மாருதிக்கும் மிட் சைஸ் செடான் மார்க்கெட்டுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். மாருதியின் பெலினோவால், மிட்சுபிஷி லான்ஸரோடும், ஹோண்டா சிட்டியோடும் மோதி ஜெயிக்க முடியவில்லை. நல்ல விலையில் விற்பனைக்கு வந்தாலும், SX4 காரால் வெற்றிபெற முடியவில்லை. மூன்றாவது முயற்சியாக, சியாஸ் செடானை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது மாருதி. இந்த முறை மாருதி வெற்றி பெறுமா?

டிஸைன், இன்ஜினீயரிங்

பார்ப்பதற்கு சிட்டியைவிட பெரிய காராகத் தெரிகிறது சியாஸ். 4,490 மிமீ நீளமும் 1,730 மிமீ அகலமும் போட்டி கார்களைவிட, ஒருபடி பெரிய காராகவே சியாஸைக் காட்டுகிறது. காரின் டிஸைனில் துளிகூட ரிஸ்க் எடுக்கவில்லை மாருதி. ‘இருக்கு... ஆனா, இல்லை’ என்பதுபோல, எந்தவிதத்திலும் நம்மைப் பாதிக்காத டிஸைனைக்கொண்டுள்ளது சியாஸ். இதன் போட்டி கார்களில், ஹூண்டாய் வெர்னா அழகாக இருக்கும்; ஹோண்டா சிட்டி, அலட்டிக்கொள்ளாத ஸ்டைலுடன் இருக்கும். ஆனால் சியாஸ், வியந்து வர்ணிக்க முடியாத சாதாரண டிஸைன்.

முன்பக்க கிரில்லைப் பார்த்ததுமே, ‘மாருதிதானே’ என்று எவரும் சொல்லி விடலாம். இப்படிப்பட்ட சாதாரண டிஸைனில் தனித்துத் தெரியும் ஒரே அம்சம், இதன் புரொஜெக்டர் ஹெட் லைட்ஸும், பம்பரில் உள்ள வென்ட்களும்தான். நாம் டெஸ்ட் செய்த ZXi வேரியன்ட்டில் 16 இன்ச் வீல்கள், காருக்குப் பொருத்தமாக இருக்கின்றன. பக்கவாட்டில், காரின் ஷோல்டர் லைனும் ரூஃப் லைனும் காருக்கு நல்ல தோற்றத்தை அளிக்கின்றன. அப்படியே பின்பக்கம் வந்தால், ஹோண்டா சிட்டி. ஆம், சியாஸ் காரின் பின்பக்க டிஸைன் அப்படியே ஹோண்டா சிட்டி போல இருக்கிறது. தொலைவில் இருந்து பார்த்தால், இது சியாஸா, சிட்டியா என்று குழப்பும்.

இந்த செக்மென்ட்டிலேயே பெரிய காராக இருந்தாலும், ‘லைட்’டான காரும் சியாஸ்தான். ஹை-டென்சில் ஸ்டீல் காரின் பாடி ஷெல் முழுக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளதால், சியாஸ் பெட்ரோல் மாடலின் எடை 1,025 கிலோ மட்டும்தான். இது பழைய SX4 காரைவிட 42 கிலோ குறைவு.

