ஆட்டோமொபைல் உலகில், போட்டியாளரைவிட தொழில்நுட்பத்தில் ஒருபடி முன்னே இருப்பதுதான் புத்திசாலித்தனம். கார்களின் எதிர்காலம் மின்சாரத்தின் கையில் இருக்க, கமர்ஷியல் வாகனங்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்? மின்சாரத்தில் லாரியை இயக்குவது சாத்தியமா? ‘‘எங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்துக்கு வாருங்கள். கன ரக வாகனங்களின் எதிர்காலத்தைக் காட்டுகிறோம்!’’ என்று அழைத்தது அசோக் லேலாண்ட்.

சென்னை, ரெட் ஹில்ஸ் அருகே வெள்ளிவயல் சாவடியில் இருக்கிறது அசோக் லேலாண்டின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம். அங்கே எலெக்ட்ரிக் தோஸ்த், 10 டன் எலெக்ட்ரிக் மினி பஸ், 10 டன் எலெக்ட்ரிக் டிரக், எத்தனால் மூலம் இயங்கக்கூடிய தோஸ்த் என நான்கு ப்ரோட்டோ டைப் வாகனங்களைத் தயார் செய்துவைத்திருந்தனர். கன ரக வாகனங்களின் எதிர்காலத்தைக் கண் முன் காட்டிய ப்ரோட்டோ டைப் மாடல்களை டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்தோம்.

e-தோஸ்த்

650 கிலோ எடையைச் சுமக்கக்கூடியது இந்த e-தோஸ்த். பார்க்க வழக்கமான தோஸ்த் போல இருந்தாலும், பின்பக்கம் பெரிய லித்தியம் அயான்-ஃபாஸ்பேட் பேட்டரி இருக்கிறது. இந்த பேட்டரியின் எடை மட்டுமே 350 கிலோ. உள்ளே கியர் லீவருக்குப் பதிலாக ஃபார்வர்டு, ரிவர்ஸ் லீவர் மட்டுமே இருந்தன. சாவியைத் திருகியதும் மெல்லிய சத்தத்துடன் ‘ஆன்’ ஆனது e-தோஸ்த். அதிர்வுகளோ, சத்தமோ இல்லை. லீவரை ஃபார்வர்டு மோடுக்குத் தள்ளிவிட்டு, ஆட்டோமேட்டிக் கார் போல பிரேக்கில் இருந்து காலை எடுத்தால், லேசாக முன்னே நகர்கிறது தோஸ்த். ப்ரோட்டோ டைப் என்பதால், பவர் ஸ்டீயரிங் இல்லை. இதனால், வாகனத்தின் மொத்த எடையும் ஸ்டீயரிங்கில் எதிரொலிப்பதால், திருப்புவதற்கே தனித் திறமை வேண்டும் என்பதுபோல் இருக்கிறது.

ஆக்ஸிலரேட்டரை மிதித்தால், சீறுகிறது தோஸ்த். அதன் பிறகு, ஸ்டீயரிங் எளிதாக இருந்தாலும், கவனமாகவே திருப்பவேண்டியிருந்தது. சுத்தமாக சத்தமே வராது என்பதால், மணிக்கு 15 கி.மீ-க்குக் கீழே செல்லும்போது சுற்றியிருப்பவர்களை எச்சரிக்க அலாரம் ஒலித்துக்கொண்டே வருகிறது. 0-60 கி.மீ வேகத்தை 24.66 விநாடிகளில் கடந்தது e-தோஸ்த். ஒரு ஃபுல் சார்ஜுக்கு 50 கி.மீ செல்கிறது. 33.53hp / 14.27kgm எலெக்ட்ரிக் மோட்டாரில் இயங்கும் இது, இன்னும் லைட்டான ஸ்டீயரிங்குடன், அதிக தூரம் பயணிக்கும்படி இருந்தால், வாடிக்கையாளருக்கு உண்மையாகவே ‘தோஸ்த்’ ஆகிவிடும்.

e-Truck

10 டன் Boss டிரக்கை, முழுமையாக எலெக்ட்ரிக் டிரக்காக மாற்றியிருக்கிறது அசோக் லேலாண்ட். 4.6 டன் எடை சுமக்கக்கூடிய இந்த e-டிரக்கில்50hp/20.39kgm, 3-ஃபேஸ் AC இண்டக்ஷன் மோட்டார் இருக்கிறது. இதனுடன் லிக்விட் கூல்டு 240 Kw இன்வெர்ட்டரும் உண்டு. அதிகபட்சமாக மணிக்கு 95 கி.மீ வரை செல்லக்கூடிய இந்த டிரக்கின் ரேஞ்ச், ஒரு ஃபுல் சார்ஜுக்கு 100 கி.மீ செல்லும். இது ஒரு டிரக்; அதுவும் ப்ரோட்டோ டைப் என்பதால், அசோக் லேலாண்டின் இன்ஜினீயர் ஒருவரே நம்மை ஏற்றிக்கொண்டு ஓட்டிக் காட்டினார். வழக்கமான டீசல் டிரக்கின் அதிர்வுகளோ, கரகரவென சத்தமோ இல்லை. பக்கா ஸ்மூத். டயர் சத்தம் மட்டுமே கேட்கிறது. ஜீரோஆர்பிஎம்-ல் இருந்தே டார்க் கிடைப்பதுதான் எலெக்ட்ரிக் மோட்டார்களின் மிகப் பெரிய ப்ளஸ் பாயின்ட். அதனால், அதிக எடை இருந்தாலும், டீசல் டிரக்குகள் சிரமப்படுவதுபோல, இந்த டிரக் சிரமப்படவில்லை. டிவிஎஸ் 50 போல இதை எளிதான ஓட்ட முடிகிறது.

எத்தனால் தோஸ்த்

அசோக் லேலாண்ட் தயார் செய்திருந்த ப்ரோட்டோ டைப்களில், செம இன்ட்ரஸ்டிங்கான வாகனம், எத்தனால் மூலம் இயங்கும் தோஸ்த் மட்டுமே. இதுதான் இந்தியாவின் முதல் எத்தனால் - பவர்டு மினி டிரக். BS IV மாசுக் கட்டுப்பாட்டுத் தரத்தைப் பூர்த்தி செய்யும் இந்த எத்தனால் இன்ஜின், 3,300 ஆர்பிஎம்-ல் 45hp சக்தியை அளிக்கிறது. 10.70 kgm டார்க்கை 1,600-2,400
ஆர்பிஎம்-ல் அளிக்கிறது. ஆன் செய்தால், பயங்கரமான குலுங்கலுடன் ஆன் ஆகியது எத்தனால் இன்ஜின். வழக்கமான டீசல் இன்ஜினைவிட அதிக சத்ததுடன் இயங்கிய இந்த இன்ஜினின் ஆர்பிஎம் சீராக இல்லை. முதல் கியரில் போட்டு, ஆக்ஸிலரேட்டரை மிதித்தால், டீசல் இன்ஜின்கொண்ட புல்லட் போல அதட்டலுடன் நகர்கிறது எத்தனால் தோஸ்த். பவர் டெலிவரி, ஆர்பிஎம், திராட்டில் ரெஸ்பான்ஸ் என எதுவுமே குறைந்த ஆர்பிஎம்-ல் சீராக இல்லை. ‘ப்ரோட்டோ டைப் என்பதால் இன்னும் எக்ஸாஸ்ட் டியூனிங் செய்து முடிக்கவில்லை’ என்றார்கள். ஓர் ஆர்வலராகப் பார்த்தால், வெறும் ஆக்ஸிலரேஷனில் மட்டுமே ஈர்த்த எலெக்ட்ரிக் டிரக்/தோஸ்த்தைவிட, எத்தனால் தோஸ்த் உயிரோட்டமான அனுபவத்தைக் கொடுக்கிறது. சட்டப்படி, எத்தனால் கிடைப்பது மிகச் சிரமமாக இருப்பதால், எத்தனால் தோஸ்த் வாகனத்தை டெஸ்ட் செய்வதே கடினமாக இருக்கிறதாம்.

தவிர, e-Midi பஸ் ஒன்றைத் தயார் செய்துவைத்திருந்தது அசோக் லேலாண்ட். மினி பஸ்ஸைவிடப் பெரிதாக, ஆனால் முழு பஸ்ஸைவிட சிறிதாக இருக்கும் பஸ்களை Midi பஸ் என்று அழைக்கிறார்கள். அசோக் லேலாண்ட்டின் ப்ரோட்டோ டைப் இன்னும் டெவலப்மென்ட் நிலையில் இருந்ததால் ‘புகைப்படம் வேண்டாமே!’ எனக் கேட்டுக்கொண்டார்கள்.
அசோக் லேலாண்ட் நிறுவனம் மின்சார வாகனங்கள் ஆராய்ச்சியில் செல்லும் வேகத்தைப் பார்த்தால், அரசும் வாடிக்கையாளர்களும்தான் இதன் வேகத்துக்கு ஈடுகொடுக்க வேண்டும்போல இருக்கிறது!