கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

50 லட்சத்துக்கு இந்த பென்ஸ் ஓகேவா?

Benz GLA 200
பிரீமியம் ஸ்டோரி
News
Benz GLA 200

ஃபர்ஸ்ட் டிரைவ்: மெர்சிடீஸ் பென்ஸ் GLA 200 பெட்ரோல்

இரண்டு மாதங்களுக்கு முன்பு பென்ஸ் GLA–வின் டீசல் மாடலை 220d காரை ஓட்டியிருந்தேன். 190bhp பவரும் 4–Matic ஆல்வீல் டிரைவும் அற்புதமாக இருந்தது. இன்னும் அது விற்பனைக்குக்கூட வராத நிலையில், GLA–வின் பெட்ரோல் மாடலை ஓட்டச் சொல்லிவிட்டது பென்ஸ். இது பென்ஸ் GLA 200. எப்படி இருக்கு இந்த பெட்ரோல் பென்ஸ்?

பவர்ஃபுல் பெட்ரோல்?

டீசல் போல் ரொம்ப பவர்ஃபுல்லாக இல்லை இந்த பெட்ரோல் GLA. இந்த 1.3 லிட்டர் இன்ஜினில் இருக்கும் பவர் 163bhpதான். டீசலை ஒப்பிடும்போது இது ரொம்பக் குறைவு. அதேநேரம் பெர்ஃபாமன்ஸை ஈடு கட்டும் வகையில் இதன் எடையையும் குறைத்திருக்கிறார்கள். டீசலைவிட 180 கிலோ எடை குறைவு என்பது ஓகேவாக இருக்கும். பொதுவாகவே, டீசல் இன்ஜினைவிட பெட்ரோல் இன்ஜினின் எடை குறைவு. மேலும், இந்த பெட்ரோலில் 4வீல் டிரைவ் சிஸ்டம் இல்லை; அதனால் ப்ரொப்பல்லர் ஷாஃப்ட், டிஃப்ரன்ஷியல், ஹாப் ஷாஃப்ட்டுகள் போன்றவை காலியானதால் இந்த எடைக் குறைப்பு சாத்தியமாகி இருக்கும்.

50 லட்சத்துக்கு இந்த பென்ஸ் ஓகேவா?



இதன் டார்க் 25kgm. அதுவும் 1,620rpm-லேயே கிடைத்து விடுகிறது. டர்போ ஸ்பெஷலிஸ்ட்களான ரெனோ மற்றும் நிஸானின் கூட்டணியில் உருவாக்கப்பட்டது என்பதால், இதன் ஐடிலிங் செம ஸ்மூத். த்ராட்டில் செய்ததும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்கிறது. ஆனால், லேசாக டர்போ லேக் இருந்தது. அது 1,500rpm வரைதான். அதற்குப் பிறகு காரில் 5 பேர் இருந்தாலும், அப்படியே ஜிவ்வென இழுத்துப் போகிறது. அதேநேரம் பவர் டெலிவரி வெடிச் சிதறல் என்று சொல்ல முடியவில்லை. த்ராட்டில் கொடுக்கக் கொடுக்கத்தான் அப்படியே பவர் கூடுவது தெரிகிறது. இந்த பென்ஸ் GLA மிட்ரேஞ்சில்தான் அருமை. ஒரு கம்ஃபோர்ட் க்ரூஸ் கிடைக்கிறது.

மிட் ரேஞ்சா… டாப் எண்டா?

அதாவது, இந்த பென்ஸ், டிராஃபிக்கில் ஓட்ட அற்புதமாக இருக்கும். இதில் இருப்பது 7 ஸ்பீடு DCT கியர்பாக்ஸ். டிரைவிங் எக்ஸ்பீரியன்ஸை நல்ல அனுபவமாக்குகிறது இந்த கியர்பாக்ஸ்.

ஹைவே பெர்ஃபாமன்ஸ், அதாவது டாப் எண்டில்தான் இந்த GLA லேசாகத் திணறுவதுபோல் தெரிகிறது. இது 0–100 கிமீ வேகத்தைத் தொட 8.7 விநாடிகள் ஆகும் என்று க்ளெய்ம் செய்கிறது மெர்சிடீஸ். இது டீசலை விட 1.5 விநாடிகள் டீசலைவிட வேகம் குறைவு என்பதைத்தான் நம்ப முடியவில்லை. ஹைவேஸில் இன்னும் ஸ்பின் ஆக வேண்டும் இதன் இன்ஜின். 5,000rpm–க்கு மேல் ஒரு திணறல் தெரிகிறது. பவர் டெலிவரியில் ஒரு எனர்ஜி மிஸ் ஆகிறது. அதனால், 5,500rpm-ல் ஆக்ஸிலரேட்டரில் இருந்து காலை எடுத்துவிட்டு, கியர்பாக்ஸை அடுத்த கியருக்கு என்கேஜ் செய்ய விட்டு விடுவதே நல்லது. பென்ஸில் மைல்டு ஹைபிரிட் சிஸ்டம் இல்லாமலா? இந்த GLAவிலும் MHS உண்டு.

டேஷ்போர்டு கறுப்பு மற்றும் பீஜ் கலரில் சாந்தமாக இருக்கிறது. இன்டீரியர் ப்ரீமியம் ரகம்.
டேஷ்போர்டு கறுப்பு மற்றும் பீஜ் கலரில் சாந்தமாக இருக்கிறது. இன்டீரியர் ப்ரீமியம் ரகம்.

