ஸ்பெஷல்
Published:Updated:

ஹோண்டாவின் பெர்ஃபாமென்ஸ் பைக்!

ர.ராஜா ராமமூர்த்தி

 பைக் உலகில், 150சிசி-க்கு மேல் இருக்கும் செக்மென்ட்டுகளில் ஹோண்டா, தான் நினைத்த வெற்றியைப் பெற முடிந்ததே இல்லை. CB யூனிகார்ன், CB ட்ரிகர் போன்ற பைக்குகள், பஜாஜ் பல்ஸர் போல பெரிய அளவில் வெற்றியையோ, ரசிகர்களையோ பெறவில்லை. ஆனாலும், ப்ரீமியம் 150 சிசி செக்மென்ட்டில் இருக்கும் யமஹா FZ, சுஸூகி ஜிக்ஸர் பைக்குகளுக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு, ஹோண்டாவின் பார்வையை அதன் பக்கம் திருப்பியுள்ளது.
ஆம்! புதிய 160 சிசி பைக்கை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டுவரவிருக்கிறது ஹோண்டா.
யமஹா FZ-S V2.0, சுஸூகி ஜிக்ஸர் போன்ற பைக்குகளோடு இது நேரடியாக போட்டியிடும். பைக் பற்றிய டெக்னிக்கல் விபரங்களை இந்தக் கட்டுரை அச்சேறும் வரை ஹோண்டா வெளியில் சொல்லவில்லை. 

ஹோண்டாவின் பெர்ஃபாமென்ஸ் பைக்!

160சிசி பைக் இல்லாமல் வேறு ஒரு, ஹாட் சர்ப்ரைஸ் ஒன்றை ரெடியாக வைத்திருக்கிறது ஹோண்டா. வெளிநாடுகளில் இப்போது ஹோண்டா விற்பனை செய்யும் CBR 650F பைக்கும் இந்தியாவை முற்றுகை இட இருக்கிறது. 650சிசி பெர்ஃபாமென்ஸ் பைக்கான இது, 2015 மார்ச்சில் நம் சாலைகளை மிரட்ட வருகிறது. இன்-லைன் 4 சிலிண்டர், ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் கொண்ட CBR 650F பைக்கின் 650 சிசி இன்ஜின், 87 bhp சக்தியை 11,000 ஆர்பிஎம்-ல் அளிக்கிறது. 6.4kgm டார்க்கை 8,000 ஆர்பிஎம்-ல் அளிக்கிறது. 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்ட இந்த பைக்கில், ஏபிஎஸ் பிரேக்ஸ் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

ஏற்கெனவே அனல் பறக்க ஆரம்பித்திருக்கும் 600 சிசி செக்மென்ட், ஹோண்டா CBR 650F பைக்கின் வருகைக்குப் பின்பு, பொறி பறக்கும் என எதிர்பார்க்கலாம்.!