Published:Updated:

நிஸானுக்கு ப்ளஸ்ஸா, மைனஸ்ஸா? கோ ப்ளஸ்...

ஃபர்ஸ்ட் டிரைவ் DATSUN GO +சார்லஸ்

நிஸானுக்கு ப்ளஸ்ஸா, மைனஸ்ஸா? கோ ப்ளஸ்...

ஃபர்ஸ்ட் டிரைவ் DATSUN GO +சார்லஸ்

Published:Updated:

இந்தியா போன்ற பெரிய குடும்ப அமைப்புகள்கொண்ட  நாடுகளுக்கு, எம்பிவி கார்கள்தான் தேவை என்பதை கொஞ்சம் லேட்டாகவே புரிந்துகொண்டார்கள் கார் தயாரிப்பாளர்கள். 15 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் அசைக்க முடியாத காராக முதல் இடத்தில் இருக்கிறது டொயோட்டா இனோவா. அதனால், பட்ஜெட் ஃபேமிலி கார் எது என்பதில்தான் போட்டி.

நிஸானுக்கு ப்ளஸ்ஸா, மைனஸ்ஸா? கோ ப்ளஸ்...

10 லட்சம் ரூபாய்க்குள் இருக்கும் 7 சீட்டர் கார்கள்தான் பட்ஜெட் எம்பிவி கார்கள். மாதம் 10,000 கார்கள் வரை விற்பனையாகும் மார்க்கெட் இது. மாருதி எர்டிகா, ஹோண்டா மொபிலியோ, செவர்லே என்ஜாய் ஆகிய கார்கள், இந்த மார்க்கெட்டில் போட்டி போடுகின்றன. ஆனால், இந்த மூன்று கார்களுமே 4 மீட்டருக்குள் அடங்கும் சின்ன எம்பிவி கார்கள் இல்லை. 4 மீட்டருக்குள் வந்த எம்பிவியான குவான்ட்டோவுக்கு மார்க்கெட்டில் வரவேற்பு இல்லாதது தெரிந்தும், டட்ஸன் கோ ப்ளஸ் எனும் காருடன் வருகிறது நிஸான்!

டட்ஸன் கோ ப்ளஸ் வெற்றி பெறுமா?

டிஸைன்

டட்ஸன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களை அருகருகே நிற்கவைத்தால், எந்த வித்தியாசத்தையும் கண்டுபிடிக்க முடியாது. பக்கவாட்டில் நின்று பார்த்தால் மட்டுமே இரண்டு கார்களுக்கும் வித்தியாசம் தெரியும். கோ காருக்கும் கோ ப்ளஸ் காருக்கும் அகலம் மற்றும் வீல்பேஸில் எந்த மாற்றமும் இல்லை. மூன்றாவது வரிசை இருக்கைகளைச் சேர்ப்பதற்காக கோ-வைவிட கோ ப்ளஸ்ஸின் நீளத்தை 210 மிமீ கூட்டியிருக்கிறார்கள். எம்பிவி கார்கள் கொஞ்சமாவது உயரமாக இருக்க வேண்டும் என்கிற விதி இதில் இல்லை. கோ-வைவிட கோ-ப்ளஸ்ஸின் உயரம் வெறும் 5 மிமீ மட்டுமே அதிகம். கிரவுண்ட் கிளியரன்ஸிலும் மாற்றம் இல்லை. டயர்களும் 13 இன்ச் டயர்கள்தான்.

நிஸானுக்கு ப்ளஸ்ஸா, மைனஸ்ஸா? கோ ப்ளஸ்...

கோ காரைவிட, கோ ப்ளஸ்ஸின் பில்டு குவாலிட்டியில் கொஞ்சமே கொஞ்சம் முன்னேற்றம் தெரிவது மட்டுமே ப்ளஸ்.

உள்ளே...

காரின் டேஷ்போர்டு, முன் இருக்கைகள், நடுவரிசை இருக்கைகள் என எதிலும் எந்த மாற்றமும் இல்லை. பேஸிக்கான டேஷ்போர்டு. ஏ.சி, பவர் விண்டோஸ் ஆப்ஷன் உள்ளன. ஸ்பீக்கர்கள் உண்டு; ஆனால், இதற்கு AUX போர்ட் மூலம் போன் அல்லது மியூஸிக் ப்ளேயரை இணைக்க வேண்டும். 7 சீட்டர் கார் என்றாலும் ஏ.சியில் எந்த மாற்றமும் இல்லை என்பதால், ஏமாற்றமே மிஞ்சுகிறது. அதே 4 புளோயர் ஏ.சி சிஸ்டம்தான். கண்ணாடிகளில் பனி படர்வதைப் போக்கும் டி-ஃபாக் ஆப்ஷனோ அல்லது ரீ-சர்க்குலேட் ஆப்ஷனோ இதில் கிடையாது.

நிஸானுக்கு ப்ளஸ்ஸா, மைனஸ்ஸா? கோ ப்ளஸ்...

முன்பக்க இருக்கைகளில் இரண்டு பேர் வசதியாக உட்கார்ந்துகொண்டு, நடுவில் சின்னப் பைகளை வைத்துக் கொள்ளும் அளவுக்கு இடம் இருக்கிறது. பட்ஜெட் கார் என்பதால், சீட் உயர்த்தும் அட்ஜஸ்ட்டோ அல்லது ஸ்டீயரிங் அட்ஜஸ்ட்டோ கிடையாது. டட்ஸன் கோ-வைவிடவும் கோ ப்ளஸ்ஸில் இரண்டாவது வரிசை இருக்கைகளுக்கான இடம் அதிகரித்திருக்கிறது. கால்களை நீட்டி மடக்கி வசதியாக உட்கார்ந்து பயணிக்க முடியும். ஆனால், கோ ப்ளஸ்ஸின் மூன்றாவது வரிசை இருக்கைகள், சும்மா பெயருக்காக வைக்கப்பட்டிருக்கின்றன. இங்கே சிறுவர்கள்கூட உட்கார்ந்து பயணிக்க முடியாது. குழந்தைகள் வேண்டுமானால் தலை இடிக்காமல், கால் கீழே படாமல் உட்கார முடியும். காருக்குள் தண்ணீர் பாட்டில் மற்றும் பொருட்கள் வைத்துக்கொள்ள இடம் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், இன்னமும் இன்ஷூரன்ஸ் பேப்பர், ஆர்சி புக் போன்ற முக்கிய ஃபைல்களை வைத்து மூடும்படியான க்ளோவ்பாக்ஸ் இல்லை.

மூன்றாவது வரிசை இருக்கைகளை மடக்கிவிட்டால், கோ காரைவிடவும் கோ ப்ளஸ் காரின் டிக்கி இடவசதி 82 லிட்டர் அதிகரிக்கிறது. இதனால், 347 லிட்டர் கொள்ளளவுகொண்ட டிக்கியில் நிறையப் பொருட்களை வைக்க முடியும். ஆனால், மூன்றாவது வரிசையில் யாராவது உட்கார்ந்தால், டிக்கியில் இடம் வெறும் 48 லிட்டர் மட்டுமே!

நிஸானுக்கு ப்ளஸ்ஸா, மைனஸ்ஸா? கோ ப்ளஸ்...

இன்ஜின்

டட்ஸன் கோ காரைவிடவும் கோ ப்ளஸ்ஸின் எடை கிட்டத்தட்ட 40 கிலோ அதிகம். 1.2 லிட்டர் திறன் கொண்ட 3 சிலிண்டர் 68bhp சக்திகொண்ட அதே பெட்ரோல் இன்ஜின்தான் கோ ப்ளஸ் காரிலும் இருக்கிறது என்றாலும், ரீ-ட்யூன் செய்யப்பட்டிருக்கிறது. அதனால், கூடுதல் எடையை எந்தச் சிரமும் இல்லாமல் ஈஸியாகச் சமாளிக்கிறது இன்ஜின். காருக்குள் ஐந்து பேர் உட்கார்ந்து, டிக்கியில் அதிகப்படியான பொருட்கள் வைத்திருந்தாலும் காரின் சக்தியில் எந்தக் குறைபாடும் இல்லை. டிரைவிங் செம ஈஸியாக இருப்பதுதான் கோ ப்ளஸ் காரின் பலம். மேலும், டர்போ லேக் இல்லை என்பதால், அதிக கியரில்கூட குறைந்த வேகத்தில் எந்தத் திணறலும் இல்லாமல் பயணிக்க முடிகிறது. பவர் ஸ்டீயரிங், வளைத்துத் திருப்பி ஓட்டுவதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதால், மலைப் பாதைகளில் ஓட்டும்போதும் சரி, நெடுஞ்சாலைகளில் ஓட்டும்போது சரி, மிகவும் தைரியமாக ஓட்ட முடிகிறது. அதேபோல், காரின் வேகத்தைச் சமாளிக்க சட்டெனப் பிடிக்கும் பிரேக்குகள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

ஆனால், வெளிச்சத்தமும் டயர் சத்தமும் காருக்குள் கேட்கிறது. இது, டட்ஸன் கோ அளவுக்கு மோசமாக இல்லை என்பது மட்டுமே ஆறுதல். பின்பக்கக் கூடுதல் எடையைத் தாங்க சஸ்பென்ஷனில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சின்ன மேடு-பள்ளங்களில் பயணிக்கும்போது, காருக்குள் எந்த ஆட்டமும் இல்லை.

நிஸானுக்கு ப்ளஸ்ஸா, மைனஸ்ஸா? கோ ப்ளஸ்...

மைலேஜ்

டட்ஸன் கோ - நகருக்குள் லிட்டருக்கு 12.8 கி.மீ, நெடுஞ்சாலையில் 17.9 கி.மீ மைலேஜ் தருகிறது. கோ காரைவிட 40 கிலோ மட்டுமே எடை அதிகரித்திருப்பதால், கோ ப்ளஸ் காரும் கிட்டத்தட்ட இதே ரேஞ்சில்தான் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

படங்கள்: கே.ராஜசேகரன்

இன்ஜினை மட்டும் சூப்பராகக் கொடுத்துவிட்டு, மற்ற அனைத்து விஷயங்களிலும் காஸ்ட் கட்டிங் செய்து விட்டார்கள். டட்ஸன் கோ ப்ளஸ் 7 சீட்டர் காரே இல்லை. டிக்கியில் அதிக இடவசதி

நிஸானுக்கு ப்ளஸ்ஸா, மைனஸ்ஸா? கோ ப்ளஸ்...

கொண்ட 5 சீட்டர் ஹேட்ச்பேக் என்று நினைத்துக் கொண்டுதான் டட்ஸன் கோ ப்ளஸ் காரை வாங்கும் முடிவுக்கு வர வேண்டும். டட்ஸன் கோ ஏற்கெனவே விற்பனையில் பின்தங்கிவிட்ட நிலையில், இப்போது டட்ஸன் கோ ப்ளஸ் காரைக் கொண்டுவருகிறது நிஸான்.

கோ காரைவிட 30,000 ரூபாய் அதிக விலைக்கு கோ ப்ளஸ் காரை விற்பனைக்குக் கொண்டுவருவதாக முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. உண்மையிலேயே இந்த விலை வித்தியாசத்தில் கோ ப்ளஸ் கார் விற்பனைக்கு வந்தால், ப்ளஸ்ஸுக்கு எதிர்காலம் பிரகாசம்!