உள்ளே

சியாஸின் கேபின், இந்த செக்மென்ட்டிலேயே விசாலமானது. டேஷ்போர்டு தெளிவாக அமைக்கப்பட்டுள்ளது. கன்ட்ரோல்கள், பட்டன்கள் அனைத்துமே கைக்கு எளிதாக எட்டும் வகையில் உள்ளன. சில ஸ்விட்ச்களைச் சுற்றி இருக்கும் மெட்டல் எஃபெக்ட், காருக்கு பிரீமியம் உணர்வைத் தருகின்றன. ஆனால், ஸ்விப்ஃட், டிசையர் என விலை குறைந்த மாருதி கார்களில் இருக்கும் ஸ்டீயரிங் வீல், பவர் விண்டோஸ் பட்டன்கள் இங்கேயும் இடம்பிடித்துவிட்டன.
சியாஸின் மியூஸிக் சிஸ்டம் பயன்படுத்த எளிதாக இருக்கிறது. ப்ளூ-டூத் சிக்கல் இல்லாமல் இயங்குகிறது. முன்பக்கம் காற்றுப் பைகள், ஏபிஎஸ், கிளைமேட் கன்ட்ரோல், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, கீ-லெஸ் என்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட், ரியர் சன் பிளைண்ட், ரியர் ஏ.சி வென்ட், லெதர் சீட்ஸ் ஆகியவை ஸ்டாண்டர்டாகவே அளிக்கப்படுகின்றன. விரைவில் டச் ஸ்கிரீன் வசதியும் சியாஸில் சேர்க்கப்பட இருக்கிறது.

முன்னிருக்கைகள் வசதியாக இருந்தாலும் உயரமாக அமைக்கப்பட்டிருப்பதால், உயரமான ஓட்டுநர்களுக்கு வசதியான சீட் பொசிஷனைக் கண்டுபிடிக்க சிரமமாக இருக்கும். ஆனால், பின்னிருக்கையில் இடவசதி மிக அதிகம். டிரைவர் வைத்துச் செல்பவர்களுக்கு இது மிகவும் வசதியாக இருக்கும். இதைவிட ஒரு செக்மென்ட் அதிகமான கார்களில்கூட இவ்வளவு வசதிகள் இல்லை. முன்னிருக்கைகளை முழுவதுமாகப் பின் தள்ளிவைத்தால்கூட இடம் இருக்கிறது. பின்னிருக்கையில் இருக்கும் ஒரே பிரச்னை, இருக்கையின் சொகுசு. தொடைகளுக்கு இன்னும் சப்போர்ட் இருந்திருக் கலாம். ஹெட்ரூம் சுமார்தான். நான்கு கதவுகளிலும் 1 லிட்டர் தண்ணீர் பாட்டில் வைக்க இடங்கள் உள்ளன. பொருட்கள் வைக்கவும் போதுமான இடங்கள் உள்ளன. டிக்கியில் 510 லிட்டர் இடம் இருந்தாலும் பயன்படுத்த அவ்வளவு எளிதாக இல்லை.

இன்ஜின், கியர்பாக்ஸ், பெர்ஃபாமென்ஸ்

சியாஸில் மாருதி தன்னுடைய K14 பெட்ரோல் இன்ஜினை மைலேஜுக்காகவும் ஓட்டுதலுக்காகவும் முழுக்க மாற்றியமைத்துப் பொருத்தியுள்ளது.
ஆனால், சக்தியில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. இந்த பெட்ரோல் இன்ஜின் 6,000 ஆர்பிஎம்-ல் 91 bhp சக்தியை அளிக்கிறது. ஒரு மிட் சைஸ் செடானுக்கு இந்த பவர் குறைவு. ஆனால், கியர் ரேஷியோ சரியாக அமைக்கப்பட்டிருப்பதால், சமாளிக்கலாம். லைட்டான கிளட்ச், வேகமாக இயங்கும் கியர்பாக்ஸ் என்பதால், சிட்டி டிராஃபிக்கில் ஓட்டுவதற்கு நன்றாக இருக்கிறது சியாஸ் பெட்ரோல். குறைந்த ஆர்பிஎம்-ல் இருந்து நல்ல டார்க் கிடைப்பதால், கியர் லீவரை அதிகம் பயன்படுத்தத் தேவை இல்லை.

