எப்போதும் பெரிய எஸ்யுவி கார்களுக்கான மரியாதையே தனி. ரியர் வியூ மிரரில் பார்த்ததுமே, ஒதுங்கி வழிவிட வேண்டும் என்று மிகச் சில கார்களைப் பார்த்தால்தான் தோன்றும். அப்படிப்பட்ட கார்களில் ஒன்று, டொயோட்டா ஃபார்ச்சூனர். இப்போது ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் 4 வீல் டிரைவ் மாடல் வந்திருக்கிறது. ஆனால், இந்த வசதிகள் எல்லாம் ஸாங்யாங் ரெக்ஸ்ட்டனில் ஏற்கெனவே இருக்கின்றன. இரண்டில் எது பெஸ்ட்?

டிஸைன்

வெளிநாடுகளைவிட இந்தியாவில்தான் எஸ்யுவிக்கு மதிப்பு அதிகம்; வேலையும் அதிகம். மோசமான சாலைகள், மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும் நிலப்பரப்பு என எதற்கும் சளைக்காமல் ஓடக்கூடிய கார். இது தவிர, காரின் உள்ளே ஒரு சொகுசு காருக்கான உணர்வும் இருக்க வேண்டும். இது அத்தனையும் டொயோட்டா ஃபார்ச்சூனரில் இருக்கின்றன.

மிரட்டலான டிஸைன். குறுகலான ஹெட்லைட்ஸ், அகலமான க்ரோம் க்ரில், அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் ஆகியவை ஃபார்ச்சூனருக்கு சீரியஸான லுக் அளிக்கின்றன. 4X4 ஆட்டோமேட்டிக் மாடலில் அலாய் வீல்கள், ஹெட்லைட்ஸ், டெயில் லைட்ஸ் கறுப்பு வண்ண தீமில் அளிக்கப்பட்டுள்ளன.

ஸாங்யாங் ரெக்ஸ்ட்டன், ஃபார்ச்சூனர் அளவுக்கு இல்லை. சாஃப்ட்டான டிஸைன் கொண்ட இது, ஃபார்ச்சூனர் போல நம்மை மிரட்டுவது இல்லை. பிரபல டிஸைனரான Giorgietto Giugiaroவின் கைவண்ணமான ரெக்ஸ்ட்டன், அவருடைய பெயரைக் காப்பாற்றும் விதத்தில் இல்லை.

இரண்டு கார்களுமே பாடி- ஆன்- ஃப்ரேம் கட்டமைப்பைக் கொண்டுள்ளன. ஃபுல் டைம் 4 வீல் டிரைவ் கொண்டிருந்தாலும் லோ- ரேஞ்ச் கியர்பாக்ஸ், லாக் செய்யக்கூடிய டிஃப்ரென்ஷியல் ஆகிய ஆஃப் ரோடர் சமாசாரங்கள் இருப்பது ஃபார்ச்சூனரில்தான். இதன் விளைவாக, ஃபார்ச்சூனரின் எடையும் அதிகரித்துவிட்டது. ரெக்ஸ்ட்டனில் ஹில் டிஸென்ட் கன்ட்ரோல் மட்டுமே உள்ளது. ஃபார்ச்சூனரின் இன்ஜின் பவர் குறைவுதான் என்றாலும், குறைந்த ஆர்பிஎம்-ல் டார்க் நன்றாக வெளிப்படுவதால், ஆஃப் ரோடிங்குக்கு வசதியாக உள்ளது.

