பைக்குகளின் இன்ஜின் சிசி ஏறிக் கொண்டே செல்கிறது. 150 சிசி காலம் மாறி, இப்போது 160 சிசி பைக்குகள் வந்துவிட்டன. யமஹாவின் FZ-16 பைக்குக்கு அடுத்தபடியாக, ஜிக்ஸர் எனும் 160 சிசி பைக்கை அறிமுகப்படுத்தியது சுஸூகி. இப்போது சுஸூகிக்குப் போட்டியாக ஹோண்டா, தனது சிபி யூனிகார்னில் 10 சிசியை அதிகரித்து, 160 சிசி பைக்காக விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கிறது. 10 சிசி ஏற்றத்தால் யூனிகார்னின் பெர்ஃபாமென்ஸில் ஏதும் மாற்றம் உண்டா? ஜிக்ஸர், யூனிகார்ன் - இந்த இரண்டில் எந்த பைக்கை வாங்கலாம்?

டிஸைன்

யூனிகார்ன், ஜிக்ஸர் - இரண்டு பைக்குகளுமே மாடர்ன் டிஸைன். பழைய யூனிகார்ன் ஒரு குடும்பஸ்தன் தோற்றத்தைக்கொண்டிருக்கும். ஆனால், யூனிகார்ன் 160 பைக்கின் ‘சிசி’ அதிகமாக இருந்தாலும், வயது குறைந்ததுபோல யூத்ஃபுல். முன்பைவிட ஷார்ப்பான கோடுகள், ஸ்லீக் ஹெட்லைட்ஸ் எனக் கவர்ச்சி காட்டுகிறது யூனிகார்ன் 160.

சுஸூகி ஜிக்ஸர் - முற்றிலும் புதிய பைக் என்பதால், டிஸைனர்கள் சுதந்திரமாக, கற்றுக்கொண்ட மொத்த வித்தைகளையும் காண்பித்-திருக்கிறார்கள். யூனிகார்ன் 160 பைக்கைவிட கம்பீரமான பைக், ஜிக்ஸர். பெரிய பெட்ரோல் டேங்க், தாழ்வான ஹெட்லைட்ஸ் கிளஸ்டர், அகலமான டயர்கள் என இளைஞர்கள் எதிர்பார்க்கும் அம்சங்கள் இதில் நிறைய!

மேலும், பெரிய ரியர் வீல் ஆர்ச், பைக்கின் பாடியில் இருந்தே எழும் ஸ்டைலான கிராப் ரெயில்ஸ் என நம்மை வசீகரிக்க ஏராளமான அம்சங்கள். க்ரோம் ஃபினிஷ், டூயல் பைப் டிஸைன்கொண்ட ஜிக்ஸரின் எக்ஸாஸ்ட், பார்க்க வித்தியாசமாக இருக்கிறது.

சுஸூகி ஜிக்ஸரின் சீட்டிங் பொசிஷன் கொஞ்சம் ஸ்போர்ட்டி. யமஹா FZ பைக் போல, உடலை முன்னே சாய்த்து, காலைப் பின்னே வைத்துக்கொள்ளும் இந்த சீட்டிங் பொசிஷன் பழகிவிட்டால், வசதியாக இருக்கும். ஹோண்டா யூனிகார்ன் 160 பைக்கில் இருப்பது வழக்கமான கம்யூட்டர் பைக் சீட்டிங் பொசிஷன்தான். முதுகு நேராக, கால்களும் கைகளும் அகலமாக வைத்துக்கொள்ளும்படியான சீட்டிங், சொகுசாக இருக்கிறது. ஆனால், ஜிக்ஸரைப்போல வசதியாக இல்லை. யூனிகார்ன் பைக்கின் ஹேண்டில்பாரைப் பிடித்துக் கொள்ள, நாம் சற்று முன்னே சாய வேண்டியிருக்கிறது. ஜிக்ஸரின் எர்கனாமிக்ஸில் இந்தப் பிரச்னை இல்லை.
இரண்டு பைக்குகளின் ஒட்டுமொத்தத் தரம் சூப்பர். ஆனால், சோக்-ஐ (Choke) கார்புரேட்டருக்கு அருகே வைத்துவிட்டது ஹோண்டா. அதேபோல், சாதாரண யூனிகார்ன் பைக்கில் அலாய் ஃபுட் ரெஸ்ட் இருக்க, இதில் ஸ்டீல்தான். கிளட்ச் அட்ஜஸ்ட்மென்ட் நட்டையும் காணவில்லை.

இன்ஜின்

இந்த இரண்டு பைக்குகளின் முக்கிய செல்லிங் பாயின்ட், இன்ஜின் டிஸ்ப்ளேஸ்மென்ட். சிபி யூனிகார்ன் பைக்கில் 162.7 சிசி, 4 ஸ்ட்ரோக், கார்புரேட்டர் கொண்ட இன்ஜின் 14.5 bhp சக்தியை 8,000 ஆர்பிஎம்மிலும், 1.5 kgm டார்க்கை 6,000 ஆர்பிஎம்மிலும் அளிக்கிறது. சாதாரண யூனிகார்ன் பைக்கைவிட சற்று மிரட்டலான எக்ஸாஸ்ட் சத்தத்துடன் உயிர்பெறுகிறது இந்த இன்ஜின். பழைய இன்ஜின்தான் என்றாலும் முழுக்கவே மாற்றியமைக்கப்பட்டுள்ளது; டார்க் அதிகரித்திருக்கிறது.

