இந்தியாவில் பிஎம்டபிள்யூ i8

விற்பனைக்கு வந்து விட்டது பிஎம்டபிள்யூ i8 ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார். இந்தியாவில் வெறும் 8 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட இருக்கின்றன. இதில் ஏற்கெனவே மூன்று கார்கள் புக் செய்யப்பட்டுவிட்டதாம். 1.5 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின்கொண்ட i8, 231bhp சக்தியை அளிக்க, லித்தியம் அயான் பேட்டரியுடன் இயங்கும் மோட்டார் 131 bhp சக்தியை அளிக்கிறது. எனவே, காரின் மொத்த சக்தி 362bhp. இதன் மைலேஜ் லிட்டருக்கு 47.45 கி.மீ. வெறும் பேட்டரியின் மூலம் 35 கி.மீ வரை செல்ல முடியும். பேட்டரியை முழுதாக சார்ஜ் செய்ய இரண்டரை மணி நேரம் ஆகும். சென்னையில் கிட்டத்தட்ட 2.50 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது i8.

சென்னையில் ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் !

சென்னையில் கோஸ்ட் (Ghost) சீரீஸ் II காரை விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது ரோல்ஸ்ராய்ஸ். தென்னிந்தியாவிலேயே முதலில் கோஸ்ட் II விற்பனைக்கு வரும் நகரம் சென்னைதான். சென்னையில், 4.5 கோடி ரூபாய்க்கு (ஆப்ஷனல் வசதிகள் சேர்க்காமல் மதிப்புக் கூட்டு வரியும், சாலை வரியும் சேர்க்காமல்) விற்பனை செய்யப்படுகிறது கோஸ்ட் சீரீஸ் II. விரைவில் புதிய எஸ்யுவி காரையும் தயாரிக்க இருப்பதாக சர்ப்ரைஸ் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது ரோல்ஸ்ராய்ஸ்.

‘Automeet’ 2015

சென்னை குரோம்பேட்டையில் உள்ள மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியின் ‘Automeet’ டெக் திருவிழா, கடந்த பிப்ரவரி 13, 14 தேதிகளில் கோலாகலமாக நடந்தது. ஆட்டோ எக்ஸ்போ, சென்னை சூப்பர் பைக்கர்ஸ் கிளப்பின் பைக் ஷோ என வந்திருந்தவர்களுக்கு முதல் நாளே கலர்ஃபுல் கொண்டாட்டமாக அமைந்தது. தவிர, ஆட்டோ க்விஸ், தமிழக பொறியியல் கல்லூரிகளில் தவறாமல் நடக்கும் நிகழ்வான ஆர்.சி கார் ரேஸிங், பிட் ஸ்டாப், கார் மாடலிங், க்ளே மாடலிங் போன்ற போட்டிகளுடன் கேமிங், ராயல் லைசென்ஸ் போன்ற ஜாலி போட்டிகளும் பட்டையைக் கிளப்பின. இதனுடன் டெக் வொர்க்ஷாப்புகளும் மூளைக்கு வேலை வைத்தன.

படங்கள்: சி.தினேஷ் குமார்

125 டோல் கேட்டுகள் ‘க்ளோஸ்!’

பிப்ரவரி மாத இறுதிக்குள், நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 125 சுங்கவரி வசூல் மையங்களை மூடவிருப்பதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்துள்ளார். தவிர, பொது - தனியார் கூட்டணியுடன் 100 கோடி ரூபாய் முதலீட்டுக்கும் குறைவாக உருவாக்கப்படும் சாலைத் திட்டங்களில் டோல் வசூலிக்கப்பட மாட்டாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மற்ற டோல் கேட்டுகளில் இ-டோல் முறையில் வசூலிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், டோல் கேட்டுகளில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் வீணாகும் எரிபொருளும், நேரமும் மிச்சமாகும். தமிழகத்தில் எந்தெந்த டோல்கேட்டுகள் மூடப்படும் என்ற தகவல் இன்னும் எங்களுக்கு வரவில்லை என்று தமிழக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய பஜாஜ் பிளாட்டினா ரெடி!

பிளாட்டினா ES (எலெக்ட்ரிக் ஸ்டார்ட்) என்று அழைக்கப்படும் புதிய பிளாட்டினாவை விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது பஜாஜ். இரட்டை ஸ்பார்க் ப்ளக்குகள்கொண்ட 102 சிசி, 4 ஸ்ட்ரோக் இன்ஜின்தான், தாங்கள் உருவாக்கிய இன்ஜின்களிலேயே அதிக மைலேஜ் தரக்கூடியது என்கிறது பஜாஜ். 8.2bhp சக்தியுடன் 0.88 kgm டார்க்கை அளிக்கிறது இந்த இன்ஜின். இதன் சென்னை ஆன் ரோடு விலை 54,700 ரூபாய்.

ரோமியாஸ் – 2015

பொறியியல் மாணவர்களின் அறிவுத் தேடலுக்கும், துறை சார்ந்த அறிவுக்கும் எப்போதுமே, வடிகாலாக இருப்பவை சிம்போஸியம்தான். பல கல்லூரி மாணவர்களும் பங்கேற்று திறமையைப் பகிர்ந்துகொள்ளும் இந்தக் களத்தை, சிறப்பாக வடிவமைத்து ‘ரோமியாஸ்-2015’ எனும் நிகழ்ச்சியை கடந்த பிப்ரவரி 20-ம் தேதி நடத்தி முடித்துள்ளது கோவை ஆர்.வி.எஸ் பொறியியல் கல்லூரி.

ஆட்டோமொபைல் துறையினரும், மெக்கட்ரானிக்ஸ் துறை இரண்டும் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியில், வழக்கம் போலவே மாணவர்களுக்காக பேப்பர் பிரசென்டேஷன், சிறந்த புராஜெக்ட் தேர்வுகள், துறை சார்ந்த அறிவைச் சோதிக்க விநாடி வினா, ஆகியவற்றோடு பல்சுவை நிகழ்ச்சிகளையும் நடத்தி முழு விருந்து படைத்தனர்.

மாணவர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்த இந்த நிகழ்ச்சியில், வி.ஐ.பி ஸ்பெஷல் மோஃபா, யமஹா ஆர்டி350, யெஸ்டி ஆகிய கிளாஸிக் வாகனங்களுடன் ஃபியட், செவர்லே, அம்பாஸடர் போன்ற கார்களும் கவனம் ஈர்த்தன. இளவட்டங்களின் ஆர்வத்துக்கு ஏற்ப, பைக் ஸ்டன்ட் ஷோவும், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசளிப்பு விழாவுமாக கலக்கலாக நடந்து முடிந்தது ரோமியாஸ்.

- ஞா.சுதாகர்

படங்கள்: த ஸ்ரீநிவாசன்