சென்னை - கிரேட் பாம்பே சர்க்கஸ்... நாம் சென்றிருந்த அந்த ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. வழக்கமான சாகசங்கள் முடிந்த பிறகு, கூடாரத்தின் ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்த இரும்புக்கூண்டுக்கு ஒளி வெள்ளம் குவிய, அந்தக் கூண்டுக்குள் உறுமின இரண்டு பைக்குகள்.

ஷோ முடிந்ததும், கூண்டுக்குள் சூறாவளியாகச் சுழன்ற இருவரையும் சந்தித்தோம்.

‘‘ ‘வாழ்க்கைங்கிறது ஒரு வட்டம்’ என்பது யாருக்குப் பொருந்துதோ இல்லையோ, எங்களுக்கு நல்லாப் பொருந்தும்!” என்று ஆரம்பித்தார் மைக்கேல்.

‘‘கொல்கத்தாதான் சொந்த ஊர். மெக்கானிக் வேலை பார்த்துக்கிட்டு இருந்தேன். பைக் ஓட்ட ரொம்பப் பிடிக்கும். 15 வருஷத்துக்கு முன்னாடி, நண்பர்களோட சர்க்கஸ் பார்க்கப் போனேன். அங்க ஒருத்தர் கூண்டுக்குள்ள செம ஸ்பீடா பைக் ஓட்டினார். எனக்கும் அப்படி ஓட்டணும்னு ஆசை வந்துச்சு. ‘தம்பி, இது ரோட்டுல ஓட்டுறது மாதிரி இல்லை; ரொம்பக் கஷ்டம்’னு சொன்னாங்க. நான் விடாப்பிடியா நின்னு சேர்ந்துட்டேன். பிறகு, ரெண்டு வருஷத்துல கூண்டுக்குள்ள பைக் ஓட்டப் பழகிட்டேன்.

கூண்டுக்குள்ள சுத்துறதுக்கு, பைக்கோட வெயிட் குறைவா இருக்கணும். மட்கார்டு, ஹெட்லைட், டெயில் லேம்ப், சைலன்ஸர்னு எல்லாத்தையும் கழட்டிருவோம். முக்கியமா பிரேக், கிளட்ச் இருக்கவே கூடாது. ஏன்னா, கூண்டோட சுவர்ல வேகமாக பைக் ஓட்டினால்தான் பேலன்ஸோடு ஓடும். வேகத்தைச் சட்டென்று குறைத்தாலோ அல்லது பிரேக் பிடித்தாலோ பைக்கோட கீழே விழ வேண்டியதுதான். பைக்கோட பிக்-அப் நல்லா இருக்கணும்னா, 2 ஸ்ட்ரோக் இன்ஜின்தான் பெஸ்ட். அதனால, யமஹா ஆர்எக்ஸ்100 பைக் பயன்படுத்துறோம். அப்புறம் கிரிப்பான டயர் ரொம்ப முக்கியம்!’’ என்கிறார் மைக்கேல்.

அடுத்துப் பேசியது கைலாஷ். ‘‘சொந்த ஊர் பீகார் மாநிலத்துல உள்ள ஒரு கிராமம். அஞ்சு வருஷமா கூண்டுக்குள்ள பைக் ஓட்டிக்கிட்டு இருக்கேன். இதுக்கு முன்னாடி இதே சர்க்கஸ்ல ஜிம்னாஸ்டிக் செய்தேன். இவங்க பைக் ஓட்டுறதைப் பார்த்து இதையும் கத்துக்கிட்டேன்.

பைக் ஓட்டுறதுக்கு டைமிங்தான் ரொம்ப முக்கியம். அது மிஸ் ஆச்சுனா, ஆண்டவனாலகூட எங்களைக் காப்பாத்த முடியாது. பைக் மேல போகும்போது ஒரு மாதிரி பேலன்ஸ் பண்ணணும்; கீழ வரும்போது வேற மாதிரி பேலன்ஸ் பண்ணணும். ஆனா, இது எல்லாம் மைக்ரோ செகன்ட்ல நடக்கணும். அப்புறம் மைண்ட் ரொம்ப ரிலாக்ஸ்டா இருக்கணும். முக்கியமா, நம்மகூட பைக் ஓட்டுற பார்ட்னர்தான் நமக்குப் பாதுகாப்பு. அவங்ககூட நல்ல புரிதல் இருக்கணும். இது எல்லாம் இருந்தும் சிலமுறை நானும் கீழே விழுந்து அடிபட்டுருக்கேன். விபத்து எல்லோருக்கும் பொதுவானதுதானே!’’

- பைக்கை விரட்டத் தயாராகிறார்கள் கூண்டுப் புலிகள்!