நெடுஞ்சாலையில்தான் இந்த இன்ஜின் சுமாரான பெர்ஃபாமென்ஸைக் காண்பிக்கிறது. மிட் ரேஞ்ச் வீக்காக இருப்பதால், அதிக ஆர்பிஎம்-க்குச் செல்லும்போது, இன்ஜினை அதிகம் வேலை வாங்குகிறோமோ என்று தோன்றுகிறது. 0-100 கி.மீ வேகத்தை அடைய 12.02 விநாடிகளைத்தான் எடுத்துக் கொள்கிறது.

ஓட்டுதல் மற்றும் கையாளுமை

சியாஸில், மிட் சைஸ் செடான்களுக்கான டெம்ப்ளேட் சஸ்பென்ஷன்தான். முன்பக்கம் மெக்ஃபர்ஸன் ஸ்ட்ரட்டுகளும், பின்பக்கம் நான்-இண்டிபென்டென்ட் டார்ஷன் பீம் சஸ்பென்ஷனும் இருக்கின்றன. ஆனால், சேஸி இறுக்கமாக இருப்பதாலும், பின்பக்க ஆக்ஸிலுக்கு ஆன்டி ரோல் பார் இருப்பதாலும் சஸ்பென்ஷனை சாஃப்ட்டாக செட்அப் செய்ய, மாருதி இன்ஜினீயர்களுக்குச் சுதந்திரம் கிடைத்திருக்கிறது.

இதனால், மோசமான சாலைகளை நன்றாகச் சமாளிக்கிறது சியாஸ். அதிக வேகங்களிலும் மேலும் கீழும் ஆடாமல் ஸ்டேபிளாகச் செல்கிறது. சஸ்பென்ஷனில் இருந்து சத்தங்களும் எழுவது இல்லை. 170 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் இருப்பதால், ஸ்பீடு பிரேக்கர்களைக் கண்டு அஞ்ச வேண்டியதும் இல்லை.

ஸ்டீயரிங் ஃபீட்பேக் சுமார் ரகம். நல்ல எடை கொண்டிருந்தாலும், வேகம் எடுத்தவுடன் வளைத்துத் திருப்பி ஓட்ட ஜாலியாக இல்லை; குறைந்த வேகங்களில் தானாகவே சென்டர் பொசிஷனுக்கு வருவதும் இல்லை.

மைலேஜ்

மாருதி என்றாலே, மைலேஜ்தானே! சிட்டி டிராஃபிக்கில் சியாஸ் பெட்ரோல் லிட்டருக்கு 11.5 கி.மீ மைலேஜையும், நெடுஞ்சாலையில் லிட்டருக்கு 17.2 கி.மீ மைலேஜும் அளிக்கிறது. சராசரியாக லிட்டருக்கு 14.3 கி.மீ மைலேஜ் அளிக்கிறது சியாஸ்.

ஒரு மிட்சைஸ் செடான் காரில் ஒருவர் நியாயமாக எதிர்பார்க்கக்கூடிய அத்தனை அம்சங்களும் சியாஸில் இருக்கின்றன. கேபின் விசாலமாக, தரமாக இருக்கிறது. ஓட்டுதல், கையாளுமை

குறைசொல்ல முடியவில்லை. சிட்டி டிராஃபிக்கில் பெட்ரோல் இன்ஜின் கைகொடுக்கிறது. மைலேஜ் நன்றாக இருக்கிறது. அத்துடன் மாருதியின் சூப்பரான ஆஃப்டர் சேல்ஸ் மதிப்பைச் சேர்த்தால், உங்கள் காசுக்கேற்ற காராக சியாஸ் திகழ்கிறது. ஆனால், பேச்சுவாக்கில்தான் இந்த ப்ளஸ் பாயின்ட் எல்லாம். சிட்டி மற்றும் வெர்னாவில் இருக்கும் கவர்ச்சி சியாஸில் மிஸ்ஸிங். டல்லான காரைப் போல தோற்றமளிப்பது சியாஸின் பெரிய மைனஸ். வெர்னா, சிட்டியைவிட சிறந்த கார் என ஒருபோதும் சியாஸைச் சொல்ல முடியாது.