Published:Updated:

உலகின் வேகமான கார்கள்!

மேலும் புதிய 7 ஸ்பீடு டூயல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், Longer Ratio உண்டு.

பிரீமியம் ஸ்டோரி

விமானம்போல் பறந்தால் சூப்பர் கார்கள்; இதுவே ராக்கெட் வேகத்தில் பறந்தால் ஹைப்பர் கார்கள். வேகம்தான் ஹைப்பர் கார்களின் பிரதானமான அம்சம்! பல கோடி ரூபாய் மதிப்புமிக்க இவற்றின் திறனை அந்தந்த நிறுவனங்களே அறிவித்தாலும், ஒருவர் இதை அதிகபட்ச வேகம் வரை ஓட்டிப் பார்த்துவிட்டுக் கூறும் விபரங்களுக்கும் நிறையவே வித்தியாசப்படும். எனவே இந்தக் கட்டுரையில், ஹைப்பர் கார்கள் எட்டிய டாப் ஸ்பீடை அடிப்படையாகக் கொண்டே வரிசைப் படுத்தியிருக்கிறோம் (விளம்பரப்படுத்தப் படும் டாப் ஸ்பீடுக்கு இங்கே இடம் கிடையாது).

உலகின் வேகமான கார்கள்!

நிலவில் இயங்கும் வாட்ச், கடலுக்கடியே எழுதக்கூடிய பேனா போன்ற விநோதமான பொருள்களை வைத்திருப்பது சிலருக்கு ஹாபி என்றால், Kmph சாதனைகளை நிகழ்த்தக்கூடிய ஹைப்பர் கார்களை வாங்குவது சிலருக்குப் பிடித்தமான விஷயமாக இருக்கும். அப்படி தரையில் பறக்கும் சில ராக்கெட்களைப் பற்றிப் பார்க்கலாம்.

உலகின் வேகமான கார்கள்!

புகாட்டி கிரோன் சூப்பர் ஸ்போர்ட்

வேகப்போட்டியில் புகாட்டி வெல்லாவிட்டால் எப்படி? வெய்ரான் சூப்பர் ஸ்போர்ட் போல 30 கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்ட இதை, ஃபோக்ஸ்வாகன் குழுமத்தின் Ehra-Lessien டெஸ்ட் டிராக்கில் பிரிட்டிஷ் ஸ்போர்ட்ஸ்கார் ரேஸிங்கில் முன்னோடியான Andy Wallace டெஸ்ட் செய்தார். அப்போது 490.48 கி.மீ வேகம் வரை சென்ற இந்த காரில் இருக்கும் 8.0 லிட்டர் W16 Quad டர்போசார்ஜ்டு இன்ஜின், 1578bhp பவர் - 163kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. (இதற்கு Thor என்ற பட்டப் பெயர் உண்டு) வழக்கமான வெய்ரான் சூப்பர் ஸ்போர்ட் உடன் ஒப்பிட்டால், முன்பக்க - பின்பக்க பம்பர்கள் முன்பைவிட ஏரோடைனமிக்கான வடிவமைப்பைப் பெற்றிருந்தன. மேலும் புதிய 7 ஸ்பீடு டூயல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், Longer Ratio உண்டு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உலகின் வேகமான கார்கள்!

கொயினிக்செக் அஜேரா RS

டந்த 2017-ம் ஆண்டில் வாடிக்கையாளர் ஒருவரிடமிருந்து அஜேரா RS காரைப் பெற்று, ஸ்வீடனைச் சேர்ந்த Koenigsegg நிறுவனம் உலகளவில் வேகச்சாதனையை நிகழ்த்தியது. கூடவே பொதுமக்களுக்கான சாலையில் செல்லப்பட்ட அதிகபட்ச வேகம் என்ற பெருமையையும் சேர்ந்து கொண்டது ப்ளஸ் (447.07 கி.மீ). இதற்காக எந்த மாடிஃபிகேஷனும் இல்லாத அஜேரா RS காரில், ஆப்ஷனலாக வழங்கப்படும் 1MW இன்ஜின் பேக்கேஜ் மட்டும் சேர்க்கப்பட்டது. எனவே 1,379bhp பவர் - 138.25kgm டார்க்கை வெளிப்படுத்தும் 5.0 லிட்டர் ட்வின் டர்போ பெட்ரோல் இன்ஜின் - 7 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணி இருந்தது. கடந்த 1938-ம் ஆண்டு பலத்த மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட W125 GP கார், மூடப்பட்ட Autobahn சாலைகளில் 431 கி.மீ சென்றதே சாதனையாக இருந்தது.

உலகின் வேகமான கார்கள்!

ஹென்னிஸே வெனோம் GT

மெரிக்காவைச் சேர்ந்த டியூனிங் நிறுவனமான Hennessey Performance Engineering-க்கு, காரின் வேகத்தை ஏற்றுவது மிகவும் பிடித்த வேலை. டாட்ஜ் வைப்பரை அடிப்படையாகக் கொண்ட வெனோம் காரை 346 கி.மீ-க்கும் அதிகமான வேகத்தை எட்டும்படி மாற்றியமைத்தது தெரிந்ததே. அடுத்தபடியாக லோட்டஸ் எக்ஸீஜ் காரை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட வெனோம் GT காரை எடுத்துக்கொண்டு, கடந்த 2014-ம் ஆண்டு வேகப்போட்டியில் இறங்கியது. ஃப்ளோரிடாவில் இருக்கும் Kennedy Space Centre-ல் இருக்கும் 5.15 கி.மீ நீளமுள்ள ரன்வேயில் கார் டெஸ்ட் செய்யப்பட்டது. ஒரு திசையில் சென்றபோது 435.31 கி.மீ வேகம் வரை கார் சென்றது. ஆனால் பாதுகாப்புக் காரணங்களுக்காக, மறுதிசையில் காரை ஓட்டுவதற்கு நாசா அனுமதிக்கவில்லை. எனவே புகாட்டியை வீழ்த்தி கின்னஸ் சாதனையை நிகழ்த்தும் வாய்ப்பை இழந்துவிட்டது வெனோம் GT. இதிலிருந்த 7.0 லிட்டர் V8 ட்வின் டர்போ பெட்ரோல் இன்ஜின், 1244bhp பவர் - 159.68kgm டார்க்கைத் தந்தது. RWD அமைப்பைக் கொண்ட இந்த காரின் எடை 1,244 கிலோதான் என்பதால்,1bhp/1kg விகிதத்தில் Power To Weight Ratio இருந்தது.

உலகின் வேகமான கார்கள்!

புகாட்டி வெய்ரான் சூப்பர் ஸ்போர்ட்

வேகப்பட்டத்தைத் தன்னிடமிருந்து SSC Ultimate Aero தட்டிப் பறித்த கடுப்பில் இருந்த புகாட்டி, தனது வெய்ரான் காரில் ஓவர்டைம் பார்த்ததன் விளைவுதான் இது! குறைவான எண்ணிக்கையில் மட்டுமே (30 கார்கள்) தயாரிக்கப்பட்ட இந்த கார், வேகத்தை அதிகரிக்கும் ஒரே நோக்கில் வடிவமைக்கப்பட்டது. 1000bhp பவரைத் தந்த வெய்ரான், 402 கி.மீ வேகம் வரை சென்றது. இதுவே வெய்ரானின் சூப்பர் ஸ்போர்ட், 1200bhp பவரை வெளிப்படுத்தியது. 402 கி.மீ வேகத்துக்கு மேலே செல்லும்போது ஒத்துழைக்கும்படி, காரின் ஏரோடைனமிக்ஸில் மாற்றங்கள் செய்யப்பட்டன. கடந்த ஜூலை 2010-ல், புகாட்டியின் டெஸ்ட் டிரைவரான Pierre Henri Raphanel, வெய்ரான் சூப்பர் ஸ்போர்ட்டை Ehra-Lessien ஓவலில் டாப் ஸ்பீடு பரிசோதனை செய்தார் (431.07 கி.மீ).

உலகின் வேகமான கார்கள்!

SSC அல்ட்டிமேட் ஏரோ TT

ஷெல்பி சூப்பர் கார்ஸ் என்பதே SSC-ன் விரிவாக்கம். இந்த நிறுவனம்தான், ஏழாண்டு காலத்துக்கு அல்ட்டிமேட் ஏரோ காரைத் தயாரித்தது. இந்தக் குறுகிய காலத்திலேயே, இது வேகப்போட்டியில் புகாட்டியை வீழ்த்திவிட்டதுதான் பெரிய ட்விஸ்ட். மேலும் ஐரோப்பிய நிறுவனங்கள் ஆதிக்கத்தில் இருந்த வேகச் சாம்பியன்ஷிப்பை, இந்த அமெரிக்க நிறுவனம் தன்வசப்படுத்தியது! 1199bhp பவர் - 151.25kgm டார்க்கைத் தரும் 6.3 லிட்டர் ட்வின் டர்போ V8 பெட்ரோல் இன்ஜின் (Corvette C5-ல் இருந்த அதே இன்ஜின்) - 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கூட்டணி, அல்ட்டிமேட் ஏரோ TT காரை 412.15 கி.மீ வேகம் வரை அழைத்துச் சென்றது. வாஷிங்டனில் அமைந்திருந்த SSC நிறுவனத்தின் தலைமையிடம் அருகே இருந்த நீளமான 2 லேன் சாலையில் டாப் ஸ்பீடு டெஸ்ட் செய்யப்பட்டது. எடைக் குறைப்புக்காக, இதில் ஏபிஎஸ் - டிராக்‌ஷன் கன்ட்ரோல் என எந்தவிதமான பாதுகாப்பு அம்சங்களும் கிடையாது என்பதுதான் த்ரில்லிங்கான அம்சம்.

