT வேரியன்ட்டின் விலை நிச்சயமாக ஸ்கோடா ஸ்லாவியாவுடன் போட்டி போடும் வகையில்தான் இருக்கும். அதுமட்டுமல்ல, வாடிக்கையாளர்களைத் தொடர்ந்து உற்சாகமாக வைத்துக் கொள்ள ஃபோக்ஸ்வாகன் ஸ்பெஷல் எடிஷன் கொண்டு வரவும் உள்ளது. அதனால் Deep Black Pearl மற்றும் புதிய Lava Blue என்று புதிய கலர் ஆப்ஷன்ஸும் வாடிக்கை யாளர்களுக்குக் கிடைக்கும்.

இந்த மேனுவல் வேரியன்ட்டில் வழக்கம் போல கிரில்லில் GT என்ற எழுத்துக்கள் மின்னும். 16 இன்ச் அலாய் வீல்களில் சிகப்பு நிற ரெட் கேலிப்பர்ஸ் கம்பீரத்தைக் கூட்டும். எலெக்ட்ரிக் சன் ரூஃப், டூயல் டோன் பாடி கலர் ஆகியவை கவரும் படியாக இருக்கும்.

காரின் உள்ளே 10 இன்ச் கொண்ட என்டர்டெய்ன்மென்ட் ஸ்க்ரீன், 8 இன்ச் கொண்ட இன்ஸ்ட்ரூ மென்ட் க்ளஸ்ட்டர், முதல் வரிசையில் வென்டிலேடட் சீட்ஸ் ஆகியவை இருக்கும்.

அனைத்துக்கும் மேலாக பாதுகாப்பில் அதாவது குளோபல் NCAP-ல் இது ஐந்து நட்சத்திரம் வாங்கிய கார் என்பது இதன் கூடுதல் பலமாக இருக்கும்.