Published:Updated:

பாதுகாப்பில் பட்டையைக் கிளப்பும் அதிபர்களின் கார்கள்!

அதிபர்களின் கார்கள்
பிரீமியம் ஸ்டோரி
அதிபர்களின் கார்கள்

அப்படி இந்தியா முதல் கொரிய அதிபர்கள் வரை யார் எந்த காரில் பாதுகாப்பாய் வலம் வர்றாங்கனு பார்க்கலாம்!

பாதுகாப்பில் பட்டையைக் கிளப்பும் அதிபர்களின் கார்கள்!

அப்படி இந்தியா முதல் கொரிய அதிபர்கள் வரை யார் எந்த காரில் பாதுகாப்பாய் வலம் வர்றாங்கனு பார்க்கலாம்!

Published:Updated:
அதிபர்களின் கார்கள்
பிரீமியம் ஸ்டோரி
அதிபர்களின் கார்கள்

பொதுவாக – அரசியல் ஜயன்ட்கள் சாதாரண காரையெல்லாம் பயன்படுத்த மாட்டார்கள். அப்படியே பயன்படுத்தினாலும் அந்தக் காரை லிமோசின் டைப் ஆக்கி, புல்லட் புரூஃப் ஆக்கி, பாதுகாப்பின் ஜயன்ட் ஆக்கி… என்று பல கோடிகளுக்குக் கொண்டு வந்து நிறுத்தி விடுவார்கள்.அப்படித்தான் பிரதமர் மோடியின் மெர்சிடீஸ் பென்ஸ் மேபேக்கும். மோடியின் பென்ஸ் மேபேக்தான், போன மாதம் பிரதமரைவிட ட்ரெண்டிங்கில் இருந்தது. ஒரு நாட்டின் பிரதமரின் பாதுகாப்பைக் கருதி, அவர் எந்த காரில் பயணிக்க வேண்டும் என்பதை அந்தந்த நாட்டின் ‘ஸ்பெஷல் ப்ரொட்டக்ஷன் குரூப்’ (SPG) கான்வாய் அதிகாரிகள்தான் முடிவு செய்வார்கள். இது ஒவ்வொரு நாட்டுக்கும் வேறுபடும். அப்படி இந்தியா முதல் கொரிய அதிபர்கள் வரை யார் எந்த காரில் பாதுகாப்பாய் வலம் வர்றாங்கனு பார்க்கலாம்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி
மெர்டிசிடீஸ் மேபேக் S650
மெர்டிசிடீஸ் மேபேக் S650


இந்தியப் பிரதமர் மோடி

மாடல்: மெர்டிசிடீஸ் மேபேக் S650 (Mercedes-Maybac S650) தயாரிப்பு: ஜெர்மனி

விலை: 12 கோடி ரூபாய்

இன்ஜின்: ட்வின் டர்போ V12 பெட்ரோல், 5,980 சிசி

டாப் ஸ்பீடு: 200 கிமீ

ஸ்பெஷல்:

இந்த காரின் மீது குண்டு வெடித்தாலும், அல்லது தோட்டா மழை பொழிந்தாலும், காரின் உள்ளே இருப்பவர்களுக்குச் சிறு அதிர்வுகூடத் தெரியாது. இந்த காரைப் போலவே காரின் டயர்களும் உறுதியானவை. எக்காரணத்தினாலும் பஞ்சர் ஏற்படாது. இந்த காரின் எரிபொருள் டேங்குக்கு ஒரு சிறப்பு மூலப்பொருளால் ‘கோட்டிங்’ கொடுக்கப்பட்டுள்ளதால், எரிபொருள் கசிவு, வெடிப்பு போன்றவை ஏற்படாது!

பிரதமர் மோடி குஜராத்தின் முதல் அமைச்சராக இருந்தபோது, புல்லட் ப்ரூஃப் மஹிந்திரா ஸ்கார்ப்பியோவைத்தான் பயன்படுத்தி வந்தார். தான் பிரதமராகப் பதவி ஏற்க வரும்போது, அதே காரில்தான் பயணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விளாடிமிர் புதின்
விளாடிமிர் புதின்
ஆரஸ் செனட் லிமோசின்
ஆரஸ் செனட் லிமோசின்

ரஷ்யப் பிரதமர் விளாடிமிர் புதின்

மாடல்: ஆரஸ் செனட் லிமோசின் (Aurus Senat)

தயாரிப்பு: NAMI - ரஷ்யா

விலை: 4 கோடி ரூபாய்

இன்ஜின்: ட்வின் டர்போ V12 பெட்ரோல், 4,440 சிசி

டாப் ஸ்பீடு: 250 கிமீ.

ஸ்பெஷல்:

இந்தக் காரைக் குண்டுகளாலும் தோட்டாக்களாலும் துளைக்க இயலாது. இந்த ஆரஸ், முற்றிலுமாக கடலில் மூழ்கினாலும் உள்ளே இருப்பவர் மீது சிறுதுளி நீர்க்கூடப் படாது. மூச்சுத் திணறலும் ஏற்படாது. தாக்குதல்களில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வசதியும் உள்ளது.

