Published:Updated:

மசாஜ் சீட், ஏர் சஸ்பென்ஷன், மைல்டு ஹைபிரிட்... புது வால்வோவில் என்ன ஸ்பெஷல்?

ஃபர்ஸ்ட் லுக்: வால்வோ S90, XC60

பிரீமியம் ஸ்டோரி

S90 மற்றும் XC60 மாடல்களின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன்களை கடந்த மாதம் வெளியிட்டுள்ளது வால்வோ. S90-யின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனைக் கடந்த வருடமும், XC60-யின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை இந்த ஆண்டின் தொடக்கத்திலும் அறிமுகப்படுத்தியிருந்தது வால்வோ. கொஞ்சம் காஸ்மெட்டிக் மாற்றங்கள், கொஞ்சம் புதிய வசதிகளோடு பெரிய மாற்றமாக இன்ஜினைக் கொடுத்து மொத்தமாக மாற்றியிருக்கிறது வால்வோ. இரண்டு மாடல்களிலுமே டாப்-எண்ட் வேரியன்ட்டான B5 இன்ஸ்கிரிப்ஷன் மட்டும் தற்போது வெளியாகியிருக்கிறது. என்னென்ன மாற்றங்களுடன் வெளியாகியிருக்கின்றன S90 மற்றும் XC60? பார்க்கலாம்.

டிசைன்:

டிசைனைப் பொருத்தவரை இரண்டு கார்களின் முன்பக்கமும் பின்பக்கமும் சின்னச் சின்ன மாற்றங்களே செய்யப்பட்டிருக்கின்றன. கவனிக்கத்தக்க மாற்றமாக வெர்டிக்கல் ஸ்லாட்கள் மற்றும் நடுவில் வால்வோ சின்னத்துடன் புதிய கிரில்லைப் பெறுகிறது S90 செடான். அதோடு க்ரோம் ஸ்ட்ரிப்புடன் மறுவேலைப்பாடு செய்யப்பட்ட பம்பர்களையும் பெறுகிறது S90. முன்பக்க பம்பரைப் போலவே பின்பக்க பம்பரிலும் க்ரோம் ஸ்ட்ரிப்பைச் சேர்த்திருக்கிறது வால்வோ.

டிசைன், இன்ஜின் என எல்லாவற்றிலும் இரண்டு கார்களிலும் ஒரே மாதிரியான அப்டேட்டையே செய்திருக்கிறது வால்வோ. S90-ல் செய்யப்பட்டது போலான மாற்றங்களையே XC60-யும் பெறுகிறது. புதிய கிரில், க்ரோம் ஸ்ட்ரிப்புடன் மறுவேலைப் பாடு செய்யப்பட்ட முன்பக்க பம்பர்கள்; க்ரோம் ஸ்ட்ரிப்புடன் கூடிய பின்பக்க பம்பர்கள். மேலும், இரு மாடல்களிலும் டெய்ல் பைப்பை மறைத்திருக்கிறது வால்வோ.

மசாஜ் சீட், ஏர் சஸ்பென்ஷன், மைல்டு ஹைபிரிட்... 
புது வால்வோவில் என்ன ஸ்பெஷல்?
மசாஜ் சீட், ஏர் சஸ்பென்ஷன், மைல்டு ஹைபிரிட்... 
புது வால்வோவில் என்ன ஸ்பெஷல்?

வசதிகள்:

இரண்டு மாடல்களிலும் அட்வான்ஸ்டு ஏர் க்ளீனர் சிஸ்டத்தைக் கொடுத்திருக்கிறது வால்வோ. கேபினுள் இருக்கும் காற்றைச் சுத்தமாக வைத்துக் கொள்வது இதன் வேலை. மேலும், கேபினுக்குள் இருக்கும் காற்றின் தரத்தை டிஸ்ப்ளேயிலும் காட்டிக் கொண்டே இருக்குமாம். ஸ்மார்ட்போன் போன்ற அனுபவத்தைக் கொடுப்பதற்காக கூகுள் பவர்டு அசிஸ்டன்ட்டை இன்பில்ட்டாகவே இன்ஃபோடெய்ன் மென்ட் சிஸ்டத்தில் கொடுத்திருக்கிறது வால்வோ. அதோடு, பாதுகாப்புக்காக வால்வோ Blind Spot Information System வசதியும் கொடுக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறது வால்வோ.

