Published:Updated:

பட்ஜெட் ராக்கெட்! கவாஸாகி Z250

ஃபர்ஸ்ட் டிரைவ் KAWASAKI Z750ஆதவன்

பட்ஜெட் ராக்கெட்! கவாஸாகி Z250

ஃபர்ஸ்ட் டிரைவ் KAWASAKI Z750ஆதவன்

Published:Updated:

இந்தியாவில் விலை குறைந்த கவாஸாகி பைக்காக விற்பனைக்கு வந்துள்ளது கவாஸாகி Z250. என்ட்ரி லெவல் ஸ்போர்ட்ஸ் பைக்குகளில், சிறந்த பெர்ஃபாமென்ஸைத் தந்த நின்ஜா 250R, நின்ஜா 300 போல Z250 பைக்கும் அசத்துமா?

பட்ஜெட் ராக்கெட்! கவாஸாகி Z250

டிஸைன்

நேக்கட் பைக்குகளில், கெத்தான பைக் என்றால், அது Z250 பைக்தான். கரடுமுரடான டிஸைனும், ஷார்ப்பான பாடி பேனல்களும் பார்த்ததுமே மனதில் ஒட்டிக்கொள்கின்றன. கவாஸாகி பைக்குகளைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு இது Z800 பைக்போலத் தெரியலாம். இதன் டூயல் ஹெட்லைட்ஸ், பாதுகாப்புக்காக பகலிலும் ஒளிர்கிறது. இதன் ஹெட்லைட்ஸை ஆஃப் செய்ய முடியாது. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் அனலாக் டேக்கோ மீட்டரின் ரெட் லைன், 13,000 ஆர்பிஎம்-ல் தொடங்குகிறது. இது, நின்ஜா 300 பைக்கில் இருக்கும் அதே இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்தான்.

பட்ஜெட் ராக்கெட்! கவாஸாகி Z250

இதன் ஃப்யூல் டேங்க் டிஸைன் நின்ஜா 300 மாடல்போல இருக்கிறது. பைக்கின் ஃபேரிங், Z என்ற எழுத்தை நினைவூட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்ப்ளிட் டைப் சீட்கள் கொடுக்கப் பட்டுள்ளன. பைக்கின் ஒட்டுமொத்தத் தரம் மிகவும் நன்றாக இருக்கிறது.

இன்ஜின்

Z250 பைக்கின் அதிக விலைக்குக் காரணம், இதன் ட்வின் சிலிண்டர் இன்ஜின் தரும் அனுபவம். நின்ஜா 250R இன்ஜின்தான் Z250 பைக்கிலும் இருக்கிறது. ஆனால், சிட்டி டிராஃபிக்குக்கு ஏற்ற வகையில் டியூன் செய்திருக்கிறார்கள். 249 சிசி, 4-ஸ்ட்ரோக், பேரலல்-ட்வின், லிக்விட் கூல்டு இன்ஜின் 31.1 bhp சக்தியை 11,000 ஆர்பிஎம்-லும் 2.2kgm டார்க்கை 10,000 ஆர்பிஎம்-லும் அளிக்கிறது. 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வேகமாக ஷிஃப்ட் ஆகிறது.

பட்ஜெட் ராக்கெட்! கவாஸாகி Z250

குறைந்த ஆர்பிஎம்-ல் இந்த இன்ஜினின் டார்க் டெலிவரி சிறப்பாக இல்லை. இதனால், பார்க்க ஸ்ட்ரீட் பைக்கைப்போல இருந்தாலும், இன்ஜின் இன்னும் அதிக டார்க்கை, குறைந்த ஆர்பிஎம்-ல் வெளிப்படுத்துமாறு டியூன் செய்திருக்கலாம். இரண்டாவது கியரில் மணிக்கு 20 கி.மீ வேகத்தில் இருந்து 60 கிமீ வரை ஆக்ஸிலரேட் செய்ய 4.44 விநாடிகள் எடுத்துக்கொள்கிறது. மூன்றாவது கியரில், இதே ஆக்ஸிலரேஷனுக்கு 6.31 விநாடிகள் ஆகிறது. 4,000 ஆர்பிஎம் தாண்டிவிட்டால், மிட் ரேஞ்ச் பெர்ஃபாமென்ஸ் சூப்பர். 0-100 கி.மீ வேகத்தை 8.42 விநாடிகளில் அடைகிறது Z250.

ஓட்டுதல், கையாளுமை

நின்ஜா 300 பைக்கை அடிப்படையாகக்கொண்டதுதான் Z250-ன் டியூப்லர் ஸ்டீல் சேஸி. முன் பக்கம் 37 மிமீ டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளையும், பின் பக்கம் மோனோ ஷாக் சஸ்பென்ஷனையும்கொண்டுள்ளது. சிங்கிள் பீஸ் ஹேண்டில்பார் முன்னே தள்ளி அமைக்கப்பட்டிருப்பதாலும், ஃபுட் ரெஸ்ட்கள் பின்னால் தள்ளி அமைக்கப்பட்டிருப்பதாலும் ரைடிங் பொசிஷன் ஸ்போர்ட்டியாக இருக்கிறது. ஆனால், உயரமானவர்களுக்கு இது வசதியாக இருக்காது.

பட்ஜெட் ராக்கெட்! கவாஸாகி Z250

நின்ஜா 300 பைக்கைவிட 6 கிலோ எடை குறைவு என்பதால், சட்டென்று வளைந்து திரும்புகிறது Z250. ரொம்பவும் உழைக்காமலேயே பைக்கை வளைத்துச் சாய்த்து ஓட்ட முடிகிறது. சஸ்பென்ஷன் சற்று இறுக்கமாகவே இருக்கிறது. 290 மிமீ முன்பக்க டிஸ்க் பிரேக்கும், 220 மிமீ பின்பக்க டிஸ்க் பிரேக்கும் நன்றாகவே இயங்குகின்றன. மணிக்கு 80 கி.மீ வேகத்தில் இருந்து

பட்ஜெட் ராக்கெட்! கவாஸாகி Z250

முழுமையாக நிற்க 30.25 மீட்டர்கள் எடுத்துக்கொள்கிறது Z250. ஆனால், ABS பிரேக்கை ஆப்ஷனலாகக்கூட கொடுக்கவில்லையே. ஏன் கவாஸாகி?

தினசரி பயன்படுத்தும் அளவுக்கு ஸ்போர்ட்டியாகவும் பிராக்டிக்கலாகவும் இருக்கிறது Z250 பைக். ஆனால், டிராஃபிக்கில் இதன் டார்க் டெலிவரி இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கலாம். விலை குறைந்த சிங்கிள் சிலிண்டர் கேடிஎம் பைக்குகள், இந்த செக்மென்ட்டில் சிங்கங்களாக உறுமிக் கொண்டிருக்கும் நிலையில், 3 லட்சம் விலை கொஞ்சம் ஓவர்!

பட்ஜெட் ராக்கெட்! கவாஸாகி Z250