நான் அப்பா செல்லம்னா, எங்க அண்ணன் அம்மா செல்லம்; எனக்கு அஜீத்னா, எங்கண்ணனுக்கு சூர்யா; ஆனா, கார் விஷயத்துல எங்க ரெண்டு பேருக்குமே பிடிச்ச ஒரே கார் வெர்னா!’’ என்று பெரிய மனுஷி போல் பேசி நம்மை கிரேட் எஸ்கேப்புக்கு அழைத்த ராஜ, 6-ம் வகுப்பு மாணவி என்றால் நம்ப மாட்டீர்கள்!

‘‘1.6 லிட்டர் இன்ஜின்; 126bhp பவர்; டார்க் 26.5kgm; ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸை விட பிக்-அப் அதிகமா இருக்கு; 10.5 செகண்ட்ல 0 - 100 கி.மீ தொடும்; 15.6 கி.மீ மைலேஜ் தரும்னு மோ.வி-யில போட்டிருக்கு... ஆனா, எங்களுக்கு 14 கி.மீ.தான் தருது; சென்னை ஆன் ரோடு விலை 12.39 லட்சம்; நாங்க பாண்டிச்சேரியில் 10.5 லட்ச ரூபாய்க்கு புக் பண்ணோம். வெர்னா பத்தின டீட்டெய்ல்ஸ் கரெக்ட்டா அங்கிள்? இப்போ, கிரேட் எஸ்கேப் போலாமா? அப்பா, அம்மா, அண்ணா... சீக்கிரம் கௌம்புங்க!’’ என்று மூச்சு விடாமல் பேசி, பரபரவென ஜாலியாக பயணத்துக்குத் தயாரானாள் ராஜ.

‘‘எல்லாத்தையும் நீயே சொல்லிட்டியா? ஆனா, நான்தான் நம்ம வெர்னாவுக்கும், இந்த கிரேட் எஸ்கேப்புக்கும் லீடர்!’’ என்று பயணத்துக்குத் தலைமை தாங்கினார் 20 வயது கௌஷிக்; ராஜயின் அண்ணன்; மருத்துவக் கல்லூரி மாணவர்.

சேலம் வழியாக மேட்டூர் அணை, மாதேஸ்வரன் மலை என்று பயணத் திட்டம் வகுத்தார் கௌஷிக் - ராஜயின் தந்தை முத்துக்குமரன். வெர்னாவில் நான்கு பேர் வசதியாக உட்கார்ந்து பயணிக்கலாம். ஆனால், ஒல்லியானவர்கள் என்றால் ஐந்து பேர் வரை பயணிக்கலாம்.

இப்போது 5 1/2 பேர் கொண்ட குழுவை ஏற்றியதும், வெர்னாவுக்கும் கிரவுண்டுக்குமான கிளியரன்ஸ் நெருக்கமாக மாறியிருந்தது. இருந்தாலும் சில மேடு பள்ளங்கள் தவிர்த்து, நெடுஞ்சாலையில் வெறித்தனமாகச் செயல்பட்டது வெர்னா. ஏனென்றால், வெர்னாவின் பலமே அதன் பவர்ஃபுல் 4 சிலிண்டர் இன்ஜின்தான். ஆனால், ‘சரி செய்யப்பட்டுவிட்டது’ என்று சொல்லப்பட்ட - அதிக வேகங்களில் அண்டர்ஸ்டீயர் ஆகும் பிரச்னை இன்னும் வெர்னாவில் குறைந்தபாடு இல்லை.

சேலம் வந்ததே தெரியவில்லை. சேலத்தில் ஃபுல் மீல்ஸை முடித்துவிட்டு, மேட்டூருக்கு வெர்னாவை விரட்டினோம். சேலத்தில் இருந்து மேட்டூருக்கு இரண்டு வழிகள். சூரமங்கலம், தாரமங்கலம், நங்கவல்லி, வனவாசி வழியாகச் செல்வது ஒரு வழி. ஓமலூர், மேச்சேரி வழியாகச் செல்வது இன்னொரு வழி. இரண்டாவதில் கொஞ்சூண்டு தூரம் குறைவு; ஆனால், காத்திருப்பு அதிகமாக இருக்கும். காரணம், செக் போஸ்ட்.

