Published:Updated:

ரகசிய கேமரா SPY PHOTO

ஹூண்டாய் காம்பேக்ட் எஸ்யுவி!

ரகசிய கேமரா SPY PHOTO

ஹூண்டாய் காம்பேக்ட் எஸ்யுவி!

Published:Updated:

கோத்தகிரி அருகே டெஸ்ட் செய்யப்பட்டுக்கொண்டிருந்த ஹூண்டாய் ix25 காரைப் படம் எடுத்திருக்கிறார் மோட்டார் விகடன் வாசகர் குமரன். ஏற்கெனவே, சீனாவில் விற்பனைக்கு வந்துவிட்ட இந்த காம்பேக்ட் எஸ்யுவி காரை, விரைவில் இங்கு விற்பனைக்குக் கொண்டுவருகிறது ஹூண்டாய். 90 சதவிகிதம் உள்ளூர் சப்ளையர்களின் பாகங்களோடு இந்த கார் உருவாகிவருகிறது. காரின் நீளம் 4.27 மீட்டர் என்பதால், வரிச்சலுகைகள் கிடையாது. அதனால், எவ்வளவு விலையைக் குறைக்க முடியுமோ, அவ்வளவு குறைக்க முயன்றுவருகிறது ஹூண்டாய். இந்தியாவில் 1.6 லிட்டர் பெட்ரோல், டீசல் இன்ஜின்களுடன் இந்த காம்பேக்ட் எஸ்யுவி விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். இந்தப் படத்தில் காம்பேக்ட் எஸ்யுவி காரின் பின்னால் இருக்கும் இரண்டாவது கார், ஹூண்டாய் i20 க்ராஸ். டொயோட்டா எட்டியோஸ் க்ராஸ், ஃபோக்ஸ்வாகன் போலோ போன்ற கார்களுடன் போட்டி போட இருக்கும் இந்த கார், பிப்ரவரி மாதத்துக்குள் விற்பனைக்கு வரும்.

ரகசிய கேமரா SPY PHOTO

அடையாளங்களை மறைத்து உங்கள் ஊரில் இப்படி ஏதாவது கார் அல்லது பைக் டெஸ்ட் செய்யப்படுகிறதா? அதை அப்படியே உங்கள் கேமராவில் பதிவுசெய்து எங்களுக்கு அனுப்புங்கள்! அனுப்ப வேண்டிய முகவரி:

ரகசிய கேமரா, மோட்டார் விகடன்,

757, அண்ணா சாலை, சென்னை-600002.