Published:Updated:

மதுர மக்கள்: "10 கார், 14 டூவீலர்னு ஆரம்பிச்சது, இப்ப இங்க வந்து நிக்குது!"- வின்டேஜ் கலெக்டர் ராஜன்

மதுர மக்கள்: ராஜன்
News
மதுர மக்கள்: ராஜன்

மதுரையின் அடையாளமே அதன் மக்கள்தான். மதுரையின் நலனுக்காகவே உழைக்கும் மக்களை அடையாளப்படுத்துவதும், அவர்களின் குரல்களை உலகிற்கு ஒலிக்கச்செய்வதுமே இந்தத் தொடரின் நோக்கம்.

Published:Updated:

மதுர மக்கள்: "10 கார், 14 டூவீலர்னு ஆரம்பிச்சது, இப்ப இங்க வந்து நிக்குது!"- வின்டேஜ் கலெக்டர் ராஜன்

மதுரையின் அடையாளமே அதன் மக்கள்தான். மதுரையின் நலனுக்காகவே உழைக்கும் மக்களை அடையாளப்படுத்துவதும், அவர்களின் குரல்களை உலகிற்கு ஒலிக்கச்செய்வதுமே இந்தத் தொடரின் நோக்கம்.

மதுர மக்கள்: ராஜன்
News
மதுர மக்கள்: ராஜன்

"சின்ன வயசுலயே எனக்கு கார் மற்றும் பைக் மேல ஆசை. ஆனா வாங்கிக்க வசதி இல்ல. சாதாரண நடுத்தர குடும்பத்துக்கு அதெல்லாம் கனவுதான். நான் அடிப்படையில் ஒரு சார்ட்டட் அக்கவுன்ட்டன்ட். என்னோட காலேஜ் முடிச்சதும் என்னோட வருமானத்துலதான் என்னோட முதல் வண்டி வாங்குனேன். 1994-ல் நான் வாங்குன முதல் வண்டி சுசுகிதான். அதுக்கு பிறகு எனக்குன்னு ஒரு தனித்த நிலையான வருமானத்தை ஏற்படுத்திக்கிட்ட பின்னாலதான் என்னோட சின்ன வயசு கனவுகளுக்கு உருவம் குடுக்க ஆரம்பிச்சேன்.

ராஜன்
ராஜன்

நான் கண்ட கனவுகள் எல்லாமே பொருளாதார ரீதியா அதிக நிதி தேவைப்படுற ஒரு பொழுதுபோக்கு. வாங்குற சம்பளத்த எல்லாம் கார் டூவீலர்னு தேடித் தேடி போயி வாங்க ஆரம்பிச்சேன். இப்போ நினைச்சாலும் ஒரு மாதிரி சிலிர்ப்பா இருக்கு!"

கனவுகளை நோக்கி பயணிக்கிற உணர்வில் இயல்பாக விவரிக்கிறார் ராஜன். மதுரை உத்தங்குடியை சேர்ந்தவர். சார்ட்டட் அக்கவுன்ட்டன்ட் முடித்துவிட்டு தற்போது தனியார் மருத்துவமனையில் CFO ஆக பணியாற்றி வருகிறார்.
ராஜன் வைத்திருக்கும் டூவீலர்ஸ்
ராஜன் வைத்திருக்கும் டூவீலர்ஸ்

"பத்து கார், பதினாலு டூவீலர்னு இந்தப் பயணம் இப்போ இங்க வந்து நிக்குது. 1948ல வந்த உல்ஸ் கார்ல இருந்து சமீபத்திய வால்வோ வரைக்கும் வச்சுருக்கேன். ஜீப் மட்டும் ரெண்டு மாடல்ல வச்சுருக்கேன். Wolseley கார் எல்லாம் நிறைய தேடுதலுக்குp பிறகு கோயம்புத்தூர்ல இருந்து வாங்கி சேகரிச்சு வச்சுருக்கேன். கிட்டத்தட்ட அஞ்சு லட்ச ரூபாய் வரைக்கும் செலவு பண்ணிதான் அந்த காரை எடுத்துட்டு வந்தேன். அந்த வண்டியோட வடிவமைப்பு எல்லாம் ரொம்பவே வித்தியாசமா இருக்கும். அந்த வண்டிய தனியா கையில சுத்திட்டுதான் ஸ்டார்ட் பண்ணா முடியும். இப்போ தனியா அதுக்குன்னு ஒரு ஸ்டார்ட்டர் ரெடி பண்ணிருக்கேன்.

