Published:Updated:

அலட்டல் இல்லாத அக்கார்டு!

ஃபர்ஸ்ட் டிரைவ் HONDA ACCORD 2.4 NEWர.ராஜா ராமமூர்த்தி

அலட்டல் இல்லாத அக்கார்டு!

ஃபர்ஸ்ட் டிரைவ் HONDA ACCORD 2.4 NEWர.ராஜா ராமமூர்த்தி

Published:Updated:

புதிய தலைமுறை ஹோண்டா அக்கார்டு, இந்தியாவில் இந்த ஆண்டு விற்பனைக்கு வரும் என அடித்துச் சொல்கிறார்கள். வரும்வரை காத்திருக்க முடியாமல் உடனே ஓட்டிப் பார்த்தோம். எப்படி இருக்கிறது புதிய ஹோண்டா அக்கார்டு?

அலட்டல் இல்லாத அக்கார்டு!

டிஸைன்

பழைய அக்கார்டு கார் நீளமாக, அகலமாக, தாழ்வாக கப்பல் போல இருக்கும். பிஎம்டபிள்யூ 5 சீரிஸைவிட பெரிய கார் போலத் தோற்றமளிக்கும். அதேசமயம், 3 சீரிஸைவிட குறைவான விலைதான். புதிய அக்கார்டு பார்ப்பதற்கு பழைய கார் ஜிம்முக்குப் போய்வந்தது போல இருக்கிறது. முகத்திலும் ஃபேஸியல் செய்ததுபோல தெளிவான, சுத்தமான டிஸைன். க்ரில்லைச் சுற்றி இருக்கும் க்ரோம் டிஸைனுக்கு 3D எஃபெக்ட் அளிக்கிறது. முன்பக்க பம்பரில்  இருந்து துவங்கும் கோடு, வீல் ஆர்ச்சுகளைத் தாண்டி, மேல்நோக்கி வில் போல வளைந்து செல்வது, அழகாக இருக்கிறது. இதுவும், ஷோல்டர் லைனும் இணைந்து காரை மேலும் பெரிய காராகக் காட்டுகின்றன. ஆனால், காரின் பின்பக்கம் சாதாரணமாக இருக்கிறது.

பழைய மாடலைவிட வீல்பேஸும் குறைவுதான். இதனால், வளைவுகளில் சிறப்பான கையாளுமை இருக்கும் என்கிறது ஹோண்டா. காரின் சேஸி ஸ்திரத்தன்மை கூடியிருக்கிறது. புதிய மாடல் 60 சதவிகிதம் ஹை-ஸ்ட்ரென்த் ஸ்டீலால் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், பழைய காரைவிட ஸ்ட்ராங். முன்பக்க சஸ்பென்ஷன், சப்-ஃப்ரேம் போன்றவை புதியவை. எலெக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங் சிஸ்டமும் புதிது.  காரின் கட்டுமானம் நன்றாக இருக்கிறது. ஐரோப்பிய கார்களைப்போல ‘தட்’ என்ற உணர்வுடன் கதவுகள் மூடவில்லை என்றாலும் தரம் நன்றாக இருக்கிறது.

உள்ளே

பழைய அக்கார்டு காரில், இந்திய வாடிக்கையாளர்கள் விரும்பியது இடவசதியும், சொகுசும்தான். புதிய காரில் வீல்பேஸ் குறைந்திருந்தாலும், லெக்ரூம், ஷோல்டர் ரூம், ஹெட்ரூம் ஆகியவை குறையவில்லை. பின்னிருக்கைகளின் தொடை, முதுகுக்கான சப்போர்ட் மிக அருமை. இருக்கையின் குஷன்கூட ரொம்பவும் இறுக்கமாகவும் இல்லாமல், சாஃப்ட்டாகவும் இல்லாமல் கச்சிதமாக இருக்கிறது.

புதிய அக்கார்டு காரின் முக்கியமான முன்னேற்றம், டேஷ்போர்டு. ஆடி அளவுக்கு ஹை-டெக் உணர்வு இல்லாவிட்டாலும், ஒருவித ப்ரீமியம் உணர்வு இந்த காரில் இருக்கிறது. டோர் பேடுகள்கூட உயர்தரமாக இருக்கின்றன. மரவேலைப்பாடுகள், லெதர், க்ரோம் ஆகியவை தனித்தனியாகத் தெரியாமல், க்ளாஸாக இயந்திருக்கின்றன. லேயர்களாக அமைக்கப்பட்டிருக்கும் சென்டர் கன்ஸோல் சூப்பர். ஆங்காங்கே சீப்பான பாகங்களைக் கண்டுபிடிக்க முடிந்தாலும் ஒட்டுமொத்ததில் தரம் உயர்தரம்தான். எலெக்ட்ரிக் ஆபரேட்டட் ரியர் சன்ஷேடு, டச் ஸ்க்ரீன் கன்ட்ரோல், HondaLink சிஸ்டம், லேன் டிபார்ச்சர் வார்னிங், எக்கோ டிரைவர் மோடு போன்ற டெக் வசதிகளும் இருக்கின்றன.

அலட்டல் இல்லாத அக்கார்டு!

இன்ஜின்

புதிய அக்கார்டு காரில் இருப்பது 2,356 சிசி, 4 சிலிண்டர் இன்ஜின். இது 173 bhp சக்தியை 6,200 ஆர்பிஎம்-லும்  22.94 kgm டார்க்கை 4,000 ஆர்பிஎம்-லும் அளிக்கிறது. ‘அதே பழைய 2.4 லிட்டர் இன்ஜினா?’ எனத் தோன்றினாலும், ஹோண்டாவின் லேட்டஸ்ட் எர்த் ட்ரீம்ஸ் ரேஞ்ச் இன்ஜின் இது. வெளிநாடுகளில் டைரக்ட் இன்ஜெக்‌ஷன், CVT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இந்த இன்ஜின் கிடைத்தாலும், விலை காரணமாக, ஆசிய நாடுகளில் இந்த அம்சங்கள் கிடையாது.

விரட்ட விரட்ட பெர்ஃபாமென்ஸில் மிரட்டுகிறது இந்த இன்ஜின். எல்லா ஹோண்டா பெட்ரோல் இன்ஜின்களைப்போல 4,000 ஆர்பிஎம்-ல் இருந்து டாப் எண்ட் வரை பட்டையைக் கிளப்பிப் பறக்கிறது. மற்ற இன்ஜின்கள் ஆர்பிஎம் எகிற எகிற, திணற ஆரம்பிக்கும். ஆனால் இது, ‘இன்னும்..இன்னும்’ என ரெவ் ஆகிக்கொண்டே இருக்கிறது.

ஆனால், இந்த அருமையான இன்ஜின் அனுபவத்தைக் கெடுப்பது சோம்பலாக இயங்கும் 5-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ். ரிலாக்ஸ்டான ஓட்டுதலுக்கு இந்த கியர்பாக்ஸ் பெஸ்ட் என்றாலும், உங்களுக்குள் இருக்கும் டிரைவிங் பிரியர் விழித்துக்கொள்ளும்போது, இந்த கியர்பாக்ஸ் தூங்க ஆரம்பித்துவிடுகிறது. பேடில் ஷிஃப்டர்கள் கொடுத்திருந்தாலும், வேகமாக ஷிஃப்ட் செய்தால், மெதுவாக ஷிஃப்ட் ஆகிறது.

அலட்டல் இல்லாத அக்கார்டு!

ஓட்டுதல் மற்றும் கையாளுமை

சிட்டி டிராஃபிக்கில் ‘பெரிய காரை ஓட்டுகிறோம்’ என்ற உணர்வை அளிக்காமல், எளிதான ஓட்டுதலைக் கொண்டிருக்கிறது. பழைய காரைவிட இன்சுலேஷன் நன்றாக இருப்பதால், வெளி உலகத்தின் சத்தம் உள்ளே கேட்கவில்லை. இதற்கு இன்னொரு முக்கிய காரணம், ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் சிஸ்டம். காரின் கூரையில் அமைக்கப்பட்டிருக்கும் மைக்ரோபோன், வெளியே இருக்கும் சத்தங்களை எடுத்துக்கொண்டு, அதை ரிவர்ஸில் ஸ்பீக்கர்கள் மூலம் ப்ளே செய்யும். எனவே, வெளிச்சத்தங்கள் காருக்குள்ளே வரும்போது, இந்த ரிவர்ஸ் ஒலி அலைகளுடன் மோதி கேன்சல் ஆகிவிடும்.

காரின் ஓட்டுதல் தரம் முன்பைவிட சிறப்பாக இருக்கிறது.  காரை விரட்டி, அதன் கையாளுமையைச் சோதித்தால், நம்மை ஆச்சரியப்படுத்துகிறது அக்கார்டு. ஸ்டீயரிங் பக்காவான எடையுடன் இருப்பதால், வளைவுகளில் நம்மை நம்பிக்கையுடன் திருப்பவைக்கிறது. நல்ல பாடி பேலன்ஸுடனும் வளைவுகளில் திரும்புகிறது புதிய அக்கார்டு. பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் அளவுக்கு டைனமிக்ஸில் டிஸ்டிங்ஷன் வாங்கவில்லை என்றாலும், காரின் சைஸுக்கு அருமையான டைனமிக்ஸ் கொண்டுள்ளது அக்கார்டு.

அலட்டல் இல்லாத அக்கார்டு!

இந்தியாவில் பழைய அக்கார்டு விற்பனையில் இருந்தபோது, மிகவும் பிரபலமான ஃபுல் சைஸ் எக்ஸிக்யூட்டிவ் காராக இருந்தது. ஆச்சரியமான விலையில் அதிக வசதிகளை அளிக்க, வாடிக்கையாளர்கள் க்யூ கட்டினார்கள். முன்பைவிட அனைத்து அம்சங்களிலும் தன்னை முன்னேற்றிக்கொண்டு வந்திருக்கிறது புதிய அக்கார்டு. சுமார் 25 முதல் 30 லட்சம் வரை விலையுடன் வரவிருக்கும் புதிய அக்கார்டு, வசதியான, நல்ல இமேஜ் உள்ள, நம்பகத்தன்மைகொண்ட காராக உள்ளது. இந்திய வாடிக்கையாளர்கள் ஏற்றுக்கொள்வார்களா?

அலட்டல் இல்லாத அக்கார்டு!