சுஸுகி ஜிக்ஸரில் இருக்கும் 155 சிசி, கார்புரேட்டர் இன்ஜின் 14.6 bhp சக்தியை 8,000 ஆர்பிஎம்மிலும், 1.43 kgm டார்க்கை 6,000 ஆர்பிஎம்மிலும் அளிக்கிறது. ஹோண்டா இன்ஜினைப் போலவே, துடிப்புடன் ரெட்லைன் வரை ஆக்ஸிலரேட் ஆகிறது ஜிக்ஸரின் இன்ஜின்.

ஜிக்ஸர் இன்ஜினின் லோ-எண்ட் பெர்ஃபாமென்ஸ் சிறப்பாக இருப்பதால், ஆக்ஸிலரேஷன் சூப்பர். ஆனால், அதிக வேகங்களில் இன்ஜினின் பவர் டெலிவரி சுமார்தான். யூனிகார்ன் இன்ஜின் மிட், டாப்-எண்ட் ஆர்பிஎம்களிலும் சீரான சக்தியை அளிக்கிறது. 0-100 கி.மீ வேகத்தை 15.43 விநாடிகளில் யூனிகார்ன் அடைய, 19.25 விநாடிகளில்தான் ஜிக்ஸர் இதைத் தொடுகிறது. இதனால் நகருக்குள் சீறுகிறது ஜிக்ஸர்.

ஓட்டுதல் மற்றும் கையாளுமை

ஓட்டுதல், கையாளுமையில் இரண்டு பைக்குகளுமே ‘வேற மாதிரி!’ ஹோண்டா யூனிகார்ன் ஸ்டேபிளான ஓட்டுதலைக் கொண்டிருக்கிறது. வளைவுகளில் ‘ஜிக்ஸர்’ போல இளைஞராக இல்லையென்றாலும், பிரச்னையில்லாத ஓட்டுதல் தரத்தைக் கொண்டிருக்கிறது. குறைவான வீல்பேஸ், நல்ல சஸ்பென்ஷன்தான் இதற்குக் காரணம். மேடு பள்ளங்களில் மிகவும் ஸ்டேபிளாகச் செல்கிறது யூனிகார்ன்.

சுஸூகி ஜிக்ஸரின் முன் பக்க 41 மிமீ ஃபோர்க்குகள், மோசமான சாலைகளை நன்றாகச் சமாளிக்கின்றன. ஆனால், இறுக்கமாக, ஸ்போர்ட்டியாக செட் செய்யப்பட்டிருக்கும் இந்த சஸ்பெஷன் மோச-மான சாலைகளில் சொகுசாக இல்லை. ஆனால், கையாளுமையில் பட்டையைக் கிளப்புகிறது ஜிக்ஸர். வளைவுகளில் ஓட்டுவதற்கு ஜாலியான பைக்காக இருக்கிறது. யூனிகார்னில் ஜாலியான ஓட்டுதல் அனுபவம் மிஸ்ஸிங்!

சுஸூகி ஜிக்ஸரில்

Brembo பிரேக்ஸ் நிறுவனத்தின் இந்திய பிராண்டான Bybre பிரேக்ஸ் உள்ளன. ஆரம்ப வேகங்களில் ‘கப்’ என பிடித்துக்கொள்ளும் இந்த பிரேக்ஸ், அதிக வேகங்களிலும் நல்ல ஃபீட்பேக் அளிக்கிறது. யூனிகார்ன் 160 பைக்கின் பிரேக்ஸ்தான் சற்று வித்தியாசமாக இருக்கிறது. பின் பிரேக்குகளை மட்டும் பிடித்தாலும், முன் பிரேக்குகளும் தானாகவே பிடித்துக் கொள்ளக்கூடிய கம்பைண்டு பிரேக்கிங் சிஸ்டம் இருந்தாலும், நம்பிக்கையை அளிக்கக்கூடிய பிரேக்கிங் பெர்ஃபாமென்ஸ் யூனிகார்னில் இல்லை. ஜிக்ஸருக்குச் சமமான டயர்கள், ஃபோர்க்குகள் இல்லை என்பதால்தான், இந்தத் திண்டாட்டம்.

மைலேஜ்:

ஹோண்டா யூனிகார்ன் 160 நகருக்குள் லிட்டருக்கு 42.4 கி.மீ மைலேஜும் நெடுஞ்சாலையில் 48.6 கி.மீ மைலேஜும் அளிக்கிறது. சுஸூகி ஜிக்ஸர், நகருக்குள் 41.7 கி.மீ மைலேஜும் நெடுஞ்சாலையில் 44.2 கி.மீ மைலேஜும் அளிக்கிறது.

பழைய யூனிகார்னுடன் ஒப்பிடும்போது, புதிய யூனிகார்ன் 160 பைக் பெரிய முன்னேற்றம் கண்டிருக்கிறது எனச் சொல்ல முடியாது. இது ஒன்றும் புத்தம்புதிய பைக் கிடையாது. முன்பைவிட இன்ஜின் சிறப்பாக இருக்கிறது. அவ்வளவுதான். இந்தப் போட்டியில் ஜெயிப்பது சுஸூகி ஜிக்ஸர்தான். யூனிகார்னைவிட பல அம்சங்களில் ஜிக்ஸர் சிறப்பாக இருக்கிறது. ஸ்போர்ட்டியான கையாளுமை, நிறைய வசதிகள் என ஒரு சாதாரண பைக் வாடிக்கையாளரையும் ஆர்வலராக மாற்றக்கூடிய பைக்காக இருக்கிறது, சுஸூகி ஜிக்ஸர்.