"எப்படி இதெல்லாம் பராமரிக்கிறீங்க?" என்று அவரிடம் கேட்டேன்.

"கொஞ்சம் சிரமம் தான். பொருளாதார ரீதியாவும் தனியா தயாராகி இருக்கணும். அப்டின்னா மட்டும்தான் இது சரிவரும். அதுபோக இது எனக்கு இது ஒரு மனநிறைவை கொடுக்குது. ஆபீஸ் நேரம் போக கார் பைக்னு நானாதான் பிடிச்சு போயி என்னை குடுத்துடுறேன். அது எனக்கு சந்தோஷமாவும் இருக்கு.

நார்டன் பைக் இருக்கு, ஜாவா இருக்கு லேண்டி இருக்கு, ராஜ்டூட் நாலு வண்டி இருக்கு. இப்படி எல்லா வகையிலயும் சேகரிச்சுட்டு இருக்கேன். நீங்க லேட்டஸ்ட் மாடல் வண்டில போறத விட முப்பது நாப்பது வருஷத்துக்கு முந்தின வண்டில போறப்போ, ஒரு சிக்னல்ல நின்னா எல்லாரும் நம்மளயே திரும்பி பார்க்கிறாங்க. அது ரொம்ப சந்தோஷமா இருக்கு.

ராஜனின் வின்டேஜ் கலெக்ஷன்
ராஜனின் வின்டேஜ் கலெக்ஷன்

வண்டிய பரமாரிக்கிறதுக்குன்னே தனியா ஒரு மெக்கானிக் வச்சுக்கலாமான்னும் யோசிச்சுட்டு இருக்கேன். இந்த வண்டிகள் இதுக்கு அடுத்து வாங்குற வண்டிகளை மட்டுமே முழுநேரமா பராமரிச்சா போதும்னு யோசனை இருக்கு.

கொரோனா லாக்டௌன்னு வெளில எங்கயும் போக முடியல. அதனால தற்போதைக்கு வண்டிக்கான தேடல கொஞ்சம் நிறுத்தி வச்சுருக்கேன்.

ராஜனின் வின்டேஜ் கலெக்ஷன்
ராஜனின் வின்டேஜ் கலெக்ஷன்

இப்போ உள்ள இளைய தலைமுறையினர் அடிக்கடி இங்க வந்து பார்த்துட்டு போவாங்க. இயந்திரவியல் துறை மாணவர்களே பழங்கால வண்டிகளோட வடிவமைப்பையும் தயாரிப்பையும் பார்த்துட்டு, இப்போ உள்ள வண்டிகளை இந்தத் தரத்தோட ஒப்பிட்டு பார்த்து ரொம்பவே ஆச்சர்யப்படுவாங்க!

கார் பைக் தாண்டி பழைய கேமராக்கள், ரேடியோக்கள் எல்லாம் சேகரிச்சுக்கிட்டு இருக்கேன். பழையதை சேகரிக்கிற இந்தப் பழக்கத்துனால இப்படியெல்லாம் வண்டி இருந்துச்சான்னு இனிவரும் தலைமுறை தெரிஞ்சுக்க வாய்ப்பு இருக்குல? இது இன்னும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு போயி சேரணும் அப்படிங்கற அந்த நினைப்புதான் இதை பண்றதுக்கு அதிக உத்வேகத்தைக் குடுக்குது."