செல்லும் வழியில், கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைப் பசேல் வெளிகள் ரம்மியம் தந்தாலும், ஓட்டுநர்கள் கார் ஓட்டிக் கொண்டே பசேர் நிலங்களை ரசிப்பது ஆபத்தில்தான் முடியும். ஏனென்றால், ஆடு, கோழி, மாடு, பெயர் தெரியா பறவை இனங்கள் ரிலாக்ஸ்டாக இந்த டூ-வே சாலைகளில் நடை பயில்கின்றன. எனவே, இங்கு குறைந்தபட்ச வேகத்தில் செல்வதே நல்லது.

நாம் மேட்டூர் பாலத்தை அடைந்தபோது மாலை 3.45. நீர் வெளியேறும் மதகுகள் கொண்ட பாலத்தின் மீது செல்ல, போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. காலையில் 3 மணி நேரமும் மாலையில் 3 மணி நேரமும் மட்டுமே போக்குவரத்துக்கு அனுமதி. “4 மணிக்குத்தான் சார் கேட் திறப்போம்” என்றார் கேட் அதிகாரி. காத்திருந்து அணையை அடைந்தோம்.

‘100 அடியை எட்டியது மேட்டூர் அணை; காவிரிப் பாசனத்திற்காக அணை திறப்பு...’ என்று சென்ற ஆண்டு அடிக்கடி செய்திகளில் அடிபட்ட மேட்டூர் அணை, காவிரியை அணைத்தபடி அழகூட்டிக்கொண்டிருந்தது. தமிழ்நாட்டின் மிகப் பெரிய சொத்து; உலகின் மிகப் பெரிய அணைகளில் ஒன்று; தமிழ்நாட்டின் மிகப் பெரிய நீர்த்தேக்கங்களில் இதற்குத்தான் முதல் இடம் என்று மேட்டூர் அணை பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

அணை என்றாலே ஆங்கிலேயருக்கும் நிச்சயம் தொடர்பு இருக்கும்தானே! யெஸ்! இதற்கு ‘ஸ்டான்லி ரிசர்வாயர்’ என்ற பெயரும் உண்டு. 1925-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட நீர்த் தேக்கம், அந்த ஆண்டு ஜூலை மாதத்தில் முதன்முதலாக ‘சர் ஜார்ஜ் ஸ்டான்லி’ என்பவரால் பாசனத்திற்காகத் திறந்துவிடப்பட்டது. எனவே, இதை ஸ்டான்லி ரிசர்வாயர் என்றும் அழைக்கிறார்கள். 1994 ஆகஸ்ட் 21-ம் தேதி, தனது டைமண்ட் ஜூப்ளி கொண்டாட்டத்தை நிறைவு செய்திருக்கும் மேட்டூர் அணையின் அதிகபட்ச உயரம் 214 அடி. மழைக் காலங்களில் மழை வருவதற்கு முன்னே கலவரமாகிவிடுமாம் இந்த அணை. 80 அடியை எட்டினாலே, சுற்றியுள்ள கிராமங்களில் நீர்வரத்து அதிகமாகி, டெல்டா ஏரியாக்களும் பரபரப்பாகிவிடும். இப்படி கிட்டத்தட்ட 16 லட்சம் ஏக்கர் நிலத்துக்கு நீர்ப் பாசனம் செய்யும் பெருமைகொண்டது. மேலும், சேலம் மாநகரின் மின்சாரப் பிரச்னைக்கும் மேட்டூர் அணைதான் பெரும்பான்மையாகத் தீர்வு சொல்கிறது.

பல சதுர மைல்களுக்குப் பரந்து விரிந்து கிடக்கும் மேட்டூர் அணையின் முகப்பில், வெர்னாவின் ஃப்ளூயிடிக் டிஸைன் பேக்ட்ராப்பில், சிறுமி ராஜ - தனது அண்ணனோடு ஓடிப் பிடித்து விளையாடும் அழகைப் பார்த்தால், விகடன் ‘சொல்வனம்’ பகுதியில் கவிதை எழுதும் ஆர்வம் வர வாய்ப்பு உண்டு.

அணையிலிருந்து மலைப் பாதை போல இருக்கும் சாலையில் கீழிறங்கினால், மேட்டூர் அணைப் பூங்கா வருகிறது. வாசலில் மீன் வறுவல், மோர், கம்மங்கூழ் என்று எந்த நேரமும் மணந்தபடி இருக்கிறது பூங்கா. சாதாரண தினங்கள் தவிர்த்து, சனி ஞாயிறுகளில் குழந்தைகள், பெரியவர்கள், காதல் ஜோடிகள் செல்ஃபி எடுத்தபடி பூங்கா களை கட்டுகிறது. கம்மங்கூழ் - கருவாடு காம்பினேஷனை ஒரு பிடி பிடித்துவிட்டுக் கிளம்பினோம். இருள்வதற்குள் மாதேஸ்வரன் மலை ஏறிவிடத் திட்டம் இருந்தது. மேட்டூரில் இருந்து மாதேஸ்வரன் மலைக்கு வெறும் 20 கி.மீ.தான். ஆனால், நிறைய டீவியேஷன் ரோடுகள் இருப்பதால், பாதை மாறினால் உங்கள் பயணமும் பல கி.மீ மாறிவிடும். எனவே, புதிதாகச் செல்பவர்கள் வழி கேட்டுக் கேட்டுச் செல்வதே நல்லது.

பயணப்படுகிற பாதையின் குறுக்கு வெட்டுத் தோற்றம் தெரியவில்லை என்றால், ஒழுங்கான பாதை இல்லை என்றால், எப்படிப்பட்ட டிரைவரும் வேஸ்ட் என்பதை நிரூபித்தது மாதேஸ்வரன் மலைப் பாதை. ‘‘சார், நீங்க கார் மேளா பகுதியில், வெர்னாவின் மைனஸ் சஸ்பென்ஷன்னு சொல்லியிருக்கீங்க... அதை இப்போதான் முதன்முதலா உணர்றோம்!’’ என்று புன்னகைத்தார், பின் சீட்டில் இருந்த கௌஷிக்கின் தந்தை முத்துக்குமரன்.
லேசாக இருள ஆரம்பித்ததில், பயணம் கூடுதல் த்ரில்லிங்காக இருந்தது. செல்லும் வழியில், ஆங்காங்கே பெரிய பெரிய சைஸில் மான்களும், மயில்களும், முயல்களும் மின்னும் கண்களுடன் வெர்னாவின் ஹெட்லைட் வெளிச்சத்தில் தரிசனம் தந்தன. 20 கி.மீ தூர மலைப் பாதையை ஒரு வழியாய் ஒன்றரை மணி நேரத்தில் கடந்து, கர்நாடக பார்டரில் இருக்கும் மாதேஸ்வரன் மலைக்கோவிலை அடைந்தோம். ‘‘ஹோகே... ஹோகே.. தர்ஷனு நன்னாகி!’’ என்று பெரிய பெரிய பூக்கூடைகளுடன், தேங்காய் பழங்களுடன் நம்மைச் சுற்றி வளைத்தனர் சின்னச் சின்ன வியாபாரிகள். இரவு நேரங்களிலும் சிவனுக்கு நடக்கும் அர்ச்சனை இங்கு செம ஸ்பெஷல்.
மாதேஸ்வரன் மலையில் தங்குவதற்குப் பிரச்னையே இல்லை. வீடுகள், அலுவலகங்கள் போன்று அமைக்கப்பட்டிருக்கும் எல்லாமே இங்கு லாட்ஜ்கள்தான். ஏழை பக்தர்களுக்காக மிகக் குறைந்த விலையில், 150 ரூபாய்க்கெல்லாம், சுடு தண்ணீர் வசதியுடன் ரூம்கள் கிடைப்பது அதிசயம். நாம் சென்ற நேரம் சீஸன் டைம் இல்லை என்பதால், ரூம்களுக்குப் பஞ்சம் ஏற்படவில்லை.

‘‘கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரூம்கள் இங்கு இருந்தாலும், சனி, ஞாயிறுகளில் முன்கூட்டியே புக் செய்து விட்டு வரவில்லையென்றால், காருக்குள்ளேயே படுத்து உறங்க வேண்டியதைத் தவிர வழி இல்லை’’ என்கிறார்கள். அதிலும் சிவராத்திரி அன்றைக்கு, சிவனே வந்து ருத்ரதாண்டவம் ஆடுவதுபோல் கதகதக்குமாம் மாதேஸ்வரன் மலை. அவ்வளவு கூட்டம் இருக்கும். மலையடிவாரத்தில் ரூம் புக் செய்துவிட்டு, மறுநாள் காலை சிவனைத் தரிசித்துக் கொண்டிருந்தனர் ராஜஸ்ரீ - கௌஷிக் குடும்பத்தினர்.

மாதேஸ்வரன் என்றால், சிவன். 15-ம் நூற்றாண்டில் மாதேஸ்வரன் எனும் முனிவர், சிவபக்தர், இங்குதான் சிவ அவதாரம் எடுத்ததாகச் சொல்கிறார்கள். இன்றும் மாதேஸ்வரன், லிங்க வடிவில் வாழ்வதாக நம்புகிறார்கள் மக்கள். கூட்டம் கூட்டமாகக் குவியும் சிவ பக்தர்கள், வெளிச்சக் கீற்றாக எழுந்து நிற்கும் வெள்ளைக் கோபுரம், ‘டணால் டணால்’ என எந்நேரமும் ஒலிக்கும் கோவில் மணி - இப்படி ஆன்மிக விஷயங்கள் தாண்டி, மாதேஸ்வரன் மலை ஓர் அற்புதமான டூரிஸ்ட் ஸ்பாட்!

அடர்த்தியான ரிசர்வ் ஃபாரெஸ்ட்டான மாதேஸ்வரன் மலையைச் சுற்றிலும், சலசலவென ஓடிக்கொண்டிருக்கின்றன பாலாறு மற்றும் காவிரி ஆறுகள். இதைச் சுற்றி 77 குட்டிக் குட்டி மலைகளும் இருக்கின்றன. மான், காட்டெருமை, நரி, கரடி, முள்ளம்பன்றி என்று வனவிலங்குகளின் செல்லமான அட்டகாசம் எக்கச்சக்கம் என்றார்கள். பந்திப்பூரில் இருந்து மாதேஸ்வரன் மலை வரை மொத்தம் 2000-க்கும் மேற்பட்ட யானைகள் உலவுவதாகவும் வன அதிகாரிகள் சொன்னார்கள். ‘‘பேசாம என் கல்யாணத்துக்கு இதையே ஹனிமூன் ஸ்பாட்டா தேர்ந்தெடுத்துட வேண்டியதுதான்!’’ என்றார் நமது புகைப்படக் கலைஞர்.
‘‘இந்த மாதேஸ்வரன் மலையைச் சுற்றித்தான் வீரப்பனின் கேம்ப் இருந்தது’’ என்று கீழே செக் போஸ்ட்டிலேயே ஒரு அதிகாரி கூறியிருந்தார். கர்நாடக அதிரடிப் படையும், தமிழக அதிரடிப் படையும் செய்த அட்டூழியங்கள் பற்றி கன்னடத்தில் ஒரு மலைக் கிராமவாசி சொன்னது, வீரப்பன் கால நாட்களின் நாஸ்டால்ஜியாவுக்குள் நம்மை இட்டுச் சென்றது. ‘‘வீரப்பன் நல்லவரா கெட்டவரா?’’ என்று ‘தெய்வத் திருமகள்’ சாரா போல ராஜ வழக்கம்போல் தனது கேள்விக் கணைகளைத் தொடுத்திருந்தாள்.

குளுகுளு மாதேஸ்வர மலையில் இறங்கி, திரும்ப சேலம் வழியாக ஏற்காட்டில் போட்டிங் முடித்துவிட்டு, மாலை மலை இறங்கும்போது ராஜ சொன்னாள்: ‘‘டென்த் போறதுக்குள்ள எப்படியாவது அப்பாவை மினிகூப்பர் கார் வாங்கவெச்சிடுவேன். மினி கூப்பர்ல கிரேட் எஸ்கேப் வருவீங்களா அங்கிள்?’’