உலகின் வேகமான கார்கள்!

புகாட்டி வெய்ரான் 16.4

ந்த கார் வெளியானபோது, இதுதான் இருப்பதிலேயே காஸ்ட்லியான மற்றும் பவர்ஃபுல் கார். எனவே ஃபோக்ஸ்வாகன் குழுமம், உலகின் வேகமான காராக புகாட்டி வெய்ரான் இருக்க வேண்டும் என எண்ணியது. இதிலிருந்த 8.0 லிட்டர் Quad டர்போசார்ஜ்டு W16 பெட்ரோல் இன்ஜின், 1001bhp பவரை வெளிப்படுத்தியது. 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டம், இந்தச் செயல்திறனை 4 வீல்களுக்கும் பகிர்ந்தனுப்பியது. டாப் ஸ்பீடில் செல்வதற்கு ஏதுவாக, பிரத்யேகமான ஒரு சாவி பயன்படுத்தப்பட்டது. இந்த நேரத்தில் பின்பக்க ஸ்பாய்லர் ஆக்டிவேட் ஆகிவிடும். மேலும் முன்பக்க Air Diffuser மூடப்பட்டு விடுவதுடன், கிரவுண்ட் கிளியரன்ஸும் 6.5 செ.மீ-யாகக் குறைந்துவிடுகிறது. ஃபோக்ஸ்வாகனின் Ehra-Lessien டெஸ்ட் டிராக்கில் செலுத்தப்பட்டபோது, 408.45 கி.மீ வேகம் வரை சென்றது புகாட்டி வெய்ரான்.

உலகின் வேகமான கார்கள்!

கொயினிக்செக் CCR

மெக்லாரன் F1 காரின் தனி ஆவர்த்தனத்தை முறியடித்த பெருமைக்குச் சொந்தக்கா(ர)ர் இதுதான். கடந்த பிப்ரவரி 2005-ல், இத்தாலியில் இருக்கும் Nardo Ring டெஸ்ட் டிராக்கில் இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டது. 810bhp பவர் - 93.88kgm டார்க்கை வெளிப்படுத்தும் 4.7 லிட்டர் ட்வின் டர்போ V8 பெட்ரோல் இன்ஜின்- 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கூட்டணி இருந்தது. மெக்லாரன் F1 விட 1.61 கி.மீ அதிக வேகம் சென்ற கொயினிக்செக் CCR (388.01 கி.மீ) காரின் வெற்றிக் களிப்பு, நீண்ட நாள்கள் நீடிக்கவில்லை. இரு மாதங்களுக்குப் பிறகு, கார்களின் டாப் ஸ்பீடில் புகாட்டி வெய்ரான் புதியதோர் சாதனையைப் படைத்துவிட்டது தெரிந்ததே!

உலகின் வேகமான கார்கள்!

மெக்லாரன் F1

ஃபோக்ஸ்வாகனின் புகழ்பெற்ற Ehra-Lessien டெஸ்ட் டிராக்கில், வேகப்போட்டிக்கான அடிக்கல் நாட்டியது இந்த கார்தான். ரேஸிங்கில் கொடிகட்டிப் பறந்த பிரிட்டனைச் சேர்ந்த Andy Wallace, மார்ச் 1998-ல் மெக்லாரன் F1 காரை டெஸ்ட் செய்தார். இதற்காக காரில் எந்த மாடிஃபிகேஷனும் செய்யப்படவில்லை என்றாலும், இன்ஜினின் ரெட்லைன் 8,300rpm வரை உயர்த்தப்பட்டது. ஏனெனில், இதுவரை தயாரிக்கப்பட்ட எந்த மெக்லாரன் F1 காரும் 340 கி.மீ வேகத்தைத் தாண்டியதில்லை! உலகின் வேகமான Production கார் என்ற பெருமையை, 15 ஆண்டுகளாக இந்த பிரிட்டன் கார் தன்வசம் வைத்திருந்தது. கார்பன் ஃபைபர் கட்டுமானத்தை உலகுக்கு அறிமுகப்படுத்திய மெக்லாரன் F1, 3 சீட்களைக் கொண்டிருந்தது. மற்றபடி கார் ஓட்டுபவரைப் பொறுத்து, இன்றளவும் 356 கி.மீ வேகத்தை எட்டும் திறன், இதிலிருந்த 6.1 லிட்டர் BMW V12 இன்ஜினுக்கு உண்டு. 618bhp பவர் - 62.91kgm டார்க்கை வெளிப்படுத்தும் இது, 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருந்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு