Published:Updated:

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

Published:Updated:
மோட்டார் நியூஸ்

ரெனோ நிறுவனம், இந்தியாவில் விற்பனைக்கு வரவிருக்கும் லாட்ஜி எம்பிவியின் முதல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. வெளிநாடுகளில் விற்பனையாகும் லாட்ஜி காருடன் ஒப்பிடும்போது, முன்பக்கம் மட்டும் சில டிஸைன் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. க்ரில் டிஸைனில் க்ரோம் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. முன்பக்க பம்பர் மற்ற நாடுகளில் காரின் கலரிலேயே இருக்கும். ஆனால், இங்கே கறுப்பு வண்ண பிளாஸ்டிக் கிளாடிங் கொடுக்கப்பட்டுள்ளது. காரின் உள்ளே டஸ்டர் காரின் பாகங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும்் என எதிர்பார்க்கலாம். காரின் வீல்பேஸ் 2,810 மிமீ. டஸ்ட்டரில் இருக்கும் அதே 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்தான். மார்ச் மாதவாக்கில் 8 லட்சம் முதல் 12 லட்சம் ரூபாய் விலையில் விற்பனைக்கு வரவிருக்கிறது புதிய லாட்ஜி!

மோட்டார் நியூஸ்

கடந்த டிசம்பரில் மட்டும் மூன்று கார் நிறுவனங்கள், வெவ்வேறு பிரச்னைகளுக்காக கார்களைத் திரும்ப அழைத்தன. மாருதி 3,796 சியாஸ் கார்களை, கிளட்ச் பிரச்னைக்காகத் திரும்ப அழைத்தது. ஃபோர்டு 20,752 எக்கோஸ்போர்ட் கார்களையும், 3,000-க்கும் மேற்பட்ட ஃபியஸ்டா கார்களையும் திரும்ப அழைத்தது. எக்கோஸ்போர்ட்டின் ப்யூல் லைனில் இருந்த அரிப்பு காரணமாக ரீகால் செய்யப்பட்டது. க்ளோ ப்ளக்-கின் கன்ட்ரோல் மாட்யூலில் பிரச்னை இருக்கிறதா என சோதிக்க, ஃபியஸ்டா ரீகால் செய்யப்படது. டொயோட்டா, 5,834 கரோலா ஆல்டிஸ் கார்களை உலகம் முழுவதும் ரீகால் செய்தது. ஏர் இன்டேக்குகளில், இன்ஜின் ஆயில் நுழைந்துவிடும் ஆபத்து கண்டுபிடிக்கப்பட்டதால், இந்த ரீகால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மோட்டார் நியூஸ்

யமஹா FZ V2.0, சுஸூகி ஜிக்ஸர் போன்ற பைக்குகளுடன் போட்டியிடும் புதிய CB யூனிகார்ன் 160 பைக்கை விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது ஹோண்டா. யூனிகார்ன் 160, ட்ரிக்கர் பைக்கின் டிஸைனை அடிப்படையாகக்கொண்டுள்ளதால், ட்ரிக்கர் பைக்கில் இருந்த டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்ஸோல்தான் இதிலும். மேலும், 2015-ம் ஆண்டில் ட்ரிக்கர் பைக்குக்கு மாற்றாக இந்த பைக் விற்பனையாகும். 160 சிசி பைக் என்றாலும் இன்ஜினை அணைக்கும் ஸ்விட்ச் கிடையாது. புதிய 163 சிசி இன்ஜின் 8,000 ஆர்பிஎம்-ல் 14.5 bhp சக்தியையும், 6,000 ஆர்பிஎம்-ல் 1.49 kgm டார்க்கையும் அளிக்கிறது. இது, சிசி அதிகரிக்கப்பட்ட பழைய 149 சிசி இன்ஜின்தான். முன்பக்கம் டெலஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷனும், 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளன. பின்பக்கம் மோனோ ஷாக் சஸ்பென்ஷனும், டிரம் பிரேக்கும் உள்ளன. பைக்கின் எடை 135 கிலோ. லிட்டருக்கு 62 கி.மீ மைலேஜ் கிடைக்கும் என்கிறது ஹோண்டா. யூனிகார்ன் 160 CBS வேரியன்ட்டின் விலை  74,414 ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி).

மோட்டார் நியூஸ்

எதிர்பார்த்ததுபோலவே நவம்பர் மாதத்திலும் ஹீரோ மோட்டார்ஸ்தான் நம்பர் ஒன். 5,21,001 டூவீலர்களை விற்பனை செய்து, ‘ஹீரோ’வாக முதல் இடத்தில் இருக்கிறது ஹீரோ மோட்டோகார்ப். ஹோண்டா டூவீலர்ஸ் இந்தியா, 3,53,743 டூவீலர்களை விற்பனை செய்து, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தை நெருங்கிவருகிறது. டிவிஎஸ் நிறுவனம் 1,79,452 வாகனங்களையும், பஜாஜ் ஆட்டோ 1,27,649 வாகனங்களையும் கடந்த நவம்பர் மாதத்தில் விற்பனை செய்துள்ளன. யமஹா 44,678 யூனிட்டுகளை விற்பனை செய்து 5-வது இடத்திலும், சுஸூகி 31,724 வாகனங்களுடன் 6-வது இடத்திலும் உள்ளன. ராயல் என்ஃபீல்டின் விற்பனை எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்துவருகிறது. நவம்பர் மாதத்தில் 21,198 பைக்குகளை விற்பனை செய்துள்ளது ராயல் என்ஃபீல்டு.

புத்தாண்டு முதல் கார்களின் விலை உயர்கிறது!

மோட்டார் நியூஸ்

2014-ம் ஆண்டுடன் கார்களுக்கு அளித்து வந்த வரிச்சலுகைகளை மத்திய அரசு நிறுத்தப் போவதாகத் தகவல் வருவதால், ஏற்கெனவே கார் நிறுவனங்கள் விலை உயர்வை அறிவித்துவிட்டன. பல நிறுவனங்கள் மூலப்பொருள் செலவு, தயாரிப்புச் செலவுகளைக் காரணம் காட்டினாலும், வரிச்சலுகைகள் ரத்தாவதும் ஒரு காரணம்தான் என்று சொல்லப்படுகிறது. இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனமான மாருதி, தனது கார்களின் விலையை 2 முதல் 4 சதவிகிதம் வரை உயர்த்தியுள்ளது. 2015 ஜனவரி முதல் பிஎம்டபிள்யூ கார்களின் விலை 5 சதவிகிதம் உயர்கிறது.  நிஸான், டட்ஸன் கார்களின் விலை முறையே 2.5 சதவிகிதமும், 3 சதவிகிதமும் உயர்கின்றன. இதனால், நிஸான் கார்களின் விலை சுமார் 18,000 ரூபாயும், டட்ஸன் கார்களின் விலை சுமார் 11,000 ரூபாய் வரை உயர்கின்றன. ஹூண்டாய் கார்களின் விலை காரைப் பொறுத்து 5,000 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை உயர்கின்றன. வெற்றிகரமாக விற்பனையாகும் எலீட் i20 காரின் விலையும் உயர்த்தப்படுகிறது. ரெனோ, தனது கார்களின் விலையை 2.5% உயர்த்தியுள்ளது.