ஸ்பெஷல்
Published:Updated:

ப்ரீமியம் ஹெட்ச்பேக் மினி எஸ்யூவி!

சார்லஸ்

 ஹூண்டாய் எலீட் ஐ20 காருக்குப் போட்டியாவும், ஃபோர்டு எக்கோஸ்போர்ட் காருக்குப் போட்டியாகவும், விறுவிறுவென தனது போட்டியாளர்களைத் தயார் செய்துவருகிறது மாருதி.

ப்ரீமியம் ஹெட்ச்பேக் மினி எஸ்யூவி!

ஹூண்டாயின் எலீட் ஐ20 பிரீமியம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டைப் பிடிக்க, அடுத்தபடியாக ஹோண்டாவும் தனது ஜாஸ் காரை மீண்டும் களம் இறக்க இருக்கிறது. இந்தியாவின் நம்பர் ஒன் கார் தயாரிப்பாளரான மாருதிக்கு, இந்தப் போட்டியைச் சமாளிக்க கார்கள் இல்லை. அதனால், ஸ்விஃப்ட்டை இன்னும் கொஞ்சம் ஸ்போர்ட்டியாக டிஸைன் செய்து, அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்குக் கொண்டுவருகிறது மாருதி.

முன்பக்கத்தைப் பொறுத்தவரை, ஸ்விஃப்ட் போலவே இருக்கும் இந்த காரின் பின்பக்கத்தில்தான் அதிரடி மாற்றங்கள் இருக்கின்றன. இதுவரை மாருதி கார்களில் பார்த்திராத டிஸைனுடன் காரின் பின்பக்கம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஸ்விஃப்ட்டைவிட அகலமாகவும், நீளமாகவும் இருக்கிறது மாருதியின் இந்த பீரிமியம் ஹேட்ச்பேக் கார். பெரிய அலாய் வீல் மற்றும் டே டைம் லைட்ஸ் இந்த காரில் அறிமுகப்படுத்துகிறது மாருதி.

ப்ரீமியம் ஹெட்ச்பேக் மினி எஸ்யூவி!

ஸ்டீயரிங் வீலிலேயே ஆடியோ கன்ட்ரோல் உள்ளிட்ட பீரிமீயம் காருக்கான அத்தனை வசதிகளும் இதில் இருக்கும் என எதிர்பார்க்கலாம். காரின் உள்ளே அருவிபோல சென்டர் கன்ஸோலை டிஸைன் செய்திருக்கிறது மாருதி சுஸூகி. ஸ்விஃப்ட்டில் இருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் சியாஸில் இருக்கும் 1.4 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்களுடனும், 1.3 லிட்டர் மல்ட்டிஜெட் டீசல் இன்ஜினுடனும் விற்பனைக்கு வரவிருக்கிறது இந்த பிரீமியம் ஹேட்ச்பேக்.
எக்கோஸ்போர்ட்டுக்குப் போட்டியாக, மாருதி களம் இறக்கும் மினி எஸ்யுவிதான் ஆன்லைனில் இப்போது செம ஹாட் நியூஸ். 4 மீட்டர் எஸ்யுவியான மாருதியின் இந்த கார், கிட்டத்தட்ட எக்கோஸ்போர்ட் போலவே இருக்கிறது. காரின் முன்பக்கம் சுஸூகியின் விட்டாராவைப் போல இருக்கும் என்கிறார்கள். மாருதியின் மினி எஸ்யுவி 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின்போது விற்பனைக்கு வரும்!