தூங்கிக்கொண்டிருந்த பூனை விழித்துக்கொண்டதுபோல, இரண்டு புதிய கார்களை இந்தியாவுக்கு விற்பனைக்குக் கொண்டுவரவிருப்பதாக திடீரென்று அறிவித்துள்ளது செவர்லே. 2012-ம் ஆண்டே ட்ரெய்ல்பிளேஸர் எஸ்யுவியை இந்தியாவுக்குக் கொண்டுவரத் திட்டமிட்டது செவர்லே. ஆனால், செவர்லேயின் ஹலோல், தலேகான் தொழிற்சாலைகளில் உள்ள பெயின்ட் ஷாப் அளவு சிறிதாக இருந்ததால், இவ்வளவு பெரிய எஸ்யுவியை இங்கு கொண்டுவருவதில் தாமதம் ஏற்பட்டதாம். ஃபுல் சைஸ் எஸ்யுவியான ட்ரெய்ல்பிளேஸர், டொயொட்டா ஃபார்ச்சூனர், மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட், ஃபோர்டு எண்டேவர் போன்ற கார்களுடன் போட்டி போடக்கூடிய கார். இதன் கேபின் மற்ற மூன்று கார்களைவிட விசாலமாக இருக்கும்.

வெளிநாடுகளில் 2.8 லிட்டர் (180bhp), 2.5 லிட்டர் (150bhp) என இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் விற்பனையாகிறது ட்ரெய்ல்பிளேஸர். இதில், இந்தியாவுக்கு எந்த இன்ஜின் என்று இன்னும் முடிவாகவில்லை. மிகக் குறைவான எண்ணிக்கையில் விற்பனையாகும் கேப்டிவா நிறுத்தப்பட்டு, இது விற்பனைக்கு வருமா என்றும் தெரியவில்லை. ஆனால், இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் விற்பனைக்கு வந்துவிடும் ட்ரெய்ல்பிளேஸர்.

2016-ம் ஆண்டு ஸ்பின் எனும் எம்பிவியை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டுவர இருக்கிறது செவர்லே. இது மாருதி எர்டிகா, ஹோண்டா மொபிலியோ, ரெனோ லாட்ஜி போன்ற கார்களுடன் போட்டி போடும். பார்ப்பதற்கு என்ஜாய் போல பாக்ஸியாக இல்லாமல், ஸ்டைலாக இருக்கிறது ஸ்பின். இதில் செயில் காரின் இன்ஜின்கள் பொருத்தப்படும் என எதிர்பார்க்கலாம். காசு கொட்டும் செக்மென்ட்டுகளில் கால்வைக்க இருக்கிறது செவர்லே. வாடிக்கையாளர்கள் வைக்கப்போவது ஷொட்டா, குட்டா? பார்க்கலாம்!