Published:Updated:

இந்தியாவில் பெட்ரோலுடன் எவ்வளவு சதவிகிதம் எத்தனால் சேர்க்கப்படுகிறது? | Doubt of Common Man

பெட்ரோல்
News
பெட்ரோல்

2003-ல் முதல் முறையாக 5 சதவிகிதம் வரை எத்தனால் கலந்த பெட்ரோலை இந்தியா தன் 9 மாநிலங்களிலும் 4 யூனியன் பிரதேசங்களிலும் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தது.

Published:Updated:

இந்தியாவில் பெட்ரோலுடன் எவ்வளவு சதவிகிதம் எத்தனால் சேர்க்கப்படுகிறது? | Doubt of Common Man

2003-ல் முதல் முறையாக 5 சதவிகிதம் வரை எத்தனால் கலந்த பெட்ரோலை இந்தியா தன் 9 மாநிலங்களிலும் 4 யூனியன் பிரதேசங்களிலும் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தது.

பெட்ரோல்
News
பெட்ரோல்
விகடனின் 'Doubt of Common Man' பக்கத்தில் கீர்த்திநாதன் என்ற வாசகர், ``இந்தியாவில் பெட்ரோலுடன் எவ்வளவு சதவிகிதம் எத்தனால் சேர்க்கப்படுகிறது?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே!
Doubt of common man
Doubt of common man

பெட்ரோலில் எத்தனாலைக் கலக்கும் திட்டத்தை 2001-லேயே தொடங்கியது இந்தியா. முதலில் 5 சதவிகிதம் வரை எத்தனால் கலந்த பெட்ரோலை குறிப்பிட்ட பெட்ரோல் நிலையங்களில் மட்டும் விற்பனை செய்து சோதனை செய்தது. அதன் பிறகு 2003-ல் முதல் முறையாக 5 சதவிகிதம் வரை எத்தனால் கலந்த பெட்ரோலை 9 மாநிலங்களிலும் 4 யூனியன் பிரதேசங்களிலும் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை தமிழ்நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 1.91 சதவிகிதம் எத்தனால் கலக்கப்பட்டு வந்தது. அதன் பிறகு தற்போது அந்த அளவு 6.73 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது.

E20
E20

2030-க்குள் E20 (20 சதவிகிதம் எத்தனாலும் 80 சதவிகிதம் பெட்ரோலும் கொண்ட கலவை E20 என்று குறிப்பிடப்படுகிறது. இதுவே 10 சதவிகிதம் எத்தனால் என்றால் E10 என்றும் 5 சதவிகித எத்தனால் கலப்பை E5 என்றும் குறிப்பிடுகின்றனர்) இலக்கை அடைய வேண்டும் எனத் திட்டம் வகுத்திருந்தது மத்திய அரசு. அதன் பின்னர், அந்த E20 இலக்கை 2025-க்குள் அடைய வேண்டும் என 2020 டிசம்பர் மாதம் நடைபெற்ற CCEA (Cabinet Committee of Economic Affairs) கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக எத்தனால் கலப்பு குறித்த திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையைக் கடந்த ஜூன் மாதம் வெளியிட்டது பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம்.

அறிக்கையைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2021-22 ஆண்டிற்குள் E10 இலக்கை அடைய வேண்டும் எனத் திட்டமிட்டிருக்கிறது மத்திய அரசு. கடந்த வாரம்தான் கரும்பில் இருந்து பிரித்தெடுக்கப்படும் எத்தனாலுக்கு லிட்டருக்கு 1.47 ரூபாய் வரை விலையை உயர்த்திக் கொள்வதற்கான ஒப்புதலை வழங்கியது மத்திய அரசு. தற்போது கரும்புச் சாரில் இருந்து பிரித்தெடுக்கப்படும் எத்தனால், 63.47 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

எத்தனால் கலப்பு
எத்தனால் கலப்பு

20 சதவிகித எத்தனாலை பெட்ரோலுடன் கலந்து பயன்படுத்துவதால் வருடத்திற்கு பெட்ரோல் இறக்குமதியில் 30,000 கோடி ரூபாயை மிச்சப்படுத்த முடியும் என மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், முழுமையாகப் பெட்ரோலை பயன்படுத்தவதை விட எத்தனாலைக் கலந்து பயன்படுத்தும் போது அதனால் ஏற்படும் மாசுபாடு பெட்ரோலை விடக் குறைவாகவே இருக்கிறது. இதன் காரணமாகவே பல நாடுகளும் முழுமையான பெட்ரோலைத் தவிர்த்து எத்தனாலைக் கலந்து பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றன. பிரேசிலில் எத்தனால் 18 முதல் 27.5 சதவிகிதம் வரை வாகனங்களுக்கான எரிவாயுவில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்கள்!

Doubt of common man
Doubt of common man