ஸ்பெஷல்
Published:Updated:

வரப்போகுது புது B க்ளாஸ்!

ர.ராஜா ராமமூர்த்தி

வரப்போகுது புது B க்ளாஸ்!

சில கலைஞர்கள், தங்கள் திறமைகளை நன்றாக வெளிப்படுத்தியும், உரிய அங்கீகாரம் கிடைக்காமல் இருப்பார்கள். அதைப் பற்றிக் கவலைப்படாமல், தன் வேலையைச் செய்துகொண்டும் இருப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு கலைஞன் மெர்சிடீஸ் பென்ஸ் B க்ளாஸ். இந்தியாவில் விற்பனைக்கு வந்த முதல் சொகுசு ஹேட்ச்பேக், இந்த கார்தான். ஃபேஸ்லிஃப்ட் மூலம் B க்ளாஸுக்கு ஒரு புதுப் பொலிவு கொடுத்துள்ளது பென்ஸ்.

பழைய B க்ளாஸ் காருடன் சேர்த்துவைத்துப் பார்த்தால்தான், ஃபேஸ்லிஃப்ட் மாடலில் உள்ள வித்தியாசங்கள் தெரியும். புதிய பம்பர்கள், புது க்ரில், புது ஹெட்லைட்ஸ் போன்றவை கொடுக்கப்பட்டிருந்தாலும், இவற்றின் டிஸைனில் பெரிய மாற்றங்கள் இல்லை என்பதால், வித்தியாசங்களைக் கண்டுபிடிப்பதில் சிரமம். காரின் உள்ளே டேஷ்போர்டு, இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் போன்றவற்றின் டிஸைனில் சின்ன மாற்றங்கள் உள்ளன. புதிய ஸ்டீயரிங் வீல் பார்க்கவும், திருப்பவும் நன்றாக இருக்கிறது. வெளிநாடுகளில் அளிக்கப்படும் ஆட்டோ எமெர்ஜென்சி பிரேக்கிங், லேன் டிபார்ச்சர் வார்னிங் போன்ற தொழில்நுட்பங்கள் இந்திய மாடலில் கிடையாது. காரணம், நம் நாட்டின் சட்ட திட்டங்கள் அப்படி! ஆனால், கிளைமேட் கன்ட்ரோல், ரியர் ஏ.சி வென்ட் போன்றவை சேர்க்கப்படும்.

வரப்போகுது புது B க்ளாஸ்!

நாம் டெஸ்ட் செய்த B200 CDI 4Matic மாடல் இந்தியாவுக்கு வராது என்றாலும், இங்கு விற்பனை செய்யப்படும் மாடலும் இதுவும் கிட்டத்தட்ட ஒன்றுதான். GLA காரில் இருக்கும் அதே 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் இங்கே 135 bhp சக்தியை அளிக்கிறது. ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் உண்டு. இந்தியாவில் விற்பனைக்கு வரும்போது இதன் சஸ்பென்ஷன் சற்று மாற்றியமைக்கப்படும். இன்ஜின் நல்ல இயக்கத்தைக்கொண்டிருந்தாலும், சத்தம் அதிகமாக வருகிறது. 7-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொஞ்சம் மந்தம்தான். ஓட்டுதல் தரம், கையாளுமை நன்றாக இருக்கிறது.

வரப்போகுது புது B க்ளாஸ்!

பிரச்னை என்னவென்றால், B க்ளாஸுக்குப் போட்டி மற்ற நிறுவனங்களிடம் இருந்து இல்லை. பென்ஸின் இதே MFA பிளாட்ஃபார்ம் கார்கள்தான். இந்திய வாடிக்கையாளர்கள் டிஸைனை அதிகம் மதிப்பிடுவார்கள். கீழே ‘சிக்’கென இருக்கும் A க்ளாஸ் யூத்களை இழுக்க, மேலே GLA, CLA (விரைவில் விற்பனைக்கு வரவிருக்கிறது) கார்கள் பலதரப்பட்ட வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் இழுக்கின்றன. இந்த அத்தனை கார்களின் மிகப் பெரிய ப்ளஸ் பாயின்ட், டிஸைன். இதே ப்ளஸ் பாயின்ட்தான் B க்ளாஸ் காரில் மைனஸ் பாயின்ட்டாக இருக்கிறது. ஆனால், டிஸைனை மறந்து விட்டு, பேக்கேஜாகப் பார்த்தால், B க்ளாஸ் கார் நல்ல தேர்வு. ஆனால், இந்தக் கலைஞனுக்கு, அழகில் அவார்டு வாங்கும் அளவுக்கு, முன்னேற்றம் இல்லை

வரப்போகுது புது B க்ளாஸ்!

!