ஏழு பேர் உட்கார்ந்துசெல்லக்கூடிய பட்ஜெட் கார்களுக்கான மார்க்கெட் அதிகரித்துவிட்ட நிலையில், மாருதி எர்டிகாவுக்குப் போட்டியாக, மொபிலியோவை விற்பனைக்குக் கொண்டுவந்தது ஹோண்டா. மொபிலியோவின் டீசல் இன்ஜினை ஏற்கெனவே டெஸ்ட் செய்துவிட்ட நிலையில், இப்போது பெட்ரோல் இதயம் கொண்ட மொபிலியோவின் பெர்ஃபாமென்ஸ் எப்படி இருக்கிறது எனப் பார்ப்போம்.

மொபிலியோவின் டீசல் மாடல் விலை 10 லட்சம் ரூபாயைத் தாண்டிவிடும் நிலையில் 8-10 லட்சம் ரூபாய்க்குள் பெட்ரோல் மொபிலியோவை வாங்கிவிடலாம். மாதம் 1,500 கி.மீ் தான் அதிகபட்சம் பயணிப்போம்; 7 சீட்டர் கார் வேண்டும் என்பவர்களுக்கான சாய்ஸ்தான், பெட்ரோல் மொபிலியோ. இந்த செக்மென்ட்டின் டாப் செல்லரான எர்டிகா பெட்ரோல் மாடலின் ஆரம்ப விலை, 7.50 லட்சம். விலை உயர்ந்த மாடலின் விலை 9.25 லட்சம். எர்டிகாவின் விலை உயர்ந்த மாடலைவிட மொபிலியோவின் விலை உயர்ந்த மாடல் 1.25 லட்சம் ரூபாய் அதிகம். இந்த 1.25 லட்சம் ரூபாயை நியாயப்படுத்த, மொபிலியோவில் என்ன சிறப்பம்சங்கள் உள்ளன?

டிஸைன்

பிரியோ, அமேஸ் தயாரிக்கப்படும் அதே பிளாட்ஃபார்மில்தான் மொபிலியோவும் தயாரிக்கப்படுகிறது. அதனால், பிரியோ மற்றும் அமேஸ் கார்களின் சாயல் மொபிலியோவில் ஆங்காங்கே தெரிகிறது. பின்பக்கம்தான் மொபிலியோவின் ஸ்பெஷாலிட்டி. பின்பக்க விளக்குகள் அகலமாகவும் உயரமாகவும் வைக்கப்பட்டிருக்கின்றன. பின்பக்க விண்ட் ஸ்கிரீன் கொஞ்சம் வளைந்திருப்பதோடு, மூன்றாவது வரிசைக்கான கண்ணாடிகளும் பெரிதாக இருக்கின்றன. இதனால், காருக்குள் அதிக இடவசதி இருப்பதுபோன்ற தோற்றம் ஏற்படுகிறது.

உள்ளே

காருக்குள் உட்கார்ந்ததும், பிரியோ மற்றும் அமேஸில் இருக்கும் அதே டேஷ்போர்டுதான் மொபிலியோவிலும் உங்களை வரவேற்கும். ஆனால், புதிய வரவாக சென்டர் கன்ஸோலில் டச் ஸ்கிரீன் ஆடியோ சிஸ்டம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ப்ளூ-டூத், யுஎஸ்பி போர்ட் வசதியும் உள்ளன.

இன்ஜினுக்கான இடத்தைக் குறைத்து, ஆட்கள் உட்காருவதற்கான இடவசதியை அதிகரித்திருப்பதால், எர்டிகாவைவிட இடவசதி அதிகம்கொண்ட காராக இருக்கிறது மொபிலியோ.

எம்பிவி கார் என்றாலே, 7 பேர் வசதியாக உட்காரக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதுதான் கான்செப்ட். ஆனால், நம் ஊரில் திடீரென முளைத்திருக்கும் இந்த பட்ஜெட் எம்பிவி கான்செப்ட்டில், அந்த அடிப்படைச் சிறப்பம்சம் அடி வாங்கிவிட்டது. இப்போது 10 லட்சம் ரூபாய்க்குள் வெளிவந்திருக்கும் எந்த எம்பிவி காரிலுமே 7 பேர் வசதியாக உட்கார முடியாது. ‘ஐந்து பேர் + இரண்டு சிறுவர்கள்’ என்றுதான் இந்த 7 சீட்டர் கார்களைப் பார்க்க முடியும். சிறுவர்களைத் தவிர்த்து, மற்ற 5 பேராவது வசதியாக உட்கார இடம் இருக்கிறதா?

எர்டிகாவுடன் ஒப்பிடும்போது மொபிலியோவின் முதல் மற்றும் இரண்டாவது வரிசை இருக்கைகளில் தாராளமான இடவசதி இருக்கிறது. இரண்டாவது வரிசையில் உயரமான, மிக பருமனானவர்களும் வசதியாக உட்கார்ந்து பயணிக்கலாம். மேலும், இரண்டாவது வரிசை இருக்கைகளை முன்னும் பின்னும் தள்ளிக்கொள்ளும் வசதி இருப்பது, காருக்குள் இடத்தை அதிகரித்துக் கொடுக்கிறது. ஆனால், எர்டிகாவின் இருக்கைகளைப்போல மொபிலியோவின் இருக்கைகள் சாஃப்ட்டாக இல்லை. கதவுகள் அகலமாகத் திறப்பதால், மூன்றாவது வரிசை இருக்கைகளுக்குள் சென்று செட்டில் ஆவது ஈஸியாகவே இருக்கிறது. மூன்றாவது வரிசை இருக்கைகள் தாழ்வாக வைக்கப்பட்டிருப்பதால், இங்கே பெரியவர்கள் உட்கார்ந்து பயணிப்பது சிரமம். ஆனால், மாருதி எர்டிகா அளவுக்கு இடம் குறுகலாக இல்லை.

