Published:Updated:

“ஏன் நெக்ஸான் எலெக்ட்ரிக் வாங்கினேன் என்றால்..?” - ZOHO தலைவர் ஸ்ரீதர் வேம்பு பேட்டி

ஸ்ரீதர் வேம்பு
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீதர் வேம்பு

ராயல் என்ஃபீல்டு ஹெல்மெட்

“ஏன் நெக்ஸான் எலெக்ட்ரிக் வாங்கினேன் என்றால்..?” - ZOHO தலைவர் ஸ்ரீதர் வேம்பு பேட்டி

ராயல் என்ஃபீல்டு ஹெல்மெட்

Published:Updated:
ஸ்ரீதர் வேம்பு
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீதர் வேம்பு

தமிழ்நாட்டில் ஸ்ரீதர் வேம்புவைப் பற்றித் தெரியாதவர்கள் இருக்க முடியாது. சென்னையில் ஒரு குட்டி அபார்ட்மென்ட்டில் சிறிய மென்பொருள் மேம்பாட்டு நிறுவனமாகத் தொடங்கப்பட்டு, இன்று உலகளவில் முன்னணி நிறுவனங்களான கூகுள், மைக்ரோசாஃப்ட் மற்றும் சேல்ஸ்ஃபோர்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் ஓர் இந்திய நிறுவனத்தின் நிறுவனம் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு. டாடா நெக்ஸான் EV ஒன்றை வாங்கியிருப்பதாகக் கடந்த வாரம் ட்விட்டரில் அவர் போட்ட ஒரு ட்வீட்தான் ஆட்டோமொபைல் உலகில் செம வைரல். ``Zoho CEO எலெக்ட்ரிக் கார் ஒன்னை வாங்கியிருக்காரு, அதுவும் பட்ஜெட் காரை வாங்கியிருக்காரு” என எலெக்ட்ரிக் வாகன ஆர்வலர்களும் குஷியானார்கள். எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்த அவருடைய கருதுக்களைத் தெரிந்து கொள்ளவும், நெக்ஸான் அவருக்கும் என்னவிதமான அனுபவத்தைக் கொடுத்தது என அறிந்து கொள்ளவும், அவரை Zoom வீடியோ கான்ஃபரன்ஸிங் வழியாக நேர்காணல் செய்தது மோட்டார் விகடன்.

ஸ்ரீதர் வேம்பு
ஸ்ரீதர் வேம்பு

தமிழ்நாட்டில் ஸ்ரீதர் வேம்புவைப் பற்றித் தெரியாதவர்கள் இருக்க முடியாது. சென்னையில் ஒரு குட்டி அபார்ட்மென்ட்டில் சிறிய மென்பொருள் மேம்பாட்டு நிறுவனமாகத் தொடங்கப்பட்டு, இன்று உலகளவில் முன்னணி நிறுவனங்களான கூகுள், மைக்ரோசாஃப்ட் மற்றும் சேல்ஸ்ஃபோர்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் ஓர் இந்திய நிறுவனத்தின் நிறுவனம் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு. டாடா நெக்ஸான் EV ஒன்றை வாங்கியிருப்பதாகக் கடந்த வாரம் ட்விட்டரில் அவர் போட்ட ஒரு ட்வீட்தான் ஆட்டோமொபைல் உலகில் செம வைரல். ``Zoho CEO எலெக்ட்ரிக் கார் ஒன்னை வாங்கியிருக்காரு, அதுவும் பட்ஜெட் காரை வாங்கியிருக்காரு” என எலெக்ட்ரிக் வாகன ஆர்வலர்களும் குஷியானார்கள். எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்த அவருடைய கருதுக்களைத் தெரிந்து கொள்ளவும், நெக்ஸான் அவருக்கும் என்னவிதமான அனுபவத்தைக் கொடுத்தது என அறிந்து கொள்ளவும், அவரை Zoom வீடியோ கான்ஃபரன்ஸிங் வழியாக நேர்காணல் செய்தது மோட்டார் விகடன்.

ஸ்ரீதர் வேம்பு
ஸ்ரீதர் வேம்பு

எலெக்ட்ரிக் வாகனங்கள் மேல் உங்களுக்கு ஆர்வம் வரக் காரணம் என்ன, அதனைக் கொஞ்சம் பகிர்ந்து கொள்ள முடியுமா?

கடந்த சில வருடங்களாகவே எலெக்ட்ரிக் வாகனங்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் இருந்தது. கடந்த சில வருடங்கள் என்று சொல்வதைவிட எனக்குத் தொடக்கத்தில் இருந்தே எலெக்ட்ரிக் வாகனங்கள் மீது ஆர்வம் இருந்தது. பயன்படுத்துவதற்கு மட்டுமல்ல; வணிக ரீதியாக அதில் முதலீடு செய்வதற்கும் எனக்கு ஆர்வம் இருந்தது. ஏனெனில், எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாடு என்பது தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால், தற்போது தான் நம்முடைய பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. முக்கியமாக பேட்டரி தொழில்நுட்பம். இன்னும் 5 முதல் 10 வருடங்களில் போக்குவரத்துத் துறையே எலெக்ட்ரிக் மயமாகிவிடும். சாஃப்ட்வேர் துறையில் க்ள்வ்டு தொழில்நுட்பம் எப்படி ஒரு புரட்சியை ஏற்படுத்தியதோ, அது போல போக்குவரத்துத் துறைக்கு எலெக்ட்ரிக். இனி வரும் காலங்களில் தனிப்பட்ட போக்குவரத்து மட்டுமின்றி, லாரி, ட்ரக் மற்றும் ட்ராக்டர்கள் என அனைத்துமே எலெக்ட்ரிக் மயமாகிவிடும்.

புதிய நெக்ஸானுடன் ஸ்ரீதர் வேம்பு
புதிய நெக்ஸானுடன் ஸ்ரீதர் வேம்பு

குறிப்பாக நெக்ஸான் EV-யைத் தேர்ந்தெடுக்கக் காரணம் என்ன?

டாடா நெக்ஸான் EV-யை நான் தேர்ந்தெடுக்கக் காரணம், அது என்னுடைய விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் இருந்தது. எனக்குத் தேவையான டிரைவிங் ரேஞ்ச், பவர் எல்லாம் நெக்ஸான் EV-யில் இருந்தது. எனவே, அதனைத் தேர்ந்தெடுத்தேன். தனிப்பட்ட முறையில் நெக்ஸான் EV எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதன் வடிவமைப்பு, அதன் பெர்ஃபாமன்ஸ் எல்லாமே! பயன்படுத்துவதற்கும் நெக்ஸான் EV சிறப்பாக இருக்கிறது. டாடா பொறியாளர்கள் ஒரு சிறப்பான காரை வடிவமைத்திருக் கிறார்கள். இதில் க்ரெடிட் கொடுக்க வேண்டும் என்றால் அது டாடா பொறியாளர்களுக்குத்தான்.

நெக்ஸானில் பிடித்த மற்றும் பிடிக்காத இரண்டு விஷயங்கள்?

பிடித்த இரண்டு விஷயங்கள் என்றால், முதலில் பிக்அப். இரண்டாவது சத்தமே இல்லாமல் இருப்பது. இது காரை இயக்கும் போது சத்தம் இல்லாமல் இருப்பது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பிடிக்காத விஷயம் என்றால் ரேஞ்ச். 200 கிமீ ரேஞ்ச் என வரும்போது, கொஞ்சம் அதிக தூரம் சேர்த்து ஓட்டினாலும் பதற்றம் வந்துவிடும். ரேஞ்ச் கொஞ்சம் அதிகமாக இருந்தால், இன்னும் சிறப்பாக இருக்கும். அது இன்னும் கொஞ்சக் காலத்தில் வரப் போகிறது. இரண் டாவது எலெக்ட்ரிக் வாகனங்களைப் பொருத்த வரையிலேயே பேட்டரியின் வாழ்நாள் குறைவாக இருப்பது ஒரு நெகட்டிவ் அம்சம். நீண்ட நாள் உழைக்கக்கூடிய பேட்டரிக்களை உருவாக்க வேண்டும். அவ்வளவு தான்.

