பவர்ஃபுல் மோட்டார் சைக்கிள் எது என்பதில், புல்லட்டும் ஜாவா யெஸ்டி பைக்கும் நேரடியாகப் போட்டி போட்டுக்கொண்ட காலமான 1980-களில், ‘நான்தான் பவர்ஃபுல்’ என களமிறங்கி, பட்டையைக் கிளப்பிய பைக், யமஹா RD350.

ஜப்பானில் யமஹா 350B என விற்பனை செய்யப்பட்ட பைக்தான், சின்னச் சின்ன மாற்றங்களுடன் இந்தியாவில் RD350 என்ற பெயருடன் விற்பனைக்கு வந்தது. யமஹாவிடம் இருந்து லைசென்ஸ் பெற்று, ராஜ்தூத் பைக்குகளைத் தயாரித்த எஸ்கார்ட்ஸ் நிறுவனம், RD350 பைக்கைத் தயாரித்தது. யமஹா ராஜ்தூத் 350 என்றும், யமஹா RD350 என்றும் இந்த பைக் அழைக்கப்பட்டது.

ஜப்பானில் விற்பனையான இந்த பைக், 1970-ம் ஆண்டின் இறுதியில் மாசுக் கட்டுப்பாடு பிரச்னையின் காரணமாக ஜப்பானில் உற்பத்தி நிறுத்தப் பட்டது. அதன் பின்பு, 1983-ம் ஆண்டு இந்தியாவில் அப்போது அதிநவீன தொழில் நுட்பம்கொண்ட பைக்காக அறிமுகமானது. எச்.டி (High Torque), எல்.டி (Low Torque) என இரு மாடல்களில் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது.

2 ஸ்ட்ரோக் பைக்கான இதில், 7 போர்ட் பேரலல் ட்வின் இன்ஜின் பொருத்தப்பட்டிருந்தது. இரண்டு சைலன்ஸர், இரண்டு கார்புரேட்டர் என கம்பீரமாகக் காட்சியளிக்கும் இந்த பைக்குக்கு, மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. ஆனால், அதிக விலை; குறைந்த மைலேஜ் ஆகிய இரு முக்கிய காரணங்களால், RD350 விற்பனையில் பெரிய உயரத்தை எட்ட முடியவில்லை. 1985-ல் யமஹாவின் RX100 அறிமுகப்படுத்தப்பட்டதும் இதன் விற்பனை சரிவதற்குக் காரணமாக அமைந்தது. அதனால், RD350 பைக்குகளின் உற்பத்தி, 1989-ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. இருப்பினும், 1991 வரை இந்த பைக் விற்பனை செய்யப்பட்டன.

இந்த பைக்கின் உற்பத்தி நிறுத்தப்பட்டு, வெள்ளி விழா கடந்துவிட்டது. ஆனால், இன்றும் இந்த பைக்குக்கான டிமாண்ட் குறையவில்லை. 1983-ல் அறிமுகப்படுத்தப்பட்டபோது, புத்தம் புதிய பைக்கின் விலை 18,000 ரூபாய் மட்டுமே! ஆனால், 25 ஆண்டுகள் முதல் 30 ஆண்டுகள் வரை ஓடிப் பழசான இந்த பைக்குகளின் தற்போதைய விலை, 1.50 லட்சத்தில் இருந்து துவங்குகிறது. பைக் நல்ல கண்டிஷனில் இருந்தால், 2 லட்சம் ரூபாய் வரை விலை போகிறதாம். இருந்தும் இந்த பைக்கை வைத்திருப்பவர்கள் யாரும் விற்பதற்குத் தயாராக இல்லை.

தமிழகத்தில் RD350 பைக்குகளின் தாயகம் என்றால், அது கோவைதான். இங்கு மட்டுமே50-க்கும் அதிகமான RD350 பைக்குகள் இருக்கின்றன. RD350 பைக்குகளின் உரிமையாளர்களான கபிலன், குருநாதன் ஆகியோரை கோவையில் சந்தித்துப் பேசினோம்.

“எங்க வீட்டுல RD350 பைக் இப்போ மூணு இருக்கு. என் அப்பா 1984-ம் வருஷம் இதை வாங்கினார். அந்த பைக் மேல எனக்கும், என் அண்ணனுக்கும் சின்ன வயசுல இருந்தே ரொம்ப ஈடுபாடு. அண்ணனும், நானும் அடுத்தடுத்து இந்த பைக்கையேதான் தேடி வாங்கினோம். 2007-ல் அண்ணன் இந்த பைக்கை 1.60 லட்சத்துக்கு வாங்கினார். 2009-ல நான் வாங்கின பைக்கோட விலை, 1.50 லட்சம். 50 ஆயிரம் வரை செலவு பண்ணி பயன்படுத்திக்கிட்டு வர்றேன். இதோட பெர்ஃபாமென்ஸை எந்த பைக்கோடவும் ஒப்பிட முடியாது. 2 ஸ்ட்ரோக் பைக்குங்கிறதால, இதுல கிடைக்குற பிக்-அப், இந்த பைக் ஓட்டுறதுல இருக்கிற த்ரில் எந்த பைக்குலேயும் கிடைக்காது!’’ என்கிறார் கபிலன்.

“RD350 பைக் இன்ஜின் சத்தம், பெர்ஃபாமென்ஸ் எனக்கு ரொம்பப் பிடிக்கும். 1.80 லட்சத்துக்கு இந்த பைக் வாங்கினேன். இன்னும் கொஞ்ச வேலை செய்ய வேண்டி இருக்கு. இந்த பைக்கை ஓட்டுனாலே ஒரு கம்பீரம் கிடைக்குது. இனிமேல் இந்த மாதிரி ஒரு பைக் வந்தாலும், அது இந்த பைக் மாதிரி 30 வருஷம் நீடிக்குமாங்கறது சந்தேகம்தான். மைலேஜ் லிட்டருக்கு 25 கி.மீ கிடைக்குது. ஆனா, பைக் ஓட்டுறதுல கிடைக்குற சந்தோஷத்துக்கு முன்னாடி, மைலேஜ் ஒரு பிரச்னையே இல்லை” என்கிறார் குருநாதன்.

படங்கள் : தி.விஜய்