டிரைவிங்

ஓட்டுதலில் டீசலைப்போன்ற ஒரு பன்ச், இதில் கிடைக்கவில்லை. ஆனால் ரைடு குவாலிட்டி பெட்டராகவே இருக்கிறது. காரணம், குறைவான எடை கொண்ட இன்ஜின், ஹை புரொஃபைல் டயர்கள், சஸ்பென்ஷன் எல்லாமேதான். டீசலில் மோசமான கரடுமுரடான சாலைகளில் போகும்போது கிடைக்கும் ஒரு சொகுசு மட்டும் இதில் மிஸ்ஸாகிறது. ஷார்ப்பான பள்ளங்களில் இறக்கி ஏற்றும்போது, அதன் தாக்கம் நமது உடலுக்குத் தெரிகிறது. அதற்காக சஸ்பென்ஷனை மோசம் என்று சொல்லிவிட முடியாது. அமைதியாகவே வேலை செய்கிறது. இருந்தாலும், இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் மிகவும் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். வெறும் 147 மிமீ என்பது, ஸ்பீடு பிரேக்கர்களில் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.

ஃப்ரன்ட் வீல் டிரைவ் கார் என்பதால், கொஞ்சம் ஃபன் டு டிரைவ் கிடைக்கத்தான் செய்கிறது. லைட் வெயிட்டான ஸ்டீயரிங்கைப் பிடிக்கும்போதே டயர் கிரிப்பை உணர முடிகிறது. மற்றபடி லேசான பாடி ரோல் இருக்கத்தான் செய்கிறது. இது டீசலிலும் இருந்தது.

1.3 லி பெட்ரோல் இன்ஜினின் பவர், டீசலைவிட ரொம்பக் குறைவு.
1.3 லி பெட்ரோல் இன்ஜினின் பவர், டீசலைவிட ரொம்பக் குறைவு.

இன்டீரியர்

220d டீசலில் டார்க்கான கறுப்பு AMG ட்ரிம் இன்டீரியர் செம ஸ்போர்ட்டி என்றால்… பெட்ரோலில் பாதி பீஜ் மற்றும் பாதி கறுப்பு என ரொம்ப சாந்தமாக இருக்கிறது. க்ளோவ் பாக்ஸுக்கு மேலே, டோர் பேடுகளில் வழக்கம்போல அந்த மர வேலைப்பாடு அருமை. எப்போதுமே கொடுக்கும் காசுக்கு இரட்டிப்பாக இருக்கும் பென்ஸின் இன்டீரியர். இதிலும் அப்படித்தான். ஆனால், கேபினுக்குள் சில தரம் குறைந்த பிளாஸ்டிக்குகளையும் பார்க்க முடிகிறதே!

வசதிகள்

பென்ஸின் ஃபேவரைட்டான MBUX சிஸ்டம், ‘Hey Mercedes’ எனும் வாய்ஸ் கமாண்ட் இதிலும் உண்டு. பென்ஸைக் கூப்பிட்டு உதவி கேட்டுக் கொள்ளலாம். மற்றபடி ஒயர்லெஸ் சார்ஜிங், பவர்டு மெமரி முன்பக்க சீட்கள், 64 கலர் ஆம்பியன்ட் லைட்டிங்ஸ், பெரிய சன்ரூஃப் என சில வசதிகள் இருந்தாலும், சின்ன கார்களிலேயே இருக்கும் ஆப்பிள்/ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்றவை எல்லாம் எங்கே? ரிவர்ஸ் கேமரா இருக்கிறது; ஆனால் பார்க்கிங் சென்ஸார் எங்கே? காஸ்ட்லியான பென்ஸுக்கு இது அழகில்லை!

மற்றபடி சீட் இட வசதி, சொகுசு போன்றவற்றிலெல்லாம் பென்ஸைக் குறை சொல்ல முடியவில்லை. உயரமானவர் களுக்குக்கூட வசதியாகத்தான் இருக்கின்றன. பின் பக்கப் பயணிகளுக்கும் பேக்ரெஸ்ட்டைக் கொஞ்சம் உயரமாக வைத்திருக்கிறார்கள். இதன் பூட் ஸ்பேஸ் 435 லிட்டர். இது ஓகேதான். வாவ் இல்லை!

50 லட்சத்துக்கு இந்த பென்ஸ் ஓகேவா?



பென்ஸ் GLA பெட்ரோல் வாங்கலாமா?

வழக்கம்போல், GLA டீசலைவிட இது விலை குறைவாகத்தான் இருக்கிறது. இந்த பெட்ரோலின் ஆன்ரோடு விலை சுமார் 50 லட்சம் வரும். இதுவே டீசல், எக்ஸ்ட்ராவாக 3 லட்சம் அதிகம் வரும். சிட்டியில் ஓட்ட இந்த பெட்ரோல் நன்றாகவே இருக்கிறது. குறைந்த எடை கொண்ட இதன் ரைடு குவாலிட்டியும் அற்புதம். ஆனால், வசதிகளில் பலவற்றைக் கோட்டை விட்டிருக்கிறது பென்ஸ். இதன் டாப் எண்டும் இன்னும் கொஞ்சம் ஸ்ட்ராங் வேண்டும். பெட்ரோலையும் டீசலையும் ஒப்பிடும்போது, ஓவர்ஆலாக ஒரு ரவுண்டட் பேக்கேஜாக அசத்தும் டீசலைத்தான் மக்கள் விரும்புவார்களோ என்று தோன்றுகிறது.

நீ/அ/உ 4,410/1,834/1,611 மிமீவீல்பேஸ் 2,729 மிமீகி.கிளியரன்ஸ்147 மிமீஎரிபொருள் பெட்ரோல்இன்ஜின்1,332 சிசி, 4 சிலிண்டர், டர்போ பெட்ரோல்டிரைவ்ஃப்ரன்ட் வீல் டிரைவ்கியர்பாக்ஸ் 7ஸ்பீடு டூயல் கிளட்ச்பவர்163bhpடார்க் 25kgm