உள்ளே

டொயோட்டா ஃபார்ச்-சூனரின் 4X4 ஆட்டோமேட்டிக் மாடலில், உள்ளே சில மாற்றங்கள் செய்திருக்கிறார்கள். இப்போது கறுப்பு வண்ணத்தில் அமைக்கப்பட்டிருக்கும் உள்பக்கம், இரட்டைத் தையல்கொண்ட கறுப்பு வண்ண லெதர் இருக்கைகளைக் கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாக, கொஞ்சம் ஸ்போர்ட்டியான லுக். ஆனால், இனோவாவைப் போலவே இருக்கும் ஸ்டீயரிங் வீல், ஏ.சி கன்ட்ரோல்கள் 30 லட்சம் ரூபாயைத் தொடும் பார்ச்சூனருக்கு ஏற்ற வகையில் இல்லை. டச் ஸ்கிரீன் நேவிகேஷன் சிஸ்டம், ஆஃப்டர் மார்க்கெட் பாகம்போல தரம் குறைவாக இருக்கிறது.

ரெக்ஸ்ட்டன் காரின் ஸ்டீயரிங்கும், டயல்களும் பழைய டிஸைனைக்கொண்டிருக்கின்றன. கியர் லீவரில் இருக்கும் பிளாஸ்டிக் தரம் ரொம்பவும் சுமார். இதன் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், பயன்படுத்த ஃபார்ச்சூனரைவிட சிரமமாக உள்ளது. ரெக்ஸ்ட்டன் நம்மை வசீகரிப்பது இருக்கையின் சொகுசில்தான். ஃபார்ச்சூனரின் முன்னிருக்கை இறுக்கமாக இருக்கும். ஆனால், ரெக்ஸ்ட்டனின் இருக்கைகள் சாஃப்ட்டாகவும், இதமாகவும் இருக்கின்றன. அதேபோல், ரெக்ஸ்ட்டனின் பின்னிருக்கையில்தான் மூன்று பேர் வசதியாக அமர்ந்து பயணிக்க முடியும்.

ஃபார்ச்சூனரின் பின்னிருக்-கையில் அதிக லெக்ரூம் இருக்கிறது. மூன்றாவது வரிசை இருக்கை நன்றாக இருந்தாலும், உயரமான காராக இருப்பதால், அதை அடைவது சிரமமாக இருக்கிறது. ரெக்ஸ்ட்டனின் மூன்றாவது வரிசை இருக்கைகள் ஃபார்ச்சூனர் அளவுக்குக்கூட இல்லை.
எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோக்ராம், ஆக்டிவ் ரோல்-ஓவர் புரொட்டெக்ஷன், சன்ரூஃப், டிரைவர் மெமரி சீட் என வசதிகளில் வசீகரிக்கிறது ரெக்ஸ்ட்டன். ஃபார்ச்சூனரில் ரிவர்ஸ் கேமரா இருக்கிறது. இது ரெக்ஸ்ட்டனில் இல்லை.

இன்ஜின்

4 வீல் டிரைவ், லேடர் சேஸி, டிரான்ஸ்ஃபர் கேஸ், பலமான சஸ்பென்ஷன் சிஸ்டம் - இவற்றை எல்லாம் சேர்த்தால், காரின் எடையும் கூடிவிடும் என்பது சயின்ஸ் தியரி. இந்த தியரியை பிராக்டிக்கலாக நமக்கு உணர்த்துகின்றன ஃபார்ச்சூனரும், ரெக்ஸ்ட்டனும். ஃபார்ச்சூனரின் ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டர் பாக்ஸ், மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட கார் போல சீறிக்கொண்டு ஆக்ஸிலரேட் ஆக மறுக்கிறது. நிதானமான இயக்கம் கொண்ட இந்த டார்க் கன்வெர்ட்டர், இன்ஜின் ஜோடி 2,000 - 3,000 ஆர்பிஎம்களில்தான் சிறப்பாக இருக்கிறது. 3 லிட்டர் டீசல் இன்ஜினில் டர்போ லேக் அவ்வளவாகத் தெரியவில்லை. அதேபோல், மிட் ரேஞ்சும் நன்றாக இருக்கிறது. கியர்பாக்ஸ் டவுன்ஷிஃப்ட் தரம் நன்றாக இருக்கிறது. 0-100 கி.மீ வேகத்தை 12.32 விநாடிகளில் அடைகிறது ஃபார்ச்சூனர் 4X4 ஆட்டோமேட்டிக்.