Zoho
Zoho

எலெக்ட்ரிக் வாகனங்களில் முதலீடு செய்யவும் ஆர்வம் இருந்தது எனக் கூறியிருந்தீர்கள், அது பற்றிக் கொஞ்சம் பகிர்ந்து கொள்ள முடியுமா?

இதனை ஏற்கனவே நாங்கள் அறிவித்திருந்தோம். டிவிஎஸ் மோட்டார்ஸ் மற்றும் ஸோகோ இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து ‘அல்ட்ராவைலட்’ என்ற எலெக்ட்ரிக் மோட்டார் வாகனத் தயாரிப்பு நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறோம். அது ப்ரீமியம் மற்றும் அதிக பெர்ஃபாமன்ஸ் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் பைக்குகளைத் தயாரிக்கும் ஒரு நிறுவனம். இது குறித்து ட்விட்டரிலும் ஒரு வீடியோவை நான் பகிர்ந்திருந்தேன். அந்நிறுவனம் டிசைன் எல்லாம் சிறப்பாகவே செய்திருந்தார்கள். அதனைக் கொஞ்சம் பெரிய அளவில் உற்பத்தி செய்து மார்க்கெட்டிங் செய்யும் நோக்கில்தான் நாங்கள் முதலீடு செய்திருக்கிறோம்.

இந்தியத் தயாரிப்புகளையே முதன்மையாகப் பயன்படுத்த வேண்டும் என நிறைய இடங்களில் இந்தியாவை முன்னிறுத்தி நீங்கள் பேசியிருக்கிறீர்கள். இந்த நிலையில் டெஸ்லா போன்ற அயல்நாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்கு வருவதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

ஆரோக்கியமான போட்டி கண்டிப்பாக வரவேற்கத்தக்க ஒன்று. நிறைய அயல்நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் வந்து உற்பத்தி செய்யலாம்.. விற்பனை செய்யலாம்.. ஆனால், நாமும் அனைத்துத் தொழில்நுட்பங்களிலும் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும். ஒரு பொருள் இங்கேயே வடிவமைக்கப்பட்டு, இங்கேயே உற்பத்தி செய்யப்பட வேண்டும். அப்படி நடப்பதையும் நாம் உறுதி செய்ய வேண்டும். அயல்நாட்டு நிறுவனங்களை நம்பி நாம் முழுமையாக இருக்கக் கூடாது. இந்தியா என்பது அதிக மக்கள் தொகை கொண்ட நாடு. வருடத்திற்கு 2.4 கோடி குழந்தைகள் இந்தியாவில் பிறக்கிறார்கள். எதிர்காலத்தில் அவர்களுக்கான வேலைவாய்ப்பு இந்தியாவில் இருக்க வேண்டும் என்றால், நாம் தற்சார்புடன் இருக்க வேண்டும். அது மிகவும் அவசியம். வெளிநாட்டு நிறுவனங்களோ, உள்நாட்டு நிறுவனங்களோ, இந்தியாவில் வேலைவாய்ப்பு இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.

Zoho
Zoho

ஸோகோ நிறுவனத்தின் சிஇஓ, பல கோடிகளுக்கு வர்த்தகம் செய்யும் ஒருவர், டெஸ்லா, ஆடி, பென்ஸ் போன்ற லக்ஸூரி எலெக்ட்ரிக் கார்களையே வாங்கியிருக்கலாம். ஆனால், பட்ஜெட் நெக்ஸான் காரை வாங்குவதற்கான காரணம் என்ன?

இந்தக் கார் எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. நான் மிகவும் எளிமையான மனிதனாக இருக்கவே விரும்புகிறேன். நான் ஒரு நடுத்தரக் குடும்பச் சூழலில் இருந்து வந்தவன். பல கோடி மதிப்புள்ள கார்களை ஓட்டினால்தான் எனக்கு மகிழ்ச்சி கிடைக்கும் என நான் நினைக்கவில்லை. என்னுடைய தேர்வுகளும் எப்போதும் எளிமையாக இருக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். எண்ணம்போல் வாழ்க்கை, அவ்வளவுதான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism