Published:Updated:

மோட்டார் நீயூஸ்

மோட்டார் நீயூஸ்

மோட்டார் நீயூஸ்

மோட்டார் நீயூஸ்

Published:Updated:

 யமஹாவின் பட்ஜெட் சூப்பர் பைக்! - YZF-R3

மோட்டார் நீயூஸ்

கேடிஎம் RC 390, நின்ஜா 300 பைக்குகளுக்குப் போட்டியாக, கம்பீரமாகக் களம் இறங்குகிறது YZF - R3.  321 சிசி திறன்கொண்ட ட்வின் சிலிண்டர், லிக்விட் கூல்டு இன்ஜின் கொண்டுள்ளது  YZF - R3. R25 பைக்கின் 250 சிசி பைக் போலவே இதிலும் ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் டைப் இன்ஜின்தான். இது, அதிகபட்சமாக 41.4 bhp சக்தியையும், 3.01kgm டார்க்கையும் அளிக்கிறது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் ஸ்மூத்தாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். பைக்கின் விலை சுமார் 3 லட்சம் ரூபாய் வரை இருக்கும். இந்தியாவில் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரவிருக்கிறது R3.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 எலெக்ட்ரிக் பஸ்களை திருச்சியில் தயாரிக்கிறது அசோக் லேலாண்ட்!

அடுத்த ஆண்டு முதல் Optare எலெக்ட்ரிக் பஸ்களை இந்தியாவில் தயாரித்து, விற்பனை செய்ய இருக்கிறது அசோக் லேலாண்ட்.

2015-ம் ஆண்டு ஜனவரி மாதம், மும்பையில் நடக்க இருக்கும் BusWorld 2015 எக்ஸ்போவில், Solo மற்றும் Versa என இரண்டுOptare பஸ்களை அறிமுகப்படுத்தவிருக்கிறது அசோக் லேலாண்ட். இந்த எலெக்ட்ரிக், ஹைபிரிட் ரக பஸ்களை திருச்சியில் இருக்கும் தொழிற்சாலையிலும், ராஜஸ்தானில் உள்ள ஆல்வார் தொழிற்சாலையிலும் தயாரிக்க இருப்பதாக, அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் வினோத் கே தாசரி தெரிவித்திருக்கிறார். இந்த எலெக்ட்ரிக் பேருந்துகளை நகர எல்லைக்குள் மட்டுமே பயன்படுத்த முடியும். ஒரு பேருந்தின் விலை சுமார் 3 கோடி ரூபாய் இருக்கும் என்பதால், இங்கிலாந்து அரசு Optare பேருந்துகளுக்கு மானிய உதவியை அளிப்பதுபோல, இந்திய அரசும் நேஷனல் எலெக்ட்ரிக் மொபிலிட்டி ப்ரோக்ராம் மூலம் இந்த முயற்சிக்கு உதவும் என எதிர்பார்ப்பில் இருக்கிறது அசோக் லேலாண்ட்.

 சென்னையில் கவாஸாகி ஷோரூம்!

மோட்டார் நீயூஸ்

கவாஸாகி பைக்குகளை விற்பனை செய்ய, சென்னையில் தனியாக ஷோரூம் திறக்கப்பட்டிருக்கிறது. சென்னை அசோக் நகரில், கவாஸாகி ஷோரூமை ஜெய் ஆட்டோஸ் நிறுவனம் அமைத்துள்ளது. இந்த ஷோரூமில் 800சிசிக்கு மேல் உள்ள சூப்பர் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்படும். இங்கு விற்பனை செய்யப்படும் பைக்குகள் அனைத்தும் ஜப்பானில் உற்பத்தி செய்யப்படுபவை. தற்சமயம் Z-800, Z-1000, நின்ஜா-1000, ZX10R மற்றும் 1400 சிசி பைக்கான ZX14R ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றின் விலை 9.15 லட்சம் முதல் 18.95 லட்சம் வரை.

- மா.அ.மோகன் பிரபாகரன், படம்:க.பாலாஜி

 விற்பனைக்கு வந்தது ஸ்ப்ளெண்டர் ப்ரோ கிளாஸிக்!

மோட்டார் நீயூஸ்

ஸ்ப்ளெண்டர் ப்ரோ கிளாஸிக் பைக்தான், இந்தியாவின் முதல் 100சிசி கஃபே ரேஸர் ஸ்டைல் பைக். 2014 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமான இந்த பைக்கின் ஸ்டைலிங், கஃபே ரேஸர் பைக்குகளில் இருப்பதுபோல, வின்டேஜ் ஸ்டைல் சீட், ஸ்போர்ட்டியான ஹேண்டில்பார், வட்ட வடிவ ஹெட்லைட்ஸ், வட்ட வடிவ இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. மட்கார்டுகள் க்ரோமில் மின்னுகின்றன. ஸ்ப்ளெண்டர் ப்ரோ பைக்கில் இருக்கும் அதே 100சிசி இன்ஜின்தான் இதிலும். இதன் சக்தி 8.24bhp.

 தூத்துக்குடி ஆட்டோமொபைல் திருவிழா!

மோட்டார் நீயூஸ்

தூத்துக்குடி இன்ஃபன்ட் ஜீசஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், சமீபத்தில் நடந்து முடிந்தது Auto Fermogenz திருவிழா. இதில் இருபத்துக்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் இருந்து, சுமார் 200 மாணவர்கள் பங்கேற்றனர். அந்தக் காலத்தில் இருந்து இந்தக் காலம் வரை வாகனங்கள் எப்படி உருமாற்றம் பெற்றுள்ளன என்பதை விளக்கும் வகையில் மாட்டு வண்டியில் துவங்கி நவீன ரக கார், பைக் வரை காட்சிப்படுத்தி இருந்தனர். மெக்கானிக்கல் துறை மாணவர்கள் உருவாக்கிய சூரிய ஒளியில் இயங்கும் சோலார் கார் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. அதேபோல், இந்தக் கல்லூரியின் ஆட்டோமொபைல் துறை மாணவர்கள் வடிவமைத்த என்டோர் (Entor) எனப் பெயரிடப்பட்ட டு வீல் டிரைவ் பைக் மற்றும் டர்போ சார்ஜர் பொருத்தப்பட்ட டிவிஎஸ் MAX100 R பைக் ஆகியவையும் ஆட்டோமொபைல் வல்லுனர்களின் பாராட்டைப் பெற்றன.

-   முகமது மதார் முகைதீன், படம்: ஏ.சிதம்பரம்

 ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தை வீழ்த்தியது ஃபோக்ஸ்வாகன்

மோட்டார் நீயூஸ்

உலக அளவிலான விற்பனையில் டொயோட்டாதான் நம்பர் ஒன். இரண்டாம் இடத்தில் இருந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தை, இப்போது வீழ்த்தியுள்ளது ஃபோக்ஸ்வாகன். இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை 73.7 லட்சம் கார்களை ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்திருக்க, ஃபோக்ஸ்வாகன் 74 லட்சம் கார்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. டொயோட்டா, அக்டோபர் மாதம் முடியும் வரை தனது விற்பனை எண்ணிக்கை பற்றிய தகவல்களை அளிக்கவில்லை. ஆனால், இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் டொயோட்டாதான் முன்னிலையில் இருந்ததால், இந்த ஆண்டின் முடிவிலும் அந்த நிறுவனமே முன்னிலையில் இருக்கக்கூடும். 2018-ம் ஆண்டுக்குள் டொயோட்டாவை முதல் இடத்தில் இருந்து வீழ்த்தி, உலக ஆட்டோமொபைல் சந்தையின் மன்னனாக மாற சபதம் எடுத்துள்ளது ஃபோக்ஸ்வாகன்.