மொபிலியோவின் பெரிய ப்ளஸ் என்பது, மூன்று வரிசைகளிலும் ஆட்கள் உட்கார்ந்த பிறகும் டிக்கியில் பொருட்கள் வைக்க இடம் இருக்கிறது. மூன்றாவது வரிசையில் ஆட்கள் இல்லை என்றால், முழுவதுமாக அந்த இருக்கைகளை மடக்கிவிட்டு டிக்கியில் இட வசதியை அதிகரித்துக் கொள்ளலாம். மேலும், பின்பக்க டெயில் கேட் பகுதி உயரம் குறைவாக இருப்பதால், காருக்குள் பொருட்கள் வைப்பது ஈஸியாகவும் இருக்கிறது.

இன்ஜின்

7 சீட்டர் கார், 4.4 மீட்டர் நீளமான கார் என்பதெல்லாம், காரை வெளியில் இருந்து பார்க்கும்போதுதான். டிரைவர் சீட்டில் உட்கார்ந்துவிட்டால் ஏதோ சின்ன ஹேட்ச்பேக் காரை ஓட்டுவதைப்போன்ற உணர்வைத் தந்து உற்சாகப்படுத்துகிறது மொபிலியோ. ஹோண்டா சிட்டியில் இருக்கும் அதே 1.5 லிட்டர், 117bhp சக்திகொண்ட பெட்ரோல் இன்ஜின்தான் இந்த காரிலும் பொருத்தப்ட்டிருக்கிறது. புல்லிங் பவர் மிகவும் அதிகமாக இருப்பதோடு, கியர்களுக்கான இடைவெளியும் அதிகமாக இருப்பதால், ஆக்ஸிலரேட்டரை நன்றாக மிதித்து ஓட்டத் தூண்டுகிறது. 2,000 ஆர்பிஎம் முதல் 7,000 ஆர்பிஎம் வரை மொபிலியோ சீறுகிறது.

7 பேர் உட்கார்ந்து செல்லக்கூடிய ஃபேமிலி காரில், ஸ்போர்ட்டியான இன்ஜின்கொண்ட காரை ஓட்டுவது போன்ற உணர்வைத் தருவதுதான் மொபிலியோவின் பலம். 0 - 100 கி.மீ வேகத்தை 11.07 விநாடிகளில் கடக்கிறது மொபிலியோ. இதே வேகத்தைத் தொட எர்டிகா கிட்டத்தட்ட 14 விநாடிகள் (13.56) எடுத்துக்கொள்கிறது. மொபிலியோவின் டாப் ஸ்பீடு மணிக்கு 150 கி.மீ.

கையாளுமை

மேடு, பள்ளங்களில் ஏற்றி இறக்கும்போது காருக்குள் அலுங்கல் குலுங்கல்கள் அதிகமாக இல்லை. மாருதி எர்டிகாவில், கொஞ்சம் மோசமான சாலையில் பயணிக்கும்போது, காருக்குள் ஆட்டம் அதிகமாக இருக்கும்.
நெடுஞ்சாலையில் வேகமாகப் பறக்கும் போதுதான் காரின் ஸ்டெபிளிட்டியை உணர முடிகிறது. எவ்வளவு வேகமாகச் சென்றாலும் கார் மிகவும் ஸ்டேபிளாக இருப்பது கூடுதல் தைரியத்தைக் கொடுக்கிறது. எம்பிவி கார்களில் பொதுவாக பாடி ரோல் கொஞ்சம் அதிகமாக இருக்கும். அதாவது, வளைவுகளில் காரை வேகமாகத் திருப்பும்போது, காருக்குள் இருப்பவர்களும் திரும்புவோம். மொபிலியோவிலும் பாடி ரோல் இருக்கிறது. ஆனால், பயப்படும் அளவுக்கு இல்லை.

மைலேஜ்

ஹோண்டா மொபிலியோவின் பெட்ரோல் மைலேஜை இன்னும் முழுமையாகக் கணக்கிடவில்லை. ஆனால், நெடுஞ்சாலையில் செல்லும்போது அதிகபட்சமாக லிட்டருக்கு 17

கி.மீ வரை மைலேஜ் தருகிறது மொபிலியோ.

மொபிலியோ 7 சீட்டர் கார் என்றாலும், ஒரு ஹேட்ச்பேக் காரை ஓட்டுவது போன்ற உணர்வைத் தருவதால், ஓட்டுதல் தரத்தில் முதல் இடம் பிடிக்கிறது. நகருக்குள் ஓட்டுவதற்கு வேகமாக இருப்பதோடு, நெடுஞ்சாலையில் பயணிக்கும்போது ஸ்டேபிளாகவும் இருக்கிறது. மொபிலியோவின் பலம் என்பது இதன் டிஸைன், இடவசதி, கையாளுமை மற்றும் இன்ஜின் தரம்தான். சிறப்பம்சங்களைப் பொறுத்தவரை இரண்டு கார்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. எர்டிகாவைவிட 1 லட்சம் ரூபாய் அதிகம் கொடுக்க வேண்டுமே என்று நீங்கள் நினைத்தால், அது சிறந்த பெர்ஃபாமென்ஸுக்கும், ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமைக்காகவும் கொடுக்கப்படும் பணம் என மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும்!