மற்ற வசதிகளாக S90-ல் 360 டிகிரி கேமரா, அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், 1,400W போவர்ஸ் மற்றும் வில்கின்ஸ் ஆடியோ சிஸ்டம், மசாஜிங் முன்பக்க சீட்கள் மற்றும் ஏர் சஸ்பென்ஷன் ஆகிய வசதிகளைக் கொடுத்திருக்கிறது வால்வோ.

XC60-யோ அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், 1,100W போவர்ஸ் மற்றும் வில்கின்ஸ் ஆடியோ சிஸ்டம் ஆகிய சில வசதிகளை மட்டுமே பெறுகிறது.

இன்ஜின்:

இந்த ஃபேஸ்லிஃப்ட் மாற்றத்தின் முக்கிய அம்சமாகப் பார்க்கப்படுவது இரண்டு மாடல்களின் இன்ஜின் மாற்றம்தான். முன்னர் விற்பனையாகி வந்த S90-யில் 190hp பவரை வெளிப்படுத்தும், 2 லிட்டர் D4 டீசல் இன்ஜினும், XC60-யில் 235hp பவரை வெளிப்படுத்தக்கூடிய, 2 லிட்டர் D5 டீசல் இன்ஜினும் பயன்படுத்தப்பட்டு வந்தது.

ஆனால், தற்போது வெளியாகியிருக்கும் அப்டேட் செய்யப்பட்ட மாடல்களில் மைல்டு-ஹைபிரிட் பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இரண்டு மாடல்களிலும் 250hp பவர் மற்றும் 350Nm டார்க்கை வெளிப்படுத்தும் நான்கு சிலிண்டர் கொண்ட, 2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதோடு 48V Integrated starter generator மோட்டாரும் புதிய மாடல்களில் இணைக்கப்பட்டிருக்கிறது. இதனால்தான் இதனை மைல்டு-ஹைபிரிட் என அழைக்கிறது வால்வோ. இரண்டு மாடல்களிலும் 8 ஸ்பீடு கியர்பாக்ஸ் ஸ்டாண்டர்டாகவே கொடுக்கப்பட்டி ருக்கிறது. மிட்-சைஸ் எஸ்யூவி மாடலான XC60 மட்டும் எக்ஸ்ட்ராவாக ஆல் வீல் டிரைவாக வருகிறது.

விலை:

வால்வோ S90 மற்றும் XC60 இரண்டுமே ஒரே விலையில் 61.90 லட்சம் ரூபாய் எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியாகியிருக்கிறது.S90-க்குப் போட்டியாக மெர்சிடீஸ் பென்ஸ் E க்ளாஸ், பிஎம்டபிள்யூ 5 சீரிஸ், ஆடி A6 மற்றும் ஜாகுவார் XF ஆகிய கார்கள் மார்க்கெட்டில் இருக்கின்றன.

அதேபோல மிட்-சைஸ் லக்ஸூரி எஸ்யூவியான XC90-க்குப் போட்டியாக மெர்சிடீஸ் பென்ஸ் GLC, பிஎம்டபிள்யூ X3 மற்றும் அடுத்த மாதம் வெளியாகவுள்ள ஆடி A5 ஃபேஸ்லிஃப்ட் ஆகிய கார்கள் மார்க்கெட்டில் இருக்கின்றன.

போட்டியாளர்களைச் சமாளிக்குமா இந்தப் புதிய இன்ஜின்களோடு வெளியாகியிருக்கும் புதிய மாடல்கள்? பொறுத்திருந்து பார்ப்போம்.

மசாஜ் சீட், ஏர் சஸ்பென்ஷன், மைல்டு ஹைபிரிட்... 
புது வால்வோவில் என்ன ஸ்பெஷல்?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு