‘சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால், நாட்டில் பெட்ரோல், டீசல் விலை அதற்கு ஏற்றதுபோல உயர வேண்டும். அதுதான் சந்தைப் பொருளாதாரம். அப்போதுதான் எண்ணெய் நிறுவனங்களை நஷ்டத்தில் இருந்து காப்பாற்ற முடியும்’ என்று நமது மத்திய அரசு சொல்லி, செயல்படுத்தியும் வந்தது. இப்போது உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சியடைந்து வருகிறது. ஆனால், இந்த வீழ்ச்சிக்குத் தகுந்தாற்போல நம் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை. காரணம், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தங்களின் லாபத்தை உயர்த்திக்கொள்வதற்காக பெட்ரோல், டீசல் விலையைக் குறைவாகவே குறைத்தன. இன்னொருபுறம் மத்திய அரசு, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியைக் கணிசமாக உயர்த்திவிட்டது. அதனால், கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியின் பயன், மக்களுக்குக் கிடைக்காமல் தடுக்கப்பட்டுவிட்டது. அதனால், இப்போது விமானத்தின் எரிபொருளைவிட வாகனங்களுக்குப் பயன்படுத்தப்படும் எரிபொருள் விலை அதிகமாக இருக்கிறது. இது என்னவிதமான பொருளாதாரக் கொள்கை என்பதை மத்திய அரசுதான் தெளிவுபடுத்த வேண்டும்.

அலட்சியமாக கார் ஓட்டிய யாரோ ஒருவரால் ஏற்பட்ட விபத்து, எப்படி ஓர் இளம்பெண்ணின் கனவுகளையும் அவரது குடும்பத்தையும் சிதைத்தது என்பதை, நேரடியாகப் பார்க்கும் இளைஞன் ஒருவன் இடிந்துபோகிறான். அந்த இளம்பெண் அற்ப ஆயுளில் மரணம் அடைந்ததற்குக் காரணமான அந்த காரோட்டியைத் தீவிரமாகத் தேடும்போது, அந்த அலட்சியமான காரோட்டியே தான்தான் என்ற உண்மை அவனுக்குத் தெரிகிறது. கார் ஓட்டிக்கொண்டிருக்கும்போது, லேசாக சிணுங்கிய தன் ஸ்மார்ட்போனுக்கு வந்த குறுஞ்செய்தியை யார் அனுப்பியது என்று பார்ப்பதற்காக, சாலையைவிட்டு அவன் கண்களை எடுத்த அந்தக் கண நேர அலட்சியம்தான், ஸ்கூட்டரில் சென்ற ஓர் இளம்பெண் உயிர் மடியக் காரணமாக அமைந்தது என்பதை அறிந்து, வேதனையில் வெந்து பரிகாரம் தேடுகிறான்.

சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘பிசாசு’ என்ற திரைப்படத்தின் மையக் கருதான் இது. உண்மைதான். வாகனம் ஓட்டிக்கொண்டிருந்தாலும் வருகின்ற செல்போன் அழைப்புகளை எல்லாம் அட்டெண்ட் செய்துவிட வேண்டும்; குறுஞ்செய்திகளை எல்லாம் படித்துவிட வேண்டும். முடிந்தால், அப்போதே பதிலும் அனுப்பிவிட வேண்டும் என்ற சுயநலத்தில்தான் இன்று கணிசமானோர் இருக்கிறார்கள். அதேசமயம், தனக்கு மாரடைப்பே வந்தாலும் தன்னுடைய வாகனத்தில் பயணிப்போருக்கும் சாலையில் செல்வோருக்கும் எந்த ஆபத்தும் வந்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில், ஓட்டிக்கொண்டிருக்கும் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு, உயிர் துறக்கும் ஆனந்தன், சம்பத் போன்ற ஓட்டுநர்களின் தியாகச் செயல்களும் பத்திரிகைகளில் அவ்வப்போது வந்தவண்ணம் இருக்கின்றன.

சாலையில் ஒருவர் காட்டும் சுயநலம், விபத்தில் முடிவதை பலர் பார்க்காவிட்டாலும் இதுபோன்ற சுயநலங்களால் வாகன நெரிசல்கள் உருவாவதை அன்றாடம் பார்க்காதவர்கள் இருக்க முடியாது. அதனால்தான், ‘நீங்கள் முதலில் செல்லுங்கள் என்று எப்போதும் சொல்லுவோம்’ என்ற தாரக மந்திரத்தை ஊர் முழுதும் முழங்கிவருகிறார்கள் போக்குவரத்து போலீஸார். இந்த மனப்பான்மை மட்டும் அனைவருக்கும் வந்துவிட்டால், வாகன நெரிசல் மட்டுமல்ல... விபத்துகளையும் கணிசமாகக் குறைத்துவிட முடியும்!

என்றும் உங்களுக்காக

ஆசிரியர்