Published:Updated:

பூமி சூடாவதில் வாகன விளக்குகளுக்கு பங்கு உண்டா? #DoubtOfCommonMan

பைக்
News
பைக்

கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரலில், Always Headlight On (AHO) என்ற விதி அமல்படுத்தப்பட்டது. அதன்படி டூ-வீலர்களில் ஹெட்லைட்டை ஆன்/ஆஃப் செய்யக்கூடிய ஸ்விட்ச் நீக்கப்பட்டு, சாவியுடன் ஹெட்லைட்டுக்கு நேரடியாகக் கனெக்‌ஷன் கொடுக்கப்பட்டது.

Published:Updated:

பூமி சூடாவதில் வாகன விளக்குகளுக்கு பங்கு உண்டா? #DoubtOfCommonMan

கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரலில், Always Headlight On (AHO) என்ற விதி அமல்படுத்தப்பட்டது. அதன்படி டூ-வீலர்களில் ஹெட்லைட்டை ஆன்/ஆஃப் செய்யக்கூடிய ஸ்விட்ச் நீக்கப்பட்டு, சாவியுடன் ஹெட்லைட்டுக்கு நேரடியாகக் கனெக்‌ஷன் கொடுக்கப்பட்டது.

பைக்
News
பைக்

விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் ``வாகன விளக்குகளும் பூமி சூடாவதற்குக் காரணமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், இப்போது வருகிற இருசக்கர வாகனங்கள் அனைத்திலும், வண்டியை ஸ்டார்ட் செய்தாலே ஹெட்லைட் எரிகிறது... இது ஏன்?" என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார் வாசுதேவன் என்ற வாசகர்.

Doubt of common man
Doubt of common man

குறைவான விலைக்கும் நீடித்த உழைப்புக்கும் பெயர் பெற்றவை ஹாலோஜன் பல்ப்கள். இதனாலேயே, 100 - 150 சிசி-க்கு உட்பட்ட கம்யூட்டர் பைக்குகள் மற்றும் காம்பேக்ட் கார்களின் ஹெட்லைட்டுக்குள், இந்த வகை பல்ப்கள்தான் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ஹாலோஜன் பல்ப்கள் பார்க்க, பழைய, விலை குறைவான Incandescent வகை பல்ப் போலவே இருந்தாலும், குறைந்த Watt திறனில் அதிக வெளிச்சத்தை (தன்மையான மஞ்சள் நிறத்தில்) உமிழக்கூடிய திறனைக் கொண்டிருக்கின்றன. ஆனால், இவை தொடர்ச்சியான பயன்பாட்டில் வெப்பத்தை வெளிப்படுத்துவது உண்மைதான்; இதனால்தான், சில வாகனங்களில் வெள்ளை நிற அல்லது நீல நிற வெளிச்சத்தைத் தரும் பல்ப்களும் பயன்படுத்தப்படுகின்றன. இவை கொஞ்சம் குறைவான வெப்பத்தை வெளியிடும்படியாகத் தயாரிக்கப்பட்டிருக்கின்றன.

Doubt of Common Man
Doubt of Common Man

விலை அதிகமான கார்களில் DRL எனப்படும் டே டைம் ரன்னிங் லைட்ஸ் இடம்பெற்றிருப்பதைப் பார்க்கலாம். இவை, காரின் வருகையைத் தெரிவிப்பதற்காகத் (மிரரில் பார்க்கும்போது மற்றும் எதிர்திசையில் வரும்போது) தொடர்ந்து இயங்கும். LED என்பதால், வழக்கமான பல்ப்களைவிட இவை எடுத்துக்கொள்ளும் மின்சாரம் மற்றும் வெளியிடும் வெப்பத்தின் அளவும் குறைவுதான். ஐரோப்பிய நாடுகளில் இந்த Always Headlight On (AHO) என்ற விதி, 2003-ம் ஆண்டிலிருந்தே அமலில் இருக்கிறது. இது இந்தியாவில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரலில் அமல்படுத்தப்பட்டது. வாகன ஓட்டுநர்கள் டூ-வீலர்களை சாலையில் எளிதில் அடையாளம் கண்டுகொள்வதற்காக இந்த முறை அமலுக்கு வந்தது. அதன்படி டூ-வீலர்களில் ஹெட்லைட்டை ஆன்/ஆஃப் செய்யக்கூடிய ஸ்விட்ச் நீக்கப்பட்டு, சாவியுடன் ஹெட்லைட்டுக்கு நேரடியாகக் கனெக்‌ஷன் கொடுக்கப்பட்டது. எனவே, பைக்கை ஆன் செய்வதற்கு சாவியைத் திருகிய அதே நேரத்தில், ஹெட்லைட் தானாக ஆன் ஆகிவிடும்! ஆனால் காலப்போக்கில் இது வாகனத்தில் இருக்கும் பேட்டரி - பல்ப் - எலெக்ட்ரிக்கல் சிஸ்டத்தின் ஆயுளைக் குறைக்கிறது எனப் பேச்சு எழுந்ததால், இதற்கு மாற்றாகவே ஹெட்லைட்டுடன் கூடுதலாக LED DRL பயன்படுத்தப்பட்டது. இங்கே ஹெட்லைட் எரியும்போது DRL ஆஃப் ஆகி இருக்கும் - DRL எரியும்போது ஹெட்லைட் ஆஃப் ஆகி இருக்கும்.

இதனால் பேட்டரி மற்றும் பல்ப் மீதான அழுத்தம் குறைந்து, எலெக்ட்ரிக்கல் சிஸ்டத்தின் ஆயுள் கூடும் எனக் கூறப்பட்டது. இதன் அடுத்தகட்டமாக வந்தவைதான் LED ஹெட்லைட்ஸ். ஒரு காலத்தில் பிரீமியம் பைக்குகளில் மட்டுமே இருந்த இந்த வசதி, தற்போது கம்யூட்டர் பைக்குகளில்கூட சாதாரணமாகக் கிடைக்கிறது. ஹாலோஜன் பல்ப்களுடன் ஒப்பிடும்போது, LED-கள் குறைவான Watt திறனில் அதிகப்படியான வெளிச்சத்தைத் தருவதுடன் (85% குறைவான மின்சாரப் பயன்பாடு), அதைவிட 10 மடங்கு அதிக ஆயுளையும் தருகின்றன. இதனால் 50W ஹாலோஜன் பல்ப் பயன்படுத்திய இடத்தில், 7.5W LED-யை உபயோகித்தால் போதும்! இதன் விலை அதிகமாகத் தெரிந்தாலும், முந்தைய காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இது குறைவுதான். இவை வெளியிடும் வெப்பமும் சொற்பம் என்பது ப்ளஸ். வீடுகளிலும்கூட, டியூப்லைட், Neon பல்ப், CFL ஆகியவற்றுக்கு மாற்றாக LED-களைப் பயன்படுத்தும்போது, மின்சாரக் கட்டணத்தைக் கணிசமாக மிச்சப்படுத்த முடியும்.

Doubt of common man
Doubt of common man

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களைக் கீழே பதிவுசெய்யுங்க!