Published:Updated:

இது ஒரிஜினல் ரேஸ் பைக்!

ரீடர்ஸ் ரெவ்யூ TRIUMPH DAYTONA 657Rர.ராஜா ராமமூர்த்தி

இது ஒரிஜினல் ரேஸ் பைக்!

ரீடர்ஸ் ரெவ்யூ TRIUMPH DAYTONA 657Rர.ராஜா ராமமூர்த்தி

Published:Updated:

சிறந்த ரேஸ் ட்ராக் பைக் எது என்று கேட்டால், பலரும் 1,000 சிசி பைக்குகளைத்தான் சொல்வார்கள். ஆனால்,  என்னைப் பொறுத்தவரைன் ட்ரையம்ப் நிறுவனத்தின் டேடோனா 675R பைக்கைத்தான் சிறந்த ரேஸ் பைக்” என்கிறார் வினோத். TEN10 ரேஸிங் டீமை நடந்திவரும் வினோத், சென்னையின் முதல் ட்ரையம்ப் டேடோனா பைக் உரிமையாளர்.

இது ஒரிஜினல் ரேஸ் பைக்!

ஏன் டேடோனா 675R?

நீண்ட நாட்களுக்குப் பிறகு, ட்ராக்கில் பட்டையைக் கிளப்பும் ஒரு பைக் வாங்க வேண்டும் எனத் தோன்றியது. ட்ராக்கில் ஓட்ட வேண்டும் என்றாலே எல்லாரும் 1,000 சிசி பைக் வாங்கிவிடுகிறார்கள். ஆனால், நேரான பகுதிகளில் மட்டும்தான் 1,000 சிசி பைக் வேகமாக இருக்கும். வளைவுகளில் வளைத்துத் திருப்பி ஓட்ட ஹேண்ட்லிங் மிகவும் முக்கியம். அந்த வகையில் பார்க்கும்போது, டிரையம்ப் 675R பைக் ரொம்பவே ஸ்பெஷல். ஏனென்றால், வழக்கமாக ஒரு ஸ்போர்ட்ஸ் பைக்கை வாங்கி, அதை ரேஸ் ட்ராக்குக்கு  ஏற்ப ரெடி செய்ய, நிறைய பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும். அதற்கு லட்சங்களில் பணம் செலவாகும். ஆனால், பக்கா ட்ராக் ரெடி பைக்காகக் கிடைப்பது டேடோனா 675Rதான். Ohlins சஸ்பென்ஷன், Brembo ப்ரேக்ஸ், ஸ்டீயரிங் டாம்பர், ட்ராக் டயர்கள் என இது பக்கா ரேஸ் பைக்.

டிரையம்ப் டேடோனாவின் நேரடிப் போட்டியாளர்கள் ஹோண்டா சிபிஆர்600RR, யமஹா R-6, கவாஸாகி ZX-6R. இவற்றையும் நான் ஓட்டியிருக்கிறேன். அதை வைத்து ஒப்பிடும்போது, பவர்-டு-வெயிட் ரேஷியோ, சைஸ் ஆகியவற்றில் டேடோனா 675Rதான் நன்றாக இருக்கிறது. சிபிஆர்600RR ரொம்ப பெரிய பைக். யமஹா R-6 பைக்கை இன்னும் அப்டேட் செய்யாமல் வைத்திருக்கிறது யமஹா. அது ரொம்பவே எக்ஸ்ட்ரீம் ட்ராக் பைக். மேலும், இந்த பைக்குகள் எதுவுமே இந்தியாவில் விற்பனைக்கு இல்லை. டேடோனா 675R அப்-டு-டேட்டாகவும் இருக்கிறது, இந்தியாவிலும் கிடைக்கிறது என்பதால் வாங்கினேன்.

டீலர்ஷிப் அனுபவம்:

சென்னையில் உள்ள டிரையம்ப் டீலர் ஹார்பர் சிட்டி மோட்டார்ஸில் முதல் ஆளாக, ஜூன் மாதம் இந்த பைக்கை புக் செய்தேன். டிசம்பர் மாதம்தான் டெலிவரி கிடைத்தது. ஐந்து மாதங்கள் காத்திருக்கச் செய்தது கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால், இவ்வளவு மாதங்கள் ஆகும் என முன்பே டீலர்ஷிப்பில் சொல்லிவிட்டார்கள். டெலிவரி கிடைக்கும் வரை, ‘பைக் எங்கு இருக்கிறது; துறைமுகத்துக்கு வந்துவிட்டதா’ என்பதை அப்டேட் செய்துகொண்டே இருந்தார்கள். சர்வீஸ், ஸ்பேர் சப்போர்ட் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன். 

இது ஒரிஜினல் ரேஸ் பைக்!

ப்ளஸ்:

பைக்கின் ஃபிட் அண்டு ஃபினிஷ் ரொம்பவே நன்றாக இருக்கிறது. நகர டிராஃபிக்கிலும் வளைத்துத் திருப்பி ஓட்டுவதற்கு வசதியாக இருக்கிறது. மிகப் பெரிய பைக்கை ஓட்டுகிறோம் என்கிற ஃபீல் இல்லாமல், செம காம்பேக்ட்டாகவும், எடை குறைவாகவும் இருக்கிறது டேடோனா.  உலகிலேயே சிறந்த சஸ்பென்ஷன் என்று புகழப்படும் Ohlins சஸ்பென்ஷன் ரெடிமேடாக இந்த பைக்கில் கிடைப்பது பெரிய ப்ளஸ்.  இந்தியாவில் இப்போதைக்கு இந்த பைக்குக்குப் போட்டியே இல்லை. எனவே, கொடுக்கும் காசுக்கு ஏற்ற மதிப்பைத் தரும் பைக் டேடோனா 675R.

ரேஸிங் அனுபவம் இல்லாதவர்களால் இந்த பைக்கை எடுத்தவுடன் கையாள முடியாது. ஏற்கெனவே சொன்னதுபோல, 600சிசி பைக்தான் ட்ராக்கின் வளைவுகளில் வேகமாக இருக்கும். டேடோனா 675R போன்ற ஒரு துல்லியமான பைக்கை, வளைவுகளில் அனுபவம் இல்லாதவர்களால் கட்டுப்படுத்த முடியாது. 250 சிசி பைக்கில் இருந்து படிப்படியாக ட்ராக்கில் அனுபவம் பெற்றுதான் 675R போன்ற பைக்குகளை ஓட்ட ஆரம்பிக்க வேண்டும் என்பது என் அட்வைஸ். இதன் திராட்டிலை பேலன்ஸ் செய்யக் கற்றுக்கொள்ள வேண்டும். ரேஸிங் சஸ்பென்ஷனை செட்டப் செய்ய தெரிய வேண்டும். இந்த அடிப்படைகளைத் தெரிந்துகொள்ளாமல் வாங்கினால், பைக்கே பிடிக்காமல் போகக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

இது ஒரிஜினல் ரேஸ் பைக்!

மைனஸ்:

மைனஸ் எனச் சொல்ல வேண்டும் என்றால், எல்லா சூப்பர் பைக்குகளுக்கும் சொல்கிற விஷயம்தான். சென்னை போன்ற ட்ராஃபிக்கான நகரங்களில் 675R பைக்கின் இன்ஜின் மிக எளிதாக ஓவர்ஹீட் ஆகிவிடும். இந்த பைக்கை முழுமையாக அனுபவிக்கச் சிறந்த இடம் ரேஸ் டிராக் மட்டும்தான்.

படங்கள்: ப.சரவணகுமார், தி.ஹரிஹரன்