ஹெல்மெட் போட்டுதான் போட்டோ எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்திக்கொண்டே இருந்தார் தீபக். காரணம், தீபக், பல் மருத்துவக் கல்லூரி மாணவர். ‘‘விபத்தில் தலைப்பகுதியும் முகமும்தான் அதிகம் அடிபடும். விபத்தில் சிக்கி பற்களை இழந்து சிகிச்சைக்காக வருபவர்களைப் பார்க்கவே கஷ்டமாக இருக்கும்’’என்றவர், புதிதாகத் தான் வாங்கியிருக்கும் சுஸூகி ஜிக்ஸர் பைக் பற்றி பேச ஆரம்பித்தார்.

‘‘முதன்முதலாக நான் வாங்கிய பைக், யமஹா கிளாடியேட்டர். சிட்டிக்குள் ஓட்டுவதற்கு அவ்வளவு ஸ்மூத்தாக இருக்கும். என் அண்ணன் டிவிஎஸ் அப்பாச்சி பைக் வைத்திருந்தார். நானும் அதேபோன்ற ஸ்டைலான பெர்ஃபாமென்ஸ் பைக் வாங்கலாம் என யோசித்துக்கொண்டிருந்தேன். யமஹா, சுஸூகி, ஹோண்டா ஆகிய நிறுவனங்களில் ஏதாவது ஒன்றை செலக்ட் செய்யலாம் என தீர்மானித்திருந்தேன்.

ஏன் சுஸுகி ஜிக்ஸர்?

யமஹா பைக்கைப் பொறுத்தவரை, பைக்குகள் சூப்பர் தரமாக இருக்கும். ஆனால், மைலேஜ் குறைவாகத்தான் கிடைக்கும். அதனால், இம்முறை யமஹா வேண்டாம் என்று முடிவு செய்தேன். நான் இதற்கு முன்பு, சுஸூகி GS150R வைத்திருந்தேன். அதனால், எனது புதிய பைக், எடை குறைவாகவும் ஸ்டைலாகவும் இருக்க வேண்டும்்; மைலேஜும் கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு என்னிடம் இருந்தது. 155 சிசி இன்ஜினுடன் சுஸூகி ஜிக்ஸர் அறிமுகமானபோது, என் எதிர்பார்ப்புக்கு ஏற்ற மாதிரி இருந்தது. அதனால், சுஸுகி ஜிக்ஸர் பைக் வாங்கிவிடலாம் என முடிவு செய்தேன்.

ஷோரூம் அனுபவம்

மதுரை அருண் மோட்டார்ஸில் பைக் வாங்கினேன். ஷோரூம் சென்று, எல்லா பைக்குகளையும் டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டும் என்று சொன்னேன். தாராளமாகச் செய்துபாருங்கள் என்றனர். ஒவ்வொரு பைக்காக டெஸ்ட் டிரைவ் செய்யும்போது, நான் நினைத்தது போலவே, ஜிக்ஸர் எனக்குப் பிடித்த மாதிரி இருந்தது. உடனே புக் செய்தேன். சர்வீஸ் தேதி வந்ததும் அவர்களே போன்செய்து ஞாபகப்படுத்தினார்கள். 2,000 கி.மீ வரை ஓவர்ஸ்பீடு வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்கள். இதுவரை டீலர் அனுபவம் சிறப்பாகவே இருக்கிறது.

பிடித்தது

ஜிக்ஸர் 135 கிலோ எடை என்பதால், கையாள்வது சுலபம். அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ வேகம் வரை ஓட்டியிருக்கிறேன். அதிர்வுகள் இல்லை. மைலேஜைப் பொறுத்தவரை டிராபிஃக்கில் லிட்டருக்கு 45 கி.மீ தருகிறது. நெடுஞ்சாலையில் 51 கி.மீ கொடுக்கிறது. முக்கியமாக, இதன் கியர் செட்டிங் அருமை. 3-வது கியரில் மெதுவாகச் சென்றால்கூட இன்ஜின் இடிப்பது இல்லை. இதனால், கிளட்ச்சைப் பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. எனக்கு சைலன்ஸர் இரைச்சல் பிடிக்காது. ஜிக்ஸரில் எக்ஸாஸ்ட் சத்தம் டீசன்ட்டாக இருக்கிறது. ட்யூல் மஃப்ளர் எக்ஸ்சாஸ்ட், டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்ட்டர், கவர்ச்சியான ஹெட்லைட், மிரட்டல் டிஸைன் பெட்ரோல் டேங்க் என அனைத்தும் வசீகரிக்கின்றன. ட்ரிப் மீட்டர் இருப்பதால், சுலபமாக மைலேஜைக் கணக்கிட முடிவதுடன், இன்னும் எவ்வளவு தூரம் பயணிக்கலாம் என்பதைக் கணக்கிட முடிவது பயனுள்ளதாக இருக்கிறது. பக்கா பெர்ஃபாமன்ஸ், LED டெய்ல்லைட், ட்யூப்லெஸ் டயர் என இதன் சிறப்புகள் பட்டியல் நீளம். பின்பக்க டயர் அகலமாக இருப்பதால், கார்னரிங் செய்யும்போது பயம் இல்லாமல் செய்ய முடிகிறது. ரைடிங் பொசிஷன் சரியாக இருக்கிறது.

பிடிக்காதது

ஹாரன் சத்தம் சுத்த மோசம். மற்ற பைக்குகளுடன் ஒப்பிடும்போது, ஜிக்ஸரில் அரசு அனுமதித்த அளவுக்கு இந்தச் சத்தம் இருக்காது என்று நினைக்கிறேன். பில்லியன் சீட்டில் பெண்கள் ஒரு பக்கமாக அமர்வதை இந்த பைக்கில் நினைத்துக்கூட பார்க்க முடியாது. பின்பக்க வீலுக்கும் டிஸ்க் பிரேக் கொடுத்திருக்கலாம். அதேபோல, செயின் ஸ்ப்ராக்கெட் ஒப்பனாக இருப்பது அடிக்கடி செயினுக்கு வேலை வைக்கும்.

என் தீர்ப்பு

நான் என்ன எதிர்பார்த்து ஜிக்ஸரை வாங்கினேனோ, அதை நிறைவாக அளிக்கிறது. ஸ்டைல், டிஸைன், இன்ஜின், மைலேஜ், சத்தம், சிறப்பம்சங்கள் என எல்லாமே, மற்ற பைக்குகளைவிட ஜிக்ஸரில் நன்றாக இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை, கொடுத்த பணத்துக்கு நிறைவை அளிக்கிறது ஜிக்ஸர்.

படங்கள்: பா.காளிமுத்து