Published:Updated:

யாருக்கும் சொல்லாதீங்க!

யாருக்கும் சொல்லாதீங்க!

யாருக்கும் சொல்லாதீங்க!

யாருக்கும் சொல்லாதீங்க!

Published:Updated:

தள்ளிக்கொண்டே போன பல்ஸர் 200SS பைக்கை, களம் இறக்க தேதி நிச்சயித்துவிட்டது பஜாஜ். பிப்ரவரி மாதவாக்கில் விற்பனைக்கு வருகிறது பல்ஸர் 200SS. இதன் விலை 1.25 லட்சம் ரூபாய்க்குள் இருக்கும். அதற்கு அடுத்தபடியாக, 400SS பைக் விற்பனைக்கு வருகிறது. இதன் விலை 2  லட்சம் ரூபாயைத் தொடும். இவற்றுக்குப் பின்பு, புதிய டிஸைனுடன் பிளாட்டினாவை விற்பனைக்குக் கொண்டுவருகிறது பஜாஜ். 100சிசி பைக்கான இதன் விலை, 45,000 ரூபாய்க்குள் இருக்கும்.

யாருக்கும் சொல்லாதீங்க!

குஜராத்தில் ஃபோர்டு அமைத்திருக்கும் புதிய தொழிற்சாலையில், ட்ரையல் தயாரிப்புப் பணிகள் துவங்கிவிட்டன. 2015-ம் ஆண்டுக்கான புதிய தலைமுறை ஃபிகோ, இந்தத் தொழிற்சாலையில் இருந்து ஏப்ரல் மாதவாக்கில் வெளிவர இருக்கிறது. அஹமதாபாத் அருகே உள்ள சனந்த் எனும் இடத்தில் அமைந்துள்ள ஃபோர்டின் இந்தப் புதிய தொழிற்சாலையில், ஆண்டுக்கு 2.40 லட்சம் கார்களையும், 2.70 லட்சம் இன்ஜின்களையும் தயாரிக்கத் திட்டமிட்டிருக்கிறது ஃபோர்டு.

ஹூண்டாய், இந்தியாவில் கார்களை விற்பனை செய்யத் துவங்கி 16 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், தொடர்ந்து மாருதிக்கு அடுத்த இடத்திலேயே இருப்பதால், 2015-ம் ஆண்டு முதல் புதிய வியூகத்தை வகுத்திருக்கிறது ஹூண்டாய். இனி, ஆண்டுக்கு மூன்று கார்கள் என்பதுதான் ஹூண்டாய் திட்டம். மூன்று கார்களுமே அந்த செக்மென்ட்டில் பெஞ்ச் மார்க் கார்களாக இருக்கும் விதத்தில் தயாரிக்கப்பட்டிருக்கும் என்கிறது ஹூண்டாய். எலீட் i20 கிராஸ், மினி எம்பிவி மற்றும் மினி எஸ்யுவி ஆகியவைதான், இந்த ஆண்டுக்கான மூன்று புதிய கார்கள்.

டொயோட்டா நிறுவனம் டெல்லி தொழிலதிபர் ஒருவருக்கு 25 லட்சம் ரூபாய் நஷ்டஈடு கொடுத்திருக்கிறது. டெல்லி தொழிலதிபரின் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார், கடந்த 2012-ம் ஆண்டு விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் கார் டிரைவர் மரணம் அடைந்தார். விபத்தின்போது காற்றுப்பைகள் வேலை செய்யவில்லை என உச்ச நீதிமன்றத்தில் தொழிலதிபர் வழக்கு தொடர, இரண்டு ஆண்டு கால சட்டப் போராட்டத்துக்குப் பிறகு, 25 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்குவதாக உச்ச நீதிமன்றத்தில் சொல்லியிருக்கிறது டொயோட்டா.