 டூவீலர் சேல்ஸ்

கடந்த செப்டம்பர் மாதத்தில், 5,80,882 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து, முதல் இடத்தில் இருக்கிறது ஹீரோ மோட்டோகார்ப். அதேசமயம், ஹோண்டா டூ வீலர்ஸ் இந்தியா நிறுவனத்தின் விற்பனை அதிகரித்துக்கொண்டே இருப்பதைப் பார்த்தால், இன்னும் சில மாதங்களில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துக்கு ‘செக்’ வைத்துவிடும்போலத் தோன்றுகிறது. ஆம், கடந்த மாதம் 4,20,600 டூவீலர்களை விற்பனை செய்துள்ளது ஹோண்டா. டிவிஎஸ் நிறுவனம் 2,17,447 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்திருக்க, பஜாஜ் நிறுவனம் 1,99,251 பைக்குகளையே விற்பனை செய்துள்ளது. யமஹா செப்டம்பர் மாதம் 59,325 யூனிட்டுகளும், சுஸூகி 42,246 யூனிட்டுகளும் விற்பனை செய்துள்ளன. ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 27,540 பைக்குகளை விற்பனை செய்துள்ளது.

 நவம்பரில் நான்கு கார்கள்! பிஎம்டபிள்யூ திட்டம்!

மோட்டார் நீயூஸ்

2014 புதிய தலைமுறை  மினி காரின் 3-டோர், 5-டோர் மாடல்களை, வரும் நவம்பர் 19-ம் தேதி அன்று இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டுவருகிறது பிஎம்டபிள்யூ. 3-டோர் மாடல் ஏற்கெனவே இங்கு விற்பனையில் இருக்கும் மினி காருக்கு மாற்றாக விற்பனைக்கு வருகிறது. 5-டோர் மாடல் முற்றிலும் புத்தம் புதிய கார். 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் 4 சிலிண்டர், 1.5 லிட்டர் டர்போ டீசல் 3 சிலிண்டர் இன்ஜின் ஆப்ஷன்களுடன் இரண்டு மினி மாடல்களும் விற்பனைக்கு வரவிருக்கின்றன. மினி கார்களை விற்பனைக்குக் கொண்டுவந்த கையோடு, நவம்பர் 26-ம் தேதி M3 செடான், M4 Coupe பெர்ஃபாமென்ஸ் கார்களை விற்பனைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது பிஎம்டபிள்யூ

 ரோட்கிங்ஸ் மீட்!

மோட்டார் நீயூஸ்

இந்தியா முழுவதும் உள்ள ஜாவா - யெஸ்டி கிளப் உறுப்பினர்கள், ஆண்டுக்கு ஒருமுறை சந்திப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்த ஆண்டு ‘சதர்ன் ரைடு’ என்ற பெயரில் கடந்த அக்டோபர் 12-ம் தேதி ஊட்டியில் சந்தித்தனர். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஒடிஸா, மஹாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களில் இருந்து, 16 நகரங்களைச் சேர்ந்த ஜாவா - யெஸ்டி பைக் கிளப் உறுப்பினர்கள், மொத்தம் 170 பேர் இந்தச் சந்திப்பில் கலந்துகொள்ள, அன்றைய தினம் ஊட்டி முழுக்க தட் தட் சத்தம்தான். கிளப் உறுப்பினர்களிடம் பேசியபோது, ‘‘இங்கு வந்திருக்கும் 170 பேரையும் இணைக்கும் பாலமாக இந்த அமைப்பு இருக்கிறது. பைக்கின் அத்தனை பிரச்னைகளுக்கும் ஓரளவுக்கு தீர்வுகள் கண்டுபிடித்து, அதற்கான உதிரி பாகங்கள் கிடைப்பதற்கான நெட்வொர்க்கை ஏற்படுத்தியிருக்கிறோம். கிளாஸிக் ரசிகர்கள் இருக்கும் வரை எங்கள் பைக்குகளும் இருக்கும்’’ என்கின்றனர் உறுதியான குரலில்.

 -   ஜெ.சசீதரன் படம்;   மு.குகன்

 சென்னையில் யமஹா தொழிற்சாலை!

நவம்பர் மாத இறுதியில் துவக்க விழா காணவிருக்கிறது, யமஹாவின் சென்னை தொழிற்சாலை. ஆண்டுக்கு 4 லட்சம் இருசக்கர வாகனங்களைத் தயாரிக்கக்கூடிய இந்த தொழிற்சாலையில், யமஹா ஆல்ஃபா ஸ்கூட்டர் முதலில் தயாரிக்கப்படும். அதன்பிறகு, படிப்படியாக யமஹாவின் மற்ற பைக்குகளின் தயாரிப்பும் துவங்கும்.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism