ஸ்பெஷல்
Published:Updated:

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

ஹீரோ மோட்டோகார்ப் நான்காவது  தொழிற்சாலை!

ராஜஸ்தானில் உள்ள நீம்ரானாவில் தன்னுடைய நான்காவது தொழிற்சாலையைத் துவக்கியுள்ளது ஹீரோ மோட்டோகார்ப். 2020-ம் ஆண்டுக்குள் 100 மில்லியன் இருசக்கர வாகனங்களைத் தயாரிக்க வேண்டும் என்று மும்முரமாக இருக்கிறது அந்த நிறுவனம். ஏற்கெனவே, தருஹெரா, குர்கான், ஹரித்வார் ஆகிய இடங்களில் தொழிற்சாலைகளை வைத்திருக்கிறது ஹீரோ. இந்த மூன்று தொழிற்சாலைகளும் மொத்தமாக ஆண்டுக்கு 76 லட்சம் இரு சக்கர வாகனங்களைத் தயாரிக்கிறது. நீம்ரானா தொழிற்சாலையில் ஓர் ஆண்டுக்கு 7.5 லட்சம் இரு சக்கர வாகனங்களைத் தயாரிக்க முடியும். 1,050 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தத் தொழிற்சாலையில், எதிர்காலத்தில் ப்ரீமியம் பைக்குகளும் தயாரிக்கப்படும் என்கிறார்கள்.

கவாஸாகி ER-6n & கவாஸாகி Z250!

மோட்டார் நியூஸ்

2.99 லட்சம் ரூபாயில் இந்தியாவிலேயே விலை குறைந்த கவாஸாகி பைக்காக விற்பனைக்கு வந்திருக்கிறது Z250. இதன் 249 சிசி, பேரலல் ட்வின், லிக்விட் கூல்டு, 4-ஸ்ட்ரோக் இன்ஜின் 31hp சக்தியை அளிக்கிறது. 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது இந்த பைக். ER-6n பைக்கில் இருப்பது 649 சிசி லிக்விட் கூல்டு, 4 ஸ்ட்ரோக் இன்ஜின். இது, அதிகபட்சமாக 71 hp சக்தியை அளிக்கிறது. ER-6n பைக்கின் விலை 5 லட்சம் ரூபாயைத் தாண்டுகிறது.

ஃபோர்டு ஸ்பேர் பார்ட்ஸ் - இனி எளிதாகக் கிடைக்கும்!

மோட்டார் நியூஸ்

ஃபோர்டு இந்தியா, தன்னுடைய கார்களுக்கான ஸ்பேர் பார்ட்ஸ்களை ஓப்பன் மார்க்கெட்டில் விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளதால், இனி ஃபோர்டு கார்களை சர்வீஸ் செய்வது எளிதாக இருக்கும். ஃபோர்டு கார்கள் சர்வீஸ் சென்டரிலேயே ஸ்பேர் பார்ட்ஸ் தட்டுப்பாடு காரணமாகக் காத்திருப்பது குறையும். உதிரி பாகங்களின் விலையும் சரியும், தரமும் உயரும் என்றும் எதிர்பார்க்கலாம். டெல்லியில் இருக்கும் எமினென்ட் ஆட்டோ பார்ட்ஸ் நிறுவனத்தை ஃபோர்டு தனது அதிகாரப்பூர்வ விநியோகஸ்தராக நியமித்து, முதல் அடியை எடுத்து வைத்துள்ளது. விரைவில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கும் ஸ்பேர் பார்ட்ஸ் விநியோகஸ்தர்களை நியமிக்க இருக்கிறார் கள்.

மூன்று புதிய பைக்குகளுடன் ஹார்லி!

மோட்டார் நியூஸ்

ஸ்ட்ரீட் கிளைட், CVO லிமிடெட், ப்ரேக்-அவுட் என மூன்று புதிய பைக்குகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஹார்லி டேவிட்சன் இந்தியா. இந்த மூன்று பைக்குகளில், ப்ரேக்-அவுட் மட்டுமே இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்பட்டு 16.28 லட்சம் ரூபாய்க்கு விற்பனைக்கு வருகிறது. ‘சாஃப்ட் டெயில்’ பைக்கான இது, ஸ்போர்ட்டியான ஹேண்டில்பார்களும், தோற்றமும் கொண்டிருக்கிறது  ப்ரேக்-அவுட். நைட்-ராடு பைக்கைப்போலவே பின்பக்கம் 240  இருக்கிறது. 1,690 சிசி V-ட்வின் இன்ஜினைக்கொண்ட இது, 13.25 kgm டார்க்கை அளிக்கிறது.

எண்ணற்ற கஸ்டமைசேஷன் ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு வந்திருக்கும் ஃபுல் சைஸ் டூரர், ஹார்லி டேவிட்சன் CVO லிமிடெட்.  இதன் விலை 50 லட்சம் ரூபாயைத் தாண்டுகிறது. 1,801 சிசி V-ட்வின் இன்ஜினைக்கொண்ட இது,  15.90 kgm டார்க்கை அளிக்கிறது.
ஹார்லி டேவிட்சன் டூரிங் பைக்கான ஸ்ட்ரீட் க்ளைட் ஸ்பெஷல் பைக்கின் விலை 29.7 லட்சம் ரூபாய். 1,690 சிசி இன்ஜின் 14.07 kgm டார்க்கை அளிக்கிறது. வழக்கமான ஸ்ட்ரீட் கிளைட் பைக்கில் ஏர் சஸ்பென்ஷன் இருக்க, இந்த ஸ்பெஷல் மாடலில், முழுவதும் அட்ஜஸ்ட் செய்துகொள்ளக்கூடிய ஹைட்ராலிக் சஸ்பென்ஷன் இருக்கிறது.

கடந்த அக்டோபர் மாதம்  விற்பனையில் சரிவைச் சந்தித்த 10 கார்கள் இவை. 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாத விற்பனையுடன், அக்டோபர் மாத கார் விற்பனைக்கான ஒப்பீடு இது.

மோட்டார் நியூஸ்

சிட்டியை வீழ்த்தியது சியாஸ்!

தீபாவளி சமயமாக இருந்தாலும், கடந்த அக்டோபர் மாதத்தில் கார்களின் விற்பனை 3 சதவிகிதம் சரிந்தது. மாருதியின் மொத்த விற்பனை 1 சதவிகிதம்தான் கூடியது என்றாலும், மாருதி  மகிழ்ச்சியடைந்தது. காரணம், சியாஸ் - ஹோண்டா சிட்டி காரை விற்பனையில் முந்தியிருப்பதுதான். ஹோண்டா சிட்டி 5,120 கார்கள் விற்பனையாக, மாருதியின் சியாஸ் 6,345 கார்கள் விற்பனையாகி இருக்கின்றன.

டூவீலர் விற்பனை!

அக்டோபர் மாதத்தில் 5,50,688 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து, முன்னிலையில் இருக்கிறது ஹீரோ மோட்டோகார்ப். ஹோண்டா நிறுவனம் 3,61,670 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது. டிவிஎஸ்-க்கும், பஜாஜுக்கும்தான் செம சேஸிங். டிவிஎஸ் 2,04,294 பைக்குகளை விற்பனை செய்திருக்க, பஜாஜ் 2,04,281 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. யமஹா 54,698 வாகனங்களையும், ராயல் என்ஃபீல்டு 25,510 பைக்குகளையும் விற்பனை செய்துள்ளது.