சென்னை ராஜீவ் காந்தி சாலை; பரபரப்பான காலை நேரம்; சோழிங்கநல்லூர் சிக்னலில் ஆறு வயது சிறுவன், சிக்னலுக்காக நின்றிருக்கும் ஹெல்மெட் அணியாத பைக் ஓட்டிகளிடம் துண்டுப் பிரசுரம் கொடுத்து, “ப்ளீஸ் அங்கிள், ஹெல்மெட் போட்டு வண்டி ஓட்டுங்க!” என்கிறான்.

சிலர், அந்தச் சிறுவனைத் தோள்தட்டி உற்சாகப்படுத்த, பெரும்பாலானோர் அந்தச் சிறுவனைப் பார்த்ததுமே, டேங்க்கில் இருக்கும் ஹெல்மெட்டை உடனே அணிந்துவிடுகின்றனர். ‘பார்த்துக் கொடுப்பா, சிக்னல் ஓப்பன் ஆகப்போகுது’ என சிலர் பதற்றமாக... தனி ஆளாக வாகன நெரிசலில் புகுந்து விழிப்புஉணர்வை விதைத்துவிட்டு, சிக்னல் ஓப்பனாகும்போது விரைவாக வெளியேறுகிறான். நமக்கோ ஆச்சரியம். அந்தச் சாலையில் வழக்கமாகச் செல்பவர்களுக்கோ, இது தினசரி விஷயமாம். யார் இந்தச் சிறுவன்?

சிறுவனின் பெற்றோரான, படூரைச் சேர்ந்த ஓவியர் ஆனந்தன், யோகலெட்சுமி தம்பதியரைச் சந்தித்துப் பேசினோம். ‘‘கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு, மகன் ஆகாஷ் உடன், இரவு எட்டு மணியளவில், துரைப்பாக்கம் நோக்கி பைக்கில் போய்க்கொண்டிருந்தோம். அப்போது எங்களைக் கடந்து வேகமாகச் சென்ற பைக், முன்னே சென்ற வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது. கண்முன்னே நடந்த விபத்தைக் கண்டு அதிர்ச்சியாகி, உடனே ஆம்புலன்ஸுக்கு போன் செய்தேன். சாலையில் விழுந்து கிடந்த பைக் ஓட்டிவந்த வாலிபரைத் தூக்கினேன். உடலில் வேறெங்கும் காயங்கள் இல்லை. ஆனால், தலையில் மட்டுமே அடிபட்டு ரத்தம் வெளியேறிவாறு இருந்தது. ஆம்புலன்ஸ் வரும் முன்பே, அந்த வாலிபர் எங்கள் கண்முன்னே இறந்துபோனார்.

விபத்தை நேரடியாகக் கண்ட ஆகாஷ் அதிர்ச்சியில் இருந்தான். ‘‘அந்தப் பையன் ஹெல்மெட் போட்டிருந்தா, கண்டிப்பா உயிர் பிழைச்சிருப்பான்’ என்று மனைவியிடம் கூறியதைக் கேட்ட ஆகாஷ், “ஏம்பா, ஹெல்மெட் போட்டு வண்டி ஓட்ட மாட்றாங்க? பாவம் அந்த அங்கிள், ஹெல்மெட் போட்டிருந்தா உயிரோட இருந்திருப்பாரா?” என ஆகாஷ் கேட்டபோது, ‘ஆமாம்’ என்று சொல்லிவிட்டு சாதாரணமாக இருந்துவிட்டோம்.

ஆனால், மறுநாள் காலையில் ‘மறக்காம ஹெல்மெட் போட்டுக்கிட்டுப் போங்க’ என்று ஆகாஷ் என்னிடம் மட்டுமல்ல, பள்ளியிலும் வெளியிலும் ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டுபவர்களைப் பார்த்து, ‘ஹெல்மெட் போடுங்க அங்கிள்’ என்று தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தபோதுதான், அந்த விபத்து அவனை எவ்வளவு தூரம் பாதித்திருக்கிறது என்பதை உணர்ந்தோம். அதனால், ஆகாஷின் பிறந்தநாள் அன்று, “தலைக்கவசம் நமது உயிர்க்கவசம்’ என்ற விழிப்புஉணர்வு வாசகங்கள்கொண்ட துண்டுப் பிரசுரங்களை அவனுக்குப் பரிசாகக் கொடுத்தோம். தனக்குக் கிடைத்த பரிசை, சாலையில் இறங்கி அனைவருக்கும் கொடுக்க ஆரம்பித்தான் ஆகாஷ்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி, ஒரு பிரசுரத்துடன் ஆரம்பித்த ஆகாஷ், இந்த ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி சோழிங்கநல்லூர் சிக்னலில் தனது ‘ஒரு லட்சமாவது விழிப்புஉணர்வு துண்டுப் பிரசுரத்தைத் தாண்டிப் போய்க்கொண்டிருக்கிறான்.

U.K.G படிக்கும் ஆகாஷ், சென்னை நகரின் சிக்னல்களில் வேலை நாட்களில் மாலை நான்கு மணியில் இருந்து, ஆறு மணி வரைக்கும், விடுமுறை நாட்களில் காலை 11 மணியில் இருந்து மாலை 4 மணி வரை வெயில், மழை பாராது தனது அப்பா, அம்மா துணையோடு வந்து சுறுசுறுப்பாக விழிப்பு உணர்வுப் பிரசாரம் செய்துவருகிறான்.
சாலையில் வீசிச் சென்ற துண்டுப் பிரசுரங்களைச் சேகரித்துக்கொண்டிருந்த ஆகாஷிடம், ‘‘விளையாடப் பிடிக்காதா?” என்று கேட்டபோது, “இதுதான் அங்கிள், எனக்கு எப்பவுமே ஹேப்பியா இருக்கு!” என்று மழலை மொழியில் சொல்லிவிட்டு, சிக்னல் விழுந்ததும் பிரசுரங்களைக் கொடுக்க வேகமாக ஓடுகிறான்.

ஆச்சரிய ஆகாஷ்!