ஸ்பெஷல்
Published:Updated:

சூப்பர் பைக் சீஸன் ரிட்டன்ஸ்!

சுரேன்

 1990-களின் இறுதியிலும், 2000-ம் ஆண்டின் பாதிவரையும் சூப்பர் பைக்குகள் இரண்டு

சூப்பர் பைக் சீஸன் ரிட்டன்ஸ்!

ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய தொழில்நுட்பத்துடன் வெளிவந்தன. புது மாடல்கள் இறங்க இறங்க உற்பத்தியாளர்கள் இடையே கடுமையான போட்டி எழுந்தது. 2008-ம் ஆண்டு ஏற்பட்ட உலகப் பொருளாதாரப் பின்னடைவால், சூப்பர் பைக்குகளின் விற்பனை சரிந்தது. இதனால் அட்டகாசமான, வியக்க வைக்கும் சூப்பர் பைக்குகளைத் தயாரித்து வந்த நிறுவனங்கள், சின்னச் சின்ன மாறுதல்களோடு நிறுத்திக்கொண்டனர். இப்போது, பொருளாதரப் பின்னடைவில் இருந்து மீண்டுவிட்டோம் என்பதைக் காட்டும் திருவிழாவாக, மிலன் மோட்டார் ஷோவைப் பயன்படுத்திக்கொண்டன பைக் தயாரிப்பு நிறுவனங்கள். டுகாட்டி, கவாஸாகி, யமஹா, ஹோண்டா என எல்லாத் தயாரிப்பு நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு புதுப் புது பைக்குகளை அறிமுகப்படுத்தி, சூப்பர் பைக் ஆர்வலர்களைப் பரவச நிலைக்குக் கொண்டுசென்றிருக்கின்றன.

KAWASAKI H2:

சூப்பர் பைக் சீஸன் ரிட்டன்ஸ்!

மிலன் மோட்டார் ஷோவில் அறிமுகமான கவாஸாகியின் இந்த H2 சூப்பர் பைக்கை, பார்த்ததில் இருந்து பித்துப் பிடித்தவர்களாகத் திரிகிறார்கள். இதை அல்ட்ரா எக்ஸ்க்ளூசிவ் பைக் என்கிறது கவாஸாகி. இந்த பைக் வேண்டும் என்று ஆர்டர் செய்தால்தான் பைக்கின் தயாரிப்பே துவங்கப்படும். கவாஸாகி H2 உச்சகட்ட வேக வெறியர்களுக்கு மட்டுமே! 998சிசி திறன்கொண்ட இந்த பைக், அதிபட்சமாக 200bhp சக்தியை வெளிப்படுத்தும். இது, மணிக்கு 300 கி.மீ வேகத்தை அசால்ட்டாகத் தாண்டும் என்கிறார்கள்.

யமஹா R1:

சூப்பர் பைக் சீஸன் ரிட்டன்ஸ்!

மிலனில் வாலன்டினோ ராஸியால் அறிமுகப்படுத்தப்பட்டது, யமஹா R1. பைக்கின் மொத்த எடையைக் குறைத்து, பவரை அதிகரித்து, ஏகப்பட்ட எலெக்ட்ரானிக் விஷயங்களைச் சேர்த்து, புதிய R1 பைக்கைக் கொடுத்திருக்கிறது யமஹா. இது தவிர, ரேஸ் பிரியர்களுக்காக R1M பைக்கையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். இன்லைன் 4 சிலிண்டர் இன்ஜின்கொண்ட புதிய R1, 20 bhp சக்திகூடி 200bhp பைக் கிளப்பில் இணைந்திருக்கிறது. புதிய எலெக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பம் மூலம், பட்டன் மூலமாகவே பைக்கின் வேகம், பிரேக்ஸ் உள்ளிட்டவற்றைக் கட்டுப்படுத்தும் பல விஷயங்கள் இந்த பைக்கில் சேர்க்கப்பட்டுள்ளன. அதனால், அசுர வேக பைக்கை ஓட்ட, பயப்பட வேண்டியது இல்லை.

HONDA RC213V-S:

சூப்பர் பைக் சீஸன் ரிட்டன்ஸ்!

மோட்டோ ஜீபியில் வெற்றிகளைக் குவித்துவரும் வரும் ஹோண்டா, தனது ரேஸ் பைக்கையே ரியர் வியூ கண்ணாடி, இண்டிகேட்டர் எல்லாவற்றையும் சேர்த்து RC213V-S என்ற பெயரில் ஸ்ட்ரீட் பைக்காக அறிமுகப்படுத்தியிருக்கிறது. கான்செப்ட் நிலையில் இருக்கும் இது, விற்பனைக்கு வந்தால் பெர்ஃபாமென்ஸில் பட்டையைக் கிளப்பும் என எதிர்பார்க்கலாம். ரேஸ் பைக்கான இதன் பவர் விபரங்களை ஹோண்டா இதுவரை வெளியிடவில்லை.

DUCATI 1299:

சூப்பர் பைக் சீஸன் ரிட்டன்ஸ்!

டுகாட்டி, தனது பனிகாலே சீரிஸ் பைக்குகளின் உச்சமாக புதிய 1299 பைக்கை மிலனில் அறிமுகப்படுத்தியது. 200bhp சக்தியைத் தாண்டியிருக்கிறது பனிகாலே. 1285சிசி சூப்பர் க்வாட்ரோ இன்ஜினைக்கொண்டிருக்கும் இந்த பைக், அதிபட்சமாக 205bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. கார்னரிங் ஏபிஎஸ், அதாவது பைக்கை வளைத்து ஓட்டும்போது சறுக்கிவிடாமல் தடுக்கும் ஏபிஎஸ் பிரேக்ஸ் வசதி இதில் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், யமஹா ஆர்1 பைக்கில் இருப்பதுபோலவே க்விக் ஷிஃப்ட் வசதியும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்படி கிளட்ச் பிடிக்காமலே கியர்களை மாற்ற முடியும். அதிக வேகத்தில் செல்லும்போது, கியர்களைக் கூட்டவும் குறைக்கவும் இது வசதியாக இருக்கும்.