Published:Updated:

ஆயிரம் சிசி அசுரன்! கவாஸாகி நின்ஜா 1000 ZX-10R

ரீடர்ஸ் ரிவ்யூஞா.சுதாகர், த.ஸ்ரீநிவாசன்

என் முதல் வாகனம் டிவிஎஸ்-50. இதுவரை 22 பைக்குகள் வாங்கி விட்டேன். இந்த கவாஸாகி எனக்கு 23-வது பைக். கார் மீது இருக்கும் விருப்பத்தைவிட, பைக் மீதுதான் எனக்கு ஆர்வம் அதிகம்.

ஆயிரம் சிசி அசுரன்! கவாஸாகி நின்ஜா 1000 ZX-10R

1000 சிசி இன்ஜின்கொண்ட சூப்பர் பைக் வாங்கவில்லையே என்ற குறை எனக்கு இருந்தது. அதனால், அடுத்து அதைத்தான் வாங்க வேண்டும் என தீர்மானத்தில் இருந்தேன். உலகின் மிகச் சிறந்த பைக் எது என அலசினேன். மூன்று முறை உலக சாம்பியன் பட்டத்தை கவாஸாகி 1000 ZX-10R பைக்தான் வென்றுள்ளது. அதுவே, இதன் சூப்பர் பெர்ஃபாமென்ஸுக்குச் சான்றிதழ். அதோடு, இந்த பைக் பற்றிய விமர்சனங்கள் பாசிட்டிவாகவே இருந்தன. எனவே, பிஎம்டபிள்யூ - கவாஸாகி ஆகிய இரண்டையும் ஒப்பிட்டு, இறுதியில் கவாஸாகி தான் வாங்க வேண்டும் என முடிவு செய்தேன்.

ஷோரூம் அனுபவம்

இந்தியாவில் கவாஸாகிக்கு புனே, டெல்லி, பெங்களூரு என மூன்று ஷோரூம்கள் மட்டுமே இருந்தன. சமீபத்தில்தான் சென்னையில் ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது. இதில், எனது அருகாமைக்கும், சர்வீஸ் வசதிகளுக்கும் பெங்களூருதான் சரியாகப்பட்டது. எனவே, அங்கு வாங்க முடிவு செய்தேன். இந்த பைக்கை ஏற்கெனவே டெஸ்ட் டிரைவுக்காக ஷோரூமில் கேட்டிருந்தேன். அதை எனக்காக பெங்களூருவில் இருந்து கோவைக்குக் கொண்டுவந்து தந்தனர். அதோடு, பிஎம்டபிள்யூ பைக்குடன் இதை ஒப்பிட்டு, இதன் பெர்ஃபாமென்ஸ் மற்றும் சிறப்பம்சங்களைத் தெளிவாக விளக்கினர். கடந்த செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் டெஸ்ட் டிரைவ் செய்தேன். பிறகு, ஒரு வாரம் கழித்து  பைக்கை புக் செய்வதற்காக ஷோரூம் சென்று பார்த்தபோது, பார்வைக்காக இந்த மாடலில் ஒரு பைக் மட்டுமே இருந்தது. அதுவே எனக்குப் பிடித்துவிட்டதால், உடனே வாங்க வேண்டும் என முடிவு செய்து, அன்றே பணம் செலுத்தினேன். அடுத்த நாள் பைக் என் கைக்குக் கிடைத்துவிட்டது. பைக் வாங்கிவந்த பின்பு, சர்வீஸ் பற்றி நினைவு படுத்துகின்றனர். ஷோரூம் அனுபவத்தில் எந்தவொரு குறையும் இல்லை.

ஆயிரம் சிசி அசுரன்! கவாஸாகி நின்ஜா 1000 ZX-10R

எப்படி இருக்கிறது பைக்?

எதிர்பார்த்ததைவிட மிகச் சிறப்பாக இருக்கிறது நின்ஜா. சூப்பர் பைக்குகளில் இதுதான் கிங். இதன் போட்டி பைக்குகள் அனைத்தும் இதைவிட விலை அதிகமாக இருக்கும்போது, இது 20 லட்ச ரூபாய்க்குள் கிடைப்பது சிறப்பு. வாங்கிய பிறகு, சர்வீஸுக்காக ஒருமுறை கோவையில் இருந்து பெங்களூரு சென்று வந்தேன். சுமார் 300 கி.மீ தூரம். சரியாக 2 மணி நேரம் 40 நிமிடங்களில் பெங்களூரு சென்றுவிட்டேன். அதிகபட்சமாக 261 கி.மீ வேகம் வரை சென்றேன். காலையில் சென்று, சர்வீஸ் முடித்து இரவுக்குள் கோவைக்குத் திரும்பிவிட்டேன்.

கவாஸாகியில் பவரும் வேகமும்தான் ஸ்பெஷல். ஆனால், நம் ஊர் சாலைகளில் அதிகபட்சம் 160 கி,மீ வேகத்தைத் தாண்டிச் செல்வதே சவால்தான். ஆனால், இதன் கையாளுமை நன்றாக இருந்ததால், மிக எளிமையாக 200 கி.மீ வேகத்தைத் தாண்ட முடிந்தது. மற்றொன்று, இதன் இருக்கை. நீண்ட தூரம் பயணம் சென்றாலும்கூட எந்த அசெளகரியமும், களைப்பும் ஏற்படவில்லை.

சாலையில் ஓட்ட, ரேஸ் டிராக்கில் ஓட்ட என இரண்டு வகையான டிரைவிங்குக்கும் ஏற்ப, ஸ்விட்ச் மூலமே டிரைவ் மோடை மாற்ற முடியும்.
ரேஸ் டிராக்கில் ஓட்டுவதற்கு ஏற்ப பக்கவாட்டுக் கண்ணாடிகளை ஈஸியாகக் கழற்றிவிட ஆப்ஷன் இருக்கிறது. ரேஸ் டிராக் டிரைவிங் மோடுக்கு வந்துவிட்டால்,  எல்சிடி டிஸ்ப்ளேவில் கியர் இண்டிகேட்டர் பிரதானமாக வந்துவிடுகிறது. ஃபுல், மீடியம்,  லோ என மூன்று பவர் மோட் ஆப்ஷன்கள் உள்ளன. நகரச் சாலைகளில் ஓட்டும்போது லோ பவர் ஆப்ஷனே போதுமானது.

ஆயிரம் சிசி அசுரன்! கவாஸாகி நின்ஜா 1000 ZX-10R

ப்ளஸ் - மைனஸ்

1000 ZX-10R பைக்கின் இன்ஜின் பவர்தான் இதன் முதல் சிறப்பம்சம். 210bhp என்பதால், ஆக்ஸிலரேட்டரை முறுக்க முறுக்க சக்தி கொப்பளிக்கிறது. அதிகபட்ச வேகத்தை வெகு சீக்கிரம் எட்டிவிட முடிவதால், பிக்அப் அருமை. சூப்பர் பைக்குகளை நெடுஞ்சாலைகளில் மட்டுமே ஓட்ட முடியும் என்பதை இது நிச்சயம் மாற்றும். நகரச் சாலைகளில்கூட அருமையாகக் கையாள முடிகிறது. இதன் ஸ்டைல் மற்றொரு ப்ளஸ். ஹெட்லைட்ஸ் மற்றும் பின்பக்க ஃபினிஷிங்
இரண்டுமே அழகானவை.

கலர் ஆப்ஷன்ஸ் குறைவாக இருப்பதுதான் இதில் எனக்குத் தெரிந்த ஒரே மைனஸ். இதன் ஷோரூம்களும் தமிழகத்தில் பரவலாக இருந்தால், பைக் ஆர்வலர்களின் கவனம் கவாஸாகியின் பக்கம் திரும்பும்.

காரணம், எக்ஸ்பர்ட்டுகள் மட்டுமே சூப்பர் பைக் ஓட்ட முடியும் என்ற விதியை இது உடைக்கிறது. இதைப் புதியவர்கள்கூட எளிமையாக ஓட்டலாம். சூப்பர் பைக் வாங்க நினைப்பவர்கள், முதன்முறை கவாஸாகி வாங்கினால், நிச்சயம் அது சிறந்த தேர்வு!”

அடுத்த கட்டுரைக்கு