ரெக்ஸ்ட்டனின் 5 சிலிண்டர் டீசல் இன்ஜின் ஸ்மூத்தாகவும், வேகமாகவும் இருக்கிறது. 0-100 கி.மீ வேகத்தை 10.6 விநாடிகளில் கடந்து ஃபார்ச்சூனரை வேகப் போட்டியில் முந்துகிறது ரெக்ஸ்ட்டன். ஆனால், டர்போ லேக்கும் சாதுவான கியர்பாக்ஸும் ரெக்ஸ்ட்டனின் பெர்ஃபாமென்ஸைக் குறைத்துவிடுகின்றன. 100 கி.மீ வேகத்தைத் தாண்டிய பிறகு, பெர்ஃபாமென்ஸில் பின்தங்கிவிடுகிறது ரெக்ஸ்ட்டன். நாமே மேனுவலாக கியர் லீவரில் இருக்கும் பட்டன் மூலம் கியர் மாற்றிக்கொள்ளலாம் என்று பார்த்தால், அதுவும் சுமாராகவே இயங்குகிறது.

ஓட்டுதல் தரம், கையாளுமை

நல்ல எடைகொண்ட ஸ்டீயரிங், குறைவான பாடி ரோல் என ஒட்டுமொத்தத்தில் ஓட்டுதல் தரம், கையாளுமை சிறப்பாக இருப்பது டொயோட்டா ஃபார்ச்சூனரில்தான். ஆனால், இரண்டு கார்களிலுமே பிரேக்ஸ் சுமார். சாதாரணமாக ஓட்டுதலின்போது இந்த பிரேக்ஸ் ஓகே! ஆனால், முழு எடையுடன் சடன் பிரேக் அடிக்கும்போது, பிரேக்ஸ் பயம் ஏற்படுத்துகின்றன.

வாடிக்கையாளர்கள், எப்போதாவது ஆஃப் ரோடிங் மூடுக்கு வந்தாலும் ஃபார்ச்சூனர்தான் சரியாக இருக்கும். இயற்கையாகவே உயரமான கார் என்பதால், ஆஃப் ரோடிங்கில் முதல்கட்ட சவால்களை எளிதாகச் சமாளித்துவிடுகிறது ஃபார்ச்சூனர். மேலும் இதன் ஃபுல் டைம் 4X4 சிஸ்டத்தில், லோ- ரேஷியோ கியர்பாக்ஸ், லாக் செய்துகொள்ளக்கூடிய டிஃப்ரென்ஷியல் போன்றவை இருப்பதால், சீரியஸான சவால்களையும் ஃபார்ச்சூனர் ஒரு கை பார்த்துவிடும்.

ஆரம்ப வேகம், ஸ்மூத்தான இயக்கம், சொகுசான இருக்கைகள் என ரெக்ஸ்ட்டன் RX7 மாடல் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், ஃபார்ச்சூனர்தான் ஒட்டுமொத்த வின்னராக இருக்கிறது. ஓட்டுதல் தரம், கையாளுமை, நல்ல இன்ஜின் + கியர்பாக்ஸ் காம்பினேஷன், சூப்பரான ஆஃப் ரோடிங், இரண்டாவது வரிசை இருக்கையின் லெக்ரூம், மூன்றாவது வரிசையின் வசதி என செக் புக் பக்கம் கையைக் கொண்டுபோகிறது ஃபார்ச்சூனர். வெயிட்... வெயிட்... ஃபார்ச்சூனர், ரெக்ஸ்டனைவிட சுமார் 2.50 லட்சம் ரூபாய் அதிகம். இப்படி யோசித்தால், அதற்கும் ‘ரீ-சேல் மதிப்பு, நம்பகத்தன்மை’ என்று காரணங்களை அடுக்குகிறது ஃபார்ச்சூனர். பிரம்மாண்ட எஸ்யுவி வேண்டும் என்பவர்களுக்கு, ஃபார்ச்சூனர்தான் பெஸ்ட்!