கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

6-7 சீட்டர் அல்கஸார் ஹூண்டாயின் ஸ்டைலிஷ் எஸ்யூவி!

அல்கஸார்
பிரீமியம் ஸ்டோரி
News
அல்கஸார்

ஃபர்ஸ்ட் லுக்: ஹூண்டாய் அல்கஸார்

அல்கஸார்
அல்கஸார்

ஹூண்டாயின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அல்கஸார், கடந்த மாதம் இந்தியச் சந்தையில் வெளியானது. நாம் டெஸ்ட் டிரைவ் செய்தது ப்ரோட்டோ டைப் மாடல்தான் என்பதால், பெர்ஃபாமன்ஸ் எப்படி இருந்தது, இன்டீரியர் எப்படி இருந்தது என்பதை நம்மால் சொல்ல முடிந்தது. வெளித்தோற்றத்தைப் பற்றியோ, உள்ளலங்காரத்தைப் பற்றியோ, வசதிகள் பற்றியோ அதிகம் பேச முடியவில்லை. தற்போது அல்கஸாரை மூடியிருந்த திரை விலகியிருக்கிறது.

க்ரெட்டாவில் இருந்து வேறுபடுத்திக் காட்ட வேண்டும் என்பதற்காகவே அல்கஸார் நுட்பமாக டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. புத்தம் புதிய கிரில், மேம்படுத்தப்பட்ட முன்பக்க பம்பர்கள், புதிய பின்பக்க குவார்ட்டர் கிளாஸ், புதிய ரேப்-அரெளண்ட் டெய்ல்லைட், கொஞ்சம் நிமிர்த்தி வைக்கப்பட்டது போன்ற டெயில்கேட், டூயல் எக்ஸாஸ்ட் மற்றும் 18-இன்ச் அலாய் வீல்கள் ஆகிய மாற்றங்கள் க்ரெட்டாவில் இருந்து அல்கஸாரை முழுவதுமாக வேறுபடுத்திக் காட்டுகின்றன. முக்கியமாக க்ரெட்டாவைவிட அல்கஸாரின் நீளம் அதிகம் (2,760 மிமீ). அல்கஸாரின் வெளித்தோற்றம் நம்மைக் கவரும் வகையில் தான் இருக்கிறது.

டூயல் டோன் கலரில் கேபின், வழக்கம்போல் ப்ரீமியமாக இருக்கிறது. 10.25 இன்ச் டச் ஸ்க்ரீன் பெருசு!
டூயல் டோன் கலரில் கேபின், வழக்கம்போல் ப்ரீமியமாக இருக்கிறது. 10.25 இன்ச் டச் ஸ்க்ரீன் பெருசு!
டிஜிட்டலில் தகவல்கள் ஸ்டைலாக உள்ளன.
டிஜிட்டலில் தகவல்கள் ஸ்டைலாக உள்ளன.



புதிய அல்கஸார் - பிரஸ்டீஜ், ப்ளாட்டினம் மற்றும் ஸிக்னேச்சர் என மூன்று வேரியன்ட்களிலும், டைகா ப்ரௌன், டைபூன் சில்வர், போலார் ஒயிட், டைட்டன் கிரே, பேன்டம் பிளாக் மற்றும் ஸ்டாரி ப்ளாக் ஆகிய 6 பெயின்ட் ஷேட்களிலும் கிடைக்கிறது.

வசதிகள்

சரி; சிறப்பம்சங்களாக என்னென்ன வசதிகளை அளித்திருக்கிறது ஹூண்டாய்? செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் ஏகப்பட்ட தகவல்கள் உண்டு. 10.25 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெய்ன்மன்ட் சிஸ்டம், அதோடு ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே வசதி, ஹூண்டாயின் கனெக்டட் கார்டெக், லேன் மாறும்போது உபயோகப்படும் கேமரா, 360 டிகிரி கேமரா, மிடில் சீட்டுக்கான சன்ஷேடு, பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் போன் சார்ஜிங், வென்டிலேட்டட் முன் சீட்கள், டயர் ப்ரஷர் மானிட்டர் சிஸ்டம், டிரைவ் மற்றும் ட்ராக்‌ஷன் மோடுகள், Bose சவுண்டு சிஸ்டம், LED ஹெட்லைட்ஸ் மற்றும் க்ளைமேட் கன்ட்ரோல் எனப் பட்டியல் நீள்கிறது. இதில் சில வசதிகள் இந்த செக்மென்ட்டிலேயே முதல்முறையாக அல்கஸாரில்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. இன்டீரியரும் பிளாக் மற்றும் பிரௌன் என இரண்டு டூயல் டோன் கலர் ஸ்கீம்களில் கிடைக்கிறது அல்கஸார். டூயல் டோன் கலர் ஸ்கீம், ஒயிட் மற்றும் கிரே கலர் வெளிப்பக்க பெயின்ட் ஷேட் கொண்ட வேரியன்ட்டில் மட்டுமே கிடைக்கும்.

