ஸ்பெஷல்
Published:Updated:

கண்டுபிடிக்க முடியாத மாற்றங்கள்!

புதிய மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட்ர.ராஜா ராமமூர்த்தி

புதிய ஹூண்டாய் i20 விற்பனைக்கு வந்திருக்கும் நிலையில், மாருதி ஸ்விஃப்ட் காருக்கு, ஓர் அப்டேட் தேவைதான். அதனால், ஸ்விஃப்ட் காரை ஃபேஸ்லிஃப்ட் செய்து விற்பனைக்குக் கொண்டுவந்திருக்கிறது மாருதி. ஃபேஸ்லிஃப்ட் என்பதற்காக ரொம்பவும் மெனக்கெடாமல், மிக முக்கியமான மாற்றங்களை மட்டுமே செய்திருக்கிறது மாருதி.

கண்டுபிடிக்க முடியாத மாற்றங்கள்!

புது ஸ்விஃப்ட்டுக்கும், பழைய காருக்கும் டிஸைன் மாற்றங்கள் மிக மிகக் குறைவு. முன்பக்க பம்பர் புதிது. இதில் இருக்கும் பனி விளக்குக் குடுவைகளுக்கு அருகில், சில்வர் வண்ணப் பட்டைகள் உள்ளன. வெளிநாடுகளில் இந்த சில்வர் பட்டைகளுக்குப் பதிலாக LED டே டைம் ரன்னிங் லைட்டுகள் இருக்கும். ஆனால், இந்திய மாடலில் அவை இல்லை. விலை உயர்ந்த Z வேரியன்ட்டில் புதிய டிஸைன் 15-இன்ச் அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சிவப்பு, வயலெட், டார்க் க்ரே ஆகிய வண்ணங்களில் இப்போது புதிய ஸ்விஃப்ட் கிடைக்கிறது.
 
காரின் வெளிப்புறம் செய்யப்பட்டுள்ள மாற்றங்களைக் காட்டிலும், உள்ளே நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. விலை குறைந்த ‘L’ வேரியன்டில் இப்போது அட்ஜஸ்டபிள் ரியர் ஹெட்ரெஸ்டுகளும், 60:40 ஸ்ப்ளிட் டைப் பின்னிருக்கைகளும், புதிய சீட் ஃபேப்ரிக்கும் அளிக்கப்படுகின்றன. LXi(o) வேரியன்ட்டில் முன்பக்கம் பவர் விண்டோஸ், ரிமோட் லாக்கிங் போன்றவை உள்ளன. ‘V’ வேரியன்ட்டில் இப்போது ஆடியோ ப்ளேயரும், எலெக்ட்ரிகல் ஃபோல்டபிள் ரியர் வியூ மிரர்களும் சேர்க்கப்பட்டுள்ளன. VDi டீசல் மாடலில் ABS அளிக்கப்பட்டாலும், அதே வேரியன்ட்டின் பெட்ரோல் மாடலில் ABS இல்லை. இதுவரை ஸ்விஃப்ட்டில் மிஸ் செய்யப்பட்ட ப்ளூ-டூத் கனெக்டிவிட்டி வசதி, இப்போது Z வேரியன்ட்டில் கொடுக்கப்படுகிறது.  மேலும், ரியர் பார்க்கிங் சென்ஸார், புஷ் பட்டன் ஸ்டார்ட், கீ-லெஸ் என்ட்ரி, உயர்தர சீட் ஃபேப்ரிக் போன்றவையும் சேர்க்கப்பட்டுள்ளன.

கண்டுபிடிக்க முடியாத மாற்றங்கள்!

மாருதி ஸ்விஃப்ட் டீசல், பெட்ரோல் என இரண்டு இன்ஜின்களிலுமே மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 1.3 லிட்டர் டீசல் இன்ஜினில் ECU மாற்றியமைக்கப்பட்டுள்ளது. உராய்தல் குறைக்கப்பட்டுள்ளதால், டீசல் இன்ஜினின் ARAI மைலேஜ் 22.9 கி.மீ-யில் இருந்து லிட்டருக்கு 25.2 கி.மீ வரை அதிகரித்துள்ளது.

1.2 லிட்டர் K12 பெட்ரோல் இன்ஜினின் ARAI மைலேஜ், இப்போது லிட்டருக்கு 20.4 கிமீ. இது, பழைய காரைவிட சுமார் 2 கி.மீ அதிகம். பெட்ரோல் இன்ஜின் முன்பைவிட 2.7 bhp குறைவாக 83.1 bhp சக்தியை அளிக்கிறது. டார்க் 0.1 kgm அதிகரித்து 11.72 kgm-ஆக உள்ளது.  மொத்தத்தில், மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலைகள், பழைய காரில் இருந்து சுமார் 17,000 ரூபாயில் இருந்து 24,000 வரை அதிகமாக இருக்கிறது. முன்பைவிட அதிக வசதிகள் சேர்க்கப்பட்டிருந்தாலும், ஹூண்டாய் செட் செய்துள்ள பெஞ்ச்மார்க் அளவுக்கு ஸ்விஃப்ட் முன்னேற்றப்படவில்லை.

சமீபத்தில் Euro NCAP கிராஷ் டெஸ்ட்டில் பூஜ்யம் வாங்கியும், ஃபேஸ்லிஃப்ட் மாடலில் கூடுதல் பாதுகாப்பு வசதிகளை அளிக்கவில்லையே... ஏன் மாருதி?

கண்டுபிடிக்க முடியாத மாற்றங்கள்!