கடந்த இதழில், காரின் இதயமான இன்ஜின் இயக்கத்தைப் பற்றியும், அதன் மூளையான இன்ஜின் கன்ட்ரோல் யூனிட் பற்றியும் பார்த்தோம். இப்போது, இன்ஜினில் இருந்து வரும் சக்தி, எப்படி சக்கரங்களுக்குக் கடத்தப்படுகிறது என்பதைப் பார்க்கலாம்.

ஆட்டோமொபைல் இன்ஜின்களில் பயன்படுத்தப்படுவது, இன்டர்னல் கம்பஷன் இன்ஜின் (Internal combustion Engines). எரிபொருள் (டீசல், பெட்ரோல், எல்பிஜி) மூலமாக இயங்கும் இன்ஜின்களின் அவுட்புட், கிராங்க் ஷாஃப்ட் மூலமாகச் சுழற்சியாக வெளிப்படும். இதுதான் இன்ஜின் ஆர்பிஎம் (rpm- Revolutions per minute) எனக் குறிப்பிடப்படுகிறது. இன்ஜின் அவுட்புட் வேகம், நார்மலான காருக்கு - ஆக்ஸிலரேட்டரை அழுத்தும் விதத்தைப் பொறுத்து 600 rpm முதல் 5,000 rpm வரை மாறுபடும். அந்த வேகத்தில் சுற்றும் இன்ஜினை, அப்படியே நேரடியாக காரின் சக்கரங்களுடன் இணைத்து இயக்க முடியாது. ஏன்?

1. நின்றுகொண்டிருக்கும் வாகனம் புறப்பட வேண்டும் என்றால், சக்கரங்களுக்கு வாகனத்தின் எடை, சாலையின் ஃப்ரிக்ஷன், எதிர்ப்படும் காற்றின் வேகம் ஆகிய தடைகளைத் தாண்டிய ஒரு திருப்பு விசை (Torque) தேவைப்படுகிறது. அத்தகைய அதிக டார்க், இன்ஜின் வெகு குறைவான ஆர்பிஎம்-ல் இயக்கும்போது மட்டுமே கிடைக்கும். அதனால், இன்ஜினின் வேகத்தைக் குறைக்க வேண்டும்.

2. சராசரி வேகத்தில் சீராகச் செல்லும் காரை, ஏதேனும் காரணங்களுக்காக ரிவர்ஸ் எடுக்க நினைத்து, அதே வேகத்தில் ரிவர்ஸில் கார் செல்வதை யோசிக்க முடிகிறதா? அதனால், வாகனத்தை ரிவர்ஸில் செலுத்தும்போதும், இன்ஜின் வேகத்தைக் குறைக்க வேண்டும்.

3. சாலையில் மேடு பள்ளம் இருந்தால், அந்த நேரங்களில் வாகனத்தின் வேகத்தைச் சீராகக் குறைக்க வேண்டும். அப்போதுதான் அதிக டார்க் தேவைப்படும்.

4. இன்ஜின் இயக்கத்தில் ஒரு குறிப்பிட்ட ரேஞ்சில்தான் அதிக டார்க் கிடைக்கும்; அதிக பவரும் கிடைக்கும். அந்த வேகத்தைக் கடக்கையில் இன்ஜின் வெப்பம் அதிகமாகும், அதனால், வெப்ப இழப்பு ஏற்படும். மேலும், மைலேஜும் கிடைக்காது. அதிக மாசுக்கள் சுற்றுச்சூழலில் சென்று சேரும் நிலையும் வரும். இதனால், இன்ஜின் வேகத்தை, நமக்குத் தேவையான அளவுக்குக் குறைக்கவும், சில சமயங்களில் கூட்டவும் வேண்டும்.
இதையெல்லாம் காருக்குள் செய்யும் அமைப்புதான் ட்ரான்ஸ்மிஷன் சிஸ்டம். இதை, சிம்பிளாகச் சொல்ல வேண்டும் என்றால், பவர் ஸ்டேஷனில் இருந்து வரும் ஹை வோல்டேஜ் மின்சாரத்தை, வீட்டு உபயோகத்துக்குத் தேவையான லோ வோல்டேஜ் மின்சாரமாக மாற்றித் தருகிற டிரான்ஸ்ஃபார்மர் மாதிரி என வைத்துக்கொள்ளலாம்.

ட்ரான்ஸ்மிஷனின் முக்கிய வேலை, இன்ஜின் வேகத்தை தேவைக்கேற்ப கூட்டிக் குறைப்பதாகும். உதாரணத்துக்கு, இரண்டு கியர்களை எடுத்துக்கொள்வோம். ஒன்று பெரிது; மற்றொன்று, அதில் பாதி சிறிது. பெரிய கியரையும், சின்ன கியரையும் ஒன்றோடு ஒன்று இணைத்துச் சுழல வைத்தால், பெரிய கியர் ஒரு முழுச்சுற்று சுற்றுவதற்குள், சின்ன கியர் இரண்டு முழுச் சுற்றுக்களை முடித்திருக்கும். இதையே மாற்றிச் சொன்னால், சின்ன கியரின் இரண்டு முழுச் சுற்றுக்களும் பெரிய கியரின் ஒரு முழுச் சுற்றுக்குச் சமம். இரண்டு கியர்களும், ஒரே நேரத்தில் சுற்றுகையில், பெரிய கியரின் வேகம், சிறிய கியரின் வேகத்தில் பாதிதான் இருக்கும்.

அப்படியே சின்ன கியரில், இன்ஜின் ஷாஃப்ட்டை இணைத்து, பெரிய கியரில் வாகனத்தின் ஆக்ஸில் ஷாஃப்ட்டை இணைத்தால், என்ன நடக்கும்? (இன்ஜினுக்கும் ஆக்ஸில் ஷாஃப்ட்டுக்கும் நடுவில் இன்னும் சில பாகங்கள் உள்ளன. அவற்றைப் பிறகு பார்ப்போம்.)

இன்ஜின் வேகம், அப்படியே பாதியாகி ஆக்ஸில் ஷாஃப்ட்டைச் சுற்றவைக்கும். இதுதான் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பில் இருக்கும் கியர்பாக்ஸின் வேலை. எவ்வளவுக்கு எவ்வளவு சின்ன கியரை இன்ஜின் ஷாஃப்ட் உடனும், பெரிய கியரை ஆக்ஸில் ஷாஃப்ட் உடனும் இணைக்கிறோமோ, அந்த அளவுக்கு இன்ஜின் வேகத்தைக் குறைக்க முடியும். அதனால், வாகனத்தை நகர்த்தும் அளவுக்குத் தேவையான டார்க் நமக்குக் கிடைக்கும். ஆனால், அதில் இருக்கும் முக்கியப் பிரச்னை என்னவென்றால், பெரிய கியரை உபயோகித்தால், அதற்கேற்ற மாதிரி கியர்பாக்ஸின் அளவையும் பெரிதாக வடிவமைக்க வேண்டும். பிறகு காரில் ஒரு சீட்டைக் குறைக்க வேண்டியிருக்கும். அதுபோக, டிராஃபிக் நிலைக்கு ஏற்றதுபோல நாலைந்து வகை வேகங்களில் இன்ஜின் வேகத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். அதனால், ஒரே ஒரு பெரிய கியர் அமைப்பதைத் தவிர்த்து, நாலைந்து அளவுகளில் வெவ்வேறு கியர்களை வடிவமைத்து இணைக்க வேண்டும். ஒவ்வொரு கியரையும், இன்ஜின் ஷாஃப்ட்டில் இருக்கும் கியருடன் இணைக்கையில், இணைந்துள்ள கியருக்கு ஏற்றதுபோல, வெவ்வேறு வேகங்கள் கிடைக்கும். உதாரணத்துக்கு, காரை இயக்க ஆரம்பிக்கும்போது முதல் கியர்; டிராஃபிக்கில் இருந்து கிளம்பும்போது இரண்டாவது கியர்; சராசரி வேகத்தில் செல்ல நான்காவது கியர் (பெரும்பாலும், இந்த கியரில் வேகம் குறைக்கக் கூடாது. இன்ஜினின் வேகம், அப்படியே நேரடியாக சக்கரங்களுக்குக் கொடுக்கப்படும். இதை ‘டைரக்ட் டிரைவ்’ என்றும் சொல்வர்) என வெவ்வேறு வேகங்கள் கிடைக்கும். நெடுஞ்சாலையில் செல்லும்போது, இன்னும் அதிக வேகம் தேவைப்படும். அதனைத் தருவது இன்ஜினின் வேகத்தை அதிகப்படுத்திக் காட்டும் ஐந்தாவது கியரின் வேலை. இன்ஜின் ஷாஃப்ட், கியரின் அளவைவிட சின்ன அளவில் வடிவமைக்கப்பட்டிருக்கும். அதாவது, இன்ஜின் ஷாஃப்ட்டைவிட கிட்டத்தட்ட 125 சதவிகிதம் அதிக வேகத்தில் சுழல்வதுபோல வடிவமைக்கப் பட்டிருக்கும்.

சரி; இன்ஜினும் கியர்பாக்ஸும் முடிந்தது. ஆனால், இன்ஜின் இயங்கிக்கொண்டிருக்கும்போது, எப்படி கியர் மாற்ற முடிகிறது?

தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் கியர்களை, சட் சட் என மாற்றினால், கியர்கள் உடைந்துவிடும். அதனால், இன்ஜினுக்கும் கியர்பாக்ஸுக்கும் இடையில் மெல்லிதாக ஒரு கோடு இருக்கிறது. அதுதான் கிளட்ச். அது எப்படிச் செயல்படுகிறது என்பதை அடுத்த இதழில் பார்ப்போம்.

(எந்திரன் பேசுவான்)