2010 –ம் ஆண்டு, விளாடிமிர் புதின், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பாதையில் மணிக்கு 200 கிமீ கேவத்தில் ரெனோ பார்முலா ஒன் காரை, தானே ஓட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோ பைடன்
ஜோ பைடன்
SOPA Images
கெடில்லாக்
கெடில்லாக்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

மாடல்: கெடில்லாக் (Cadillac)

தயாரிப்பு: ஜெனரல் மோட்டார் கம்பெனி - அமெரிக்கா

விலை: 2.8 கோடி ரூபாய்

இன்ஜின்: ட்வின் டர்போ V12 பெட்ரோல், 6,200 சிசி

டாப் ஸ்பீடு: 233 கிமீ

ஸ்பெஷல்:

இந்த கார் தானியங்கி இரவு கேமராக்கள், தானியங்கி தீயணைப்பு இயந்திரம், மற்றும் ஆக்ஸிஜன் அமைப்பு கொண்டது. மினி மிலிட்டரி கிடங்கே இருக்கிறது இந்த கெடில்லாக்கில். மேலும், எப்பொழுதும் இந்த காரில் ஜோ பைடனின் ரத்த வகை கையிருப்பாக இருக்குமாம். ஜோ பைடனின் இந்த கெடில்லாக்கை, பீஸ்ட் என்று அழைக்கிறார்கள். நிஜமாகவே இது பீஸ்ட்தான். ஆம், உலகத்திலேயே இந்த பீஸ்ட்தான் மிகவும் பாதுகாப்பானது என்று சொல்லப்படுகிறது.

ஜோ பைடன், மிகப் பெரிய கார் பிரியராம். மேலும், அவர் ஒரு கார் சேகரிப்பாளராம். இவரது தந்தை கார் டீலர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜின்பிங்
ஜின்பிங்
ஹாங்சி N501
ஹாங்சி N501

சீன அதிபர் ஜின்பிங்

மாடல்: ஹாங்சி N501 (Hangqi N501)

தயாரிப்பு: ஆட்டோமேக்கர் FAW கார் கம்பெனி - சீனா

விலை: 5 கோடி ரூபாய்

இன்ஜின்: ட்வின் டர்போ V8 பெட்ரோல், 3,988 சிசி

டாப் ஸ்பீடு: 190 கிமீ

ஸ்பெஷல்:

ஹாங்சி N501தான் சீனாவிலேயே மிக உயர்ந்த விலை கார். மேலும், இந்த காரை சீனாவின் பழைமையான கார் கம்பெனியான FAW எனும் நிறுவனம் வடிவமைத்துள்ளது. ஆடி A6L காரின் ப்ளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்டு, உயர்ந்த ரக பாதுகாப்போடு வடிவமைக்கப் பட்டுள்ளது. மேலும் எந்த ஒரு நெருப்பாலும், இந்த காரை நெருங்க இயலாது.

ஜின் பிங், எல்லாவற்றிலும் தனது நாடு பேசப்பட வேண்டும் என்று நினைப்பவர். தனது நாட்டில் தயாரிக்கப்படும் கார் தொழில்நுட்பத்திலும் தரத்திலும் மிக உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்ற முனைப்பு உடையவர். அதன் அடிப்படையில்தான் அவரது இந்த ஹாங்சி காரும் இருக்கிறதாம்.

வட கொரியா அதிபர் கிம் ஜாங்-உன்
வட கொரியா அதிபர் கிம் ஜாங்-உன்
மெர்சிடீஸ் மேபேக் S600
மெர்சிடீஸ் மேபேக் S600


வட கொரியா அதிபர் கிம் ஜாங்-உன்

மாடல்: மெர்சிடீஸ் மேபேக் S600 (Mercedes-Maybach S600)

தயாரிப்பு: மெர்சிடீஸ் பென்ஸ் - ஜெர்மனி

விலை: 3.75 கோடி ரூபாய்

இன்ஜின்: ட்வின் டர்போ V8 பெட்ரோல், 5,980 சிசி

டாப் ஸ்பீடு: 250 கிமீ

ஸ்பெஷல்:

இந்த காரை எந்தவித தாக்குதலாலும் தகர்க்க இயலாதபடி, புல்லட் ப்ரூஃப் கொண்டது. எரிவாயுத் தாக்குதல் நடந்தாலும், இதிலிருக்கும் அமைப்பு உடனடியாக விஷவாயுக்களை நீக்கிவிட்டு, தூய்மையான காற்றைப் பரப்பி விடுமாம். இதன் கோட்டிங்கே இதன் தனித்துவத்தைச் சொல்லும்.

மெர்சிடீஸ் பென்ஸ் கார் ஏற்றுமதி, வட கொரியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கிம் ஜாங்-உன், தற்போது வைத்திருக்கும் மெர்சிடீஸ் கார் எப்படி அவரைச் சென்றடைந்தது என்பது அந்த காரின் தயாரிப்பு நிறுவனத்துக்கே குழப்பமாக உள்ளதாம்! ஒவ்வொரு நாட்டின் தலைவர்களுக்கும், குறிப்பிட்ட கால இடைவேளையில் அவர்களுக்கான கார்கள் மாற்றப்பட்டுக் கொண்டே இருக்கும். நீங்கள் இதைப் படிக்கும்போது, அதிபர்கள் காரை மாற்றினால், கம்பெனி பொறுப்பல்ல…ஆமா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism