Published:Updated:

வணக்கம்! மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களே...

வணக்கம்! மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களே...

வணக்கம்! மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களே...

வணக்கம்! மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களே...

Published:Updated:

‘நம்பிக்கை பூக்கும் அளவுக்கு கார் விற்பனை படிப்படியாக ஏறுமுகத்தில் இருக்கிறது. பைக் விற்பனையும் புதிய பிக்-அப்பில் தடதடக்கத் துவங்கியிருக்கிறது’ - கடந்த சில மாதங்களாக, குட் நியூஸ் மழை. புத்துணர்வுக் காற்று வீசிய அதே வேகத்தில், ஆட்டோமொபைல் நிறுவனங்களும் அடுத்தடுத்த அறிமுகங்களை அரங்கேற்றி, கொண்டாட்டத்தைக் கூட்டினார்கள்.

டட்ஸன் கோ, மாருதி ஆல்ட்டோ K10 நியூ, மாருதி செலெரியோ, ஹூண்டாய் எக்ஸென்ட், ஹூண்டாய் எலீட் i20, ஃபியட் புன்ட்டோ ஈவோ, ஃபியட் அவென்ச்சுரா, ஹோண்டா மொபிலியோ, ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ், டாடா ஜெஸ்ட், ஸ்கோடா யெட்டி, மஹிந்திரா ஸ்கார்ப்பியோ என்று புதிய கார்கள் அறிமுகமாகிக்கொண்டே இருந்தன. ஒவ்வொன்றின் பின்னணியிலும் தனிப் பெருமைகள் ஒளிந்திருக்கின்றன.

2014-ம் ஆண்டில் சுஸூகி ஜிக்ஸர், ஹீரோ கரீஸ்மா ZMR, டிவிஎஸ் ஸ்டார் சிட்டி, யமஹா FZ/FZ-S V2.0, பஜாஜ் டிஸ்கவர் 150S / 150 F, ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750, ஹீரோ ஸ்ப்ளெண்டர் iSmart, கேடிஎம் பைக்குகள் என்று புதுமுகங்களின் அறிமுகங்கள், ஓர் அணிவகுப்புபோல ஆண்டு முழுவதும் அரங்கேறின.

சிறந்த கார், சிறந்த பைக் என்று மட்டும் தேர்ந்தெடுத்து விருதுகள் கொடுத்தால் போதாது; இந்த ஆண்டின் சிறந்த ஸ்கூட்டர் என பிரத்யேகமாக ஒரு விருது அறிவிக்கப்பட வேண்டும் என்று வாசகர்களின் அன்புக் கட்டளை. அதற்கு ஏற்றதுபோல, 2014-ம் ஆண்டு சுஸூகி லெட்ஸ், டிவிஎஸ் ஜெஸ்ட், ஹோண்டா ஆக்டிவா 125, டிவிஎஸ் ஜூபிட்டர் என்று நான்கு ஸ்கூட்டர்கள் அறிமுகமாகின.

விலைக்கேற்ற மதிப்பு, சுற்றுச்சூழலோடு இயைந்த தொழில்நுட்பம், பாதுகாப்பு அம்சங்கள், புதுமையான வடிவமைப்பு, நல்ல மைலேஜ், கூடுதல் செயல்திறன், சிறந்த கையாளுமை, அசதி தராத சஸ்பென்ஷன், நம்பிக்கை தரும் பிரேக்கிங், ஸ்மூத்தாக இயங்கும் கியர்பாக்ஸ் என எண்ணற்ற அளவுகோள்களை வைத்தே, எது இந்த ஆண்டின் சிறந்த கார், பைக் மற்றும் ஸ்கூட்டர் என்பதை நமது நிபுணர்கள் குழு தேர்ந்தெடுத்திருக்கிறது. வாசகர்களும் தபால் மூலமாகவும் ஆன்லைன் மூலமாகவும் வாக்குகளைச் செலுத்தி, உதவி செய்தீர்கள். அதற்கு மோட்டர் விகடனின் இதயம் கனிந்த நன்றிகள்.

சிறந்த எஸ்யுவி, சிறந்த பைக் ரேஸர், சிறந்த கார் ரேஸர் என மேலும் 12 விருதுகளுக்கான தகுதி படைத்தவர்களை, இந்த ஆண்டு தேர்ந்தெடுத்திருக்கிறோம். புத்தாண்டில் தாங்கள் வாங்கப் போகும் புதிய கார் அல்லது பைக்கைத் தேர்ந்தெடுக்க, இந்த விருதுகள் உங்களுக்கு நிச்சயமாக உதவியாக இருக்கும்.

9-ம் ஆண்டில் அடியெடுத்துவைக்கும் இந்த மகிழ்ச்சியான தருணத்தில் பரிசளிப்பு, கொண்டாட்டம் என இனிதே ஆரம்பமாகிறது பயணம்!
புத்தாண்டு வாழ்த்துகள்!

என்றும் உங்களுக்காக

ஆசிரியர்