இதில் 6 மற்றும் 7 சீட்டர் இரண்டு ஆப்ஷன்கள் இருக்கின்றன. 7-வது சீட், என்பது வழக்கம்போல காம்ப்ரமைஸிங்தான் செய்து கொள்ள வேண்டும். 6 சீட்டர் கேப்டன் சீட்கள்தான் சொகுஸில் பெஸ்ட்.

இன்ஜின்

பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களிலும் அல்கஸார் கிடைக்கிறது. பெட்ரோல் இன்ஜினைப் பொருத்தவரை எலான்ட்ரா மற்றும் டூஸானின் 2.0 லிட்டர், 4 சிலிண்டர் கொண்ட இன்ஜின் கொஞ்சம் மேம்படுத்தப்பட்டு அல்கஸாரில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த இன்ஜின் எலான்ட்ராவைவிட 7bhp அதிகமாக 159bhp பவரையும், 192Nm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. டீசல் இன்ஜினைப் பொருத்தவரை க்ரெட்டாவில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 4 சிலிண்டர் கொண்ட 1.5 லி இன்ஜின்தான் இதிலும். ஆனால், இதை அல்கஸாருக்கு ஏற்றபடி கொஞ்சம் ட்யூன் செய்திருக்கிறார்கள். இந்த டீசல் இன்ஜின், க்ரெட்டாவில் வெளிப்படுத்தும் அதே 115 bhp பவர் மற்றும் 250Nm டார்க்கையே அல்கஸாரிலும் வெளிப்படுத்துகிறது. கியர்பாக்ஸைப் பொருத்தவரை, இரண்டு இன்ஜின்களிலும் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ஆகிய இரண்டு ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது அல்கஸார்.

டெயில் லைட் டிசைன் புதுசு!
டெயில் லைட் டிசைன் புதுசு!
முன்பக்க சீட்களுக்கு வென்டிலேட்டட் வசதி உண்டு. டிரைவர் சீட்டுக்கு பவர் அட்ஜஸ்ட் உண்டு.
முன்பக்க சீட்களுக்கு வென்டிலேட்டட் வசதி உண்டு. டிரைவர் சீட்டுக்கு பவர் அட்ஜஸ்ட் உண்டு.



பெர்ஃபாமன்ஸ்

இதன் டீசல் ஆட்டோமேட்டிக் மாடல், 0-100 கிமீ-யை எட்ட 12.57 விநாடிகள் எடுத்துக் கொள்கிறது. டீசலில் இன்னும் பஞ்ச் தேவை என்பதைச் சொல்கிறது இது. பெட்ரோல் ஆட்டோமேட்டிக்தான் வேகப் போட்டியில் கலக்குறது. 9.8 விநாடிகளில் இது 100 கிமீ வேகத்தை எட்டி விடுகிறது. பெட்ரோல் மேனுவலில் இது பம்மிவிடுகிறது. இதற்கு 11.03 விநாடிகள் ஆகிறது. அப்படியென்றால், உறுதியான பெர்ஃபாமன்ஸ் வேண்டும் என்பவர்களுக்கு பெட்ரோல் ஆட்டோமேட்டிக் போய்விடலாம். ஆனால், மைலேஜ் என்று வரும்போது டீசல்தான் பெஸ்ட்டாக இருக்கும். அடுத்த வாரம் நாங்கள் இதை ஓட்டும்போது ரியல் டைம் மைலேஜ் தெரிந்துவிடும்.

17 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள்..
17 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள்..
பின்பக்கமும் டிஸ்க் பிரேக்...
பின்பக்கமும் டிஸ்க் பிரேக்...
ட்வின் டிப்‑ எக்ஸாஸ்ட்... அருமை!
ட்வின் டிப்‑ எக்ஸாஸ்ட்... அருமை!



வாங்கலாமா?

3 வேரியன்ட்களில் கிடைக்கும் அல்கஸாரை, 4 லட்சம் விலை வித்தியாசத்தில் மொத்தம் 14 வேரியன்ட்களில் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். பெரிய க்ரெட்டாவாகப் பார்த்தால் இது விலை அதிகம்தான். ஆனால், ஒரு வசதியான, வெல் பேக்கேஜ்டு எஸ்யூவிக்கு இந்த விலை ஓகேவா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

ஹூண்டாய் அல்கஸார் - எக்ஸ்-ஷோரூம் விலை

பெட்ரோல் 7 சீட் பெட்ரோல் 6 சீட் டீசல் 7 சீட் டீசல் 6 சீட்

பிரஸ்டீஜ் MT 16.30 லட்சம் 16.45 லட்சம் 16.53 லட்சம் 16.68 லட்சம்

பிரஸ்டீஜ் AT 17.93 லட்சம் 18.01 லட்சம்

பிளாட்டினம் MT 18.22 லட்சம் 18.45 லட்சம்

பிளாட்டினம் AT 19.56 லட்சம் 19.79 லட்சம்

ஸிக்னேச்சர் MT 18.71 லட்சம் 18.94 லட்சம்

ஸிக்னேச்சர் AT 19.85 லட்சம் 19.99 லட்சம்