கேடிஎம் நடத்தும் ‘ஆரஞ்ச் டே செலிபிரேஷன்’ கடந்த ஜனவரி மாதம் 11-ம் தேதி நடைபெற்றது. திருச்சி to கொல்லிமலைதான் ரூட். இதில் கலந்துகொண்ட சுமார் 30 பைக்குகளில், 20 மட்டுமே கேடிஎம். மற்றவை ஹோண்டா, பஜாஜ், யமஹா பைக்குகள்.

அனுபவம் பெற்ற ஒருவர், முன்னின்று வழிநடத்திச் செல்ல... நால்வழிச் சாலை, இருவழிச் சாலை, மலைச் சாலை என ஏறி கொல்லிமலை உச்சியை அடைந்தனர். அங்கிருந்த மலைப் பாதையில் (ஆஃப் ரோடில்) பைக்கர்கள் ஆசை தீர நீண்ட நேரம் பைக் ஓட்டினார்கள்.

‘‘சமீபகாலமாக நீண்ட தூரம் பைக் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பைக்கில் நீண்ட தூரப் பயணங்கள் மேற்கொள்வதில் அனுபவம் இல்லாததால், சிலர் வழியில் பல சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. கேடிஎம் நடத்தும் இந்த பைக் பயணத்தில் இடம், சூழல், வசதிக்கு ஏற்ப பைக்கைத் தேர்ந்தெடுப்பது முதல் பாதுகாப்பாகப் பயணம் செய்வது வரை, அனைத்து விஷயங்களும் புரிந்துகொள்ளும் வகையில் இருக்கும்’’ என்றார் கேடிஎம் நிறுவனத்தைச் சேர்ந்த கே.பி.வினோத்.

‘‘பல ஆண்டுகளாக பைக் ஓட்டுபவனாக இருந்தாலும் ஹெல்மெட், கிளவுஸ், ஜாக்கெட், ஷூ சகிதம் ஏன் பைக் ஓட்ட வேண்டும் என்பது இந்தப் பயணத்தில்தான் எனக்குப் புரிந்தது. நீண்டதூரப் பயணங்களின்போது, எப்படி நிதானமாகச் செயல்பட வேண்டும் என்பது முதல் பராமரிப்பின் முக்கியத்துவம் வரை கற்றுக்கொண்டேன்!’’ என்கிறார் திருச்சியைச் சேர்ந்த வாசு.

கேடிஎம் ஆரஞ்சு டே, பைக் ரைடு பிரியர்களுக்கு, இது மறக்க முடியாத அனுபவம்!