புதிய சஸ்பென்ஷனுடன் அறிமுகமாகியிருக்கிறது, மஹிந்திரா ஸைலோ. பழைய காரில் இருந்த டைனமிக்ஸ் பிரச்னைகள், புதிய ஸைலோவிலும் இருக்கிறதா?

2009-ம் ஆண்டில் டொயோட்டா இனோவாவை டார்கெட் செய்து விற்பனைக்கு வந்தது மஹிந்திரா ஸைலோ. ஆனால், மெக்கானிக்கலாக இனோவாவை வீழ்த்தும் அளவுக்கு, சிறந்த எம்பிவியாக ஸைலோ அப்போது இல்லை. மஹிந்திரா சுதாரிப்பதற்குள் செவர்லே என்ஜாய், மாருதி எர்டிகா, ஹோண்டா மொபிலியோ என எம்பிவி செக்மென்ட், விஐபி செக்மென்ட்டாக வேமெடுக்க, பழைய காருடன் மாட்டிக்கொண்டது மஹிந்திரா. 2016-ல் புதிய தலைமுறை ஸைலோ அறிமுகமாகும் வரை, எம்பிவி செக்மென்ட்டில் தான் மறக்கப்படாமல் இருக்க, தற்போதைய காரை அப்டேட் செய்திருக்கிறது மஹிந்திரா.

புதிய ஸைலோவில், சஸ்பென்ஷனை முழுவதும் மாற்றியமைத்திருக்கிறார்கள். முன்பக்கம், டாம்பர்கள் இன்னும் சரியாக செட் செய்யப்பட்டிருக்கின்றன. சஸ்பென்ஷன் புஷ்கள் இறுக்கமாக்கப்பட்டுள்ளன. கன்ட்ரோல் ஆர்ம் முற்றிலும் புதியவை. ஸ்ட்ராங்கான ஆன்டி ரோல் பார், காரை வளைத்துத் திருப்பும்போது முன்பைவிட பாடி ரோலைக் கட்டுக்குள் வைக்கும். பின்பக்கம், இறுக்கமான காயில் ஸ்பிரிங்குகள் காரின் குலுங்கலைக் குறைக்கும். மேடு பள்ளங்களில் சஸ்பென்ஷனைக் காக்க, பாலியுரிதீன் பம்ப் ஸ்டாப்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

புதிய ஸைலோவை ஓட்டினால், இந்த மெக்கானிக்கல் மாற்றங்களை நன்றாகவே உணர முடிகிறது. எல்லா வேகங்களிலும் முன்பைவிட ஸ்டேபிளாகச் செல்கிறது. நெடுஞ்சாலையில் பழைய ஸைலோவின் ஆட்டம் கடுப்பேற்றும். ஆனால், புதிய ஸைலோ மேலும், கீழும் ஆடாமல் பயணிக்கிறது. சடன் பிரேக்கின்போது பயமுறுத்துவது இல்லை. ஆனாலும், என்னதான் ஸைலோ முயற்சித்தாலும், இனோவாவின் ஓட்டுதல் தரம், ஸ்டெபிளிட்டி, கையாளுமை இதில் இல்லை. காரணம், ஸைலோவின் சென்டர் ஆஃப் கிராவிட்டி அதிக உயரத்தில் இருக்கிறது.

ரோடு ஷாக்கூட ஸ்டீயரிங் வீலில் தெரிகிறது. கிளட்ச் இன்னும் டைட்டாகவே இருக்கிறது. ஸைலோவில், ஸ்கார்ப்பியோவில் இருக்கும் எம்-ஹாக் இன்ஜின்தான். ஆனால் இதில், ஸ்மூத்னெஸ் குறைவாக உள்ளது. காரின் உள்ளே புதிய பீஜ் வண்ண டேஷ்போர்டு, இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் சேர்க்கப்பட்டுள்ளன. இட வசதிதான் ஸைலோவின் ப்ளஸ் பாயின்ட். ஆனால், எல்லா இருக்கைகளும் பயன்பாட்டில் இருக்கும்போது, லக்கேஜுக்கு இடம் இல்லை. வெளியே, காரின் முன்பக்கம், க்ரில்லுக்கு மேலேயும், டெய்ல்கேட்டிலும் க்ரோம் பார்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

புதிய ஸைலோவைவிட லேட்டஸ்ட் எம்பிவி கார்கள் சந்தையில் இருக்கும் நிலையில், விற்பனைக்கு வந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு செய்யப்பட்டுள்ள இந்த மாற்றங்கள், ஸைலோவுக்குக் கைகொடுக்குமா என்பது சந்தேகமே!