ஸ்விஃப்ட் டிசையரை வீழ்த்தும் அளவுக்கு டாடா ஜெஸ்ட் விற்பனை ஆகவில்லை; ஆனால், மக்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ளது. முதன்முறையாக டாடா மீது மக்களுக்கு நம்பிக்கை துளிர்விடக் காரணம், ஜெஸ்ட். இது தந்திருக்கும் உற்சாகத்தில் போல்ட் ஹேட்ச்பேக்கை விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது டாடா. போட்டி நிறைந்த ஹேட்ச்பேக் செக்மென்ட்டில், ‘ஹேட்ஸ் ஆஃப்’ வாங்குமா போல்ட்?

டிஸைன்

ஒட்டுமொத்தத் தோற்றத்தில், ஸ்டைலாக இருக்கிறது போல்ட். கறுப்பு வண்ண ‘சி’ பில்லரினால் கிடைக்கும் ‘ஃப்ளோட்டிங் ரூஃப்’ எஃபெக்ட், விஸ்டாவை மறக்கடிக்கிறது. ஆனால், கதவுகளும் கண்ணாடிகளும் இது விஸ்டாதான் எனச் சொல்ல வைக்கின்றன. க்ரில் மற்றும் ஹெட்லைட் டிஸைன் சூப்பர். காரின் பின்பக்கம், மற்ற கார்களில் இருப்பதுபோல வழக்கமான இடத்தில் டெயில்லைட்ஸ் கொடுக்கப்பட்டுள்ளன. க்ரோம் சேர்க்கப்பட்டுள்ளதால், பின்பக்கம் முன்பைவிட நேர்த்தியாக இருக்கிறது.

டாடா போல்ட் பெட்ரோல் மாடலின் எடை, 1,125 கிலோ, டீசல் மாடலின் எடை 1,160 கிலோ. இது சில மிட் சைஸ் செடான்களைவிட அதிகம். பார்க்க, ‘வெயிட்டான காரோ’ எனத் தோன்ற வைக்கும் டிஸைனைக் கொண்டுள்ளது. போல்ட், ஜெஸ்ட்டைவிட 10 மிமீ குறைவான கிரவுண்ட் கிளியரன்ஸ் இருக்கக் காரணம், டயர்கள்தான். போல்ட்டில் 175/65 செக்ஷன் டயர்கள் இருக்க, ஜெஸ்ட்டில் 185/60 செக்ஷன் டயர்கள் உள்ளன.

உள்ளே

காரின் உள்ளே, எந்த வகையிலும் விஸ்டாவை ஞாபகப்படுத்தவில்லை போல்ட். புத்தம் புதிய டேஷ்போர்டு, ஜெஸ்ட்டில் இருப்பதைப் போன்றதுதான். ஆனால், இங்கு முழுவதும் கறுப்பு வண்ணத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. உள்பக்கத் தரமும் முன்னேறியுள்ளது. சென்டர் கன்ஸோலில் உள்ள சுவிட்ச் கியர், பட்டன்களின் தரம் விஸ்டாவைவிட பல மடங்கு மேம்பட்டுள்ளன. ஆனால், கண்ணாடிகளைச் சுற்றி இருக்கும் பிளாஸ்டிக், டோர் பாக்கெட்டுகளின் பிளாஸ்டிக்ஸ், தொடுவதற்கு ரஃப்பாக உள்ளன.

டாடா போல்ட்டின் இருக்கைகள் சரியான உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளன.முன் பக்க இருக்கைகள் ரொம்பவும் சாஃப்ட். முதுகுக்குச் சரியான சப்போர்ட் இல்லை என்பதால், தொலைதூரம் ஓட்டிய பின்பு லேசாக வலி எடுக்க வாய்ப்பு இருக்கிறது. உயரமான ஓட்டுநர்களுக்கு ஸ்டீயரிங், இன்ஸ்டரூமென்ட் கிளஸ்டரை பார்வையில் இருந்து மறைப்பதுபோலத் தெரியும். இடது காலை வைக்கவும் இடம் குறைவு. ‘மல்ட்டி டிரைவ்’ பட்டன்கள் கீழே அமைக்கப்பட்டுள்ளன.

பின்னிருக்கை இட வசதியில், பல மிட் சைஸ் செடான்களுடன் போட்டி போடுகிறது போல்ட். அகலமான கேபின் என்பதால், மூன்று பேர் வசதியாக உட்கார்ந்து பயணிக்க முடியும். பின்னிருக்கை சற்று இறுக்கமாக இருப்பது மட்டும் உறுத்துகிறது. முன்பக்கம், ஒரே ஒரு கப் ஹோல்டர் உள்ளது. போனை வைப்பதற்கு கியர் லீவருக்கு முன்பு இடம் இருக்கிறது. விலை உயர்ந்த மாடலில், முன்பக்கப் பயணியின் இருக்கைக்குக் கீழே, பொருட்கள் வைக்க இடம் உண்டு. ஆனால், பாட்டில் ஹோல்டர்கள் இல்லாததும், சின்ன டோர் பாக்கெட்டுகளும் மைனஸாகத் தெரிகின்றன. விஸ்டாவைவிட 10 சதவிகிதம் குறைவாக, 210 லிட்டர் பூட் ஸ்பேஸ்தான் இருக்கிறது.
வசதிகளில் குறை வைக்கவில்லை டாடா. விலை உயர்ந்த XT வேரியன்ட்டில் Harman டச் ஸ்க்ரீன் சிஸ்டம் உள்ளது. இதிலேயே கிளைமேட் கன்ட்ரோல் சிஸ்டத்தையும் கன்ட்ரோல் செய்யலாம். இதே சிஸ்டம்தான் ஜெஸ்ட்டில் இருக்கிறது. ஆனால், போல்ட்டில் மெருகூட்டப்பட்ட சாஃப்ட்வேர் இன்ஸ்டால் ஆகியிருப்பதால், ஆண்ட்ராய்டு போன் மூலமாக நேவிகேஷன் வசதியும் இருக்கிறது. நேரடி சூரிய வெளிச்சத்தில் இந்த ஸ்கிரீன் க்ளார் அடித்தாலும், மெசேஜ்களைப் படித்தும் சொல்வதால் வசதியாக உள்ளது. மேலும், போனை டயல் செய்ய வாய்ஸ் கமாண்ட் வசதியும் உண்டு. சிடி ப்ளேயர் இல்லை. ஆனால், ப்ளூ-டூத், பென் டிரைவ், ஐ-பாட், Aux கனெக்டிவிட்டி ஆகியவை உள்ளன. சவுண்டு குவாலிட்டி சூப்பர்.

இன்ஜின், கியர்பாக்ஸ், பெர்ஃபாமென்ஸ்

ஜெஸ்ட் காரில் இருக்கும் அதே 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் ஃபியட் மல்டிஜெட் டீசல் இன்ஜின்தான் போல்ட் காரிலும். ஆனால், போல்ட் பெட்ரோல் மாடலின் கியரிங், ஜெஸ்ட் பெட்ரோலைவிட நெருக்கமாக அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், ஜெஸ்ட்டில் இதே டீசல் இன்ஜின் 89 bhp டியூனிங்கில் இருக்கும்; ஆனால் போல்ட்டுக்கு 74bhp டியூனிங்தான்.

போல்ட் பெட்ரோல் மாடலில் இருக்கும் ‘Multi-Drive’ வசதி மூலம் சிட்டி, ஸ்போர்ட், எக்கோ என மூன்று மோடுகளில் காரின் ECU மேப்பிங்கை மாற்றி இயக்க முடியும். சிட்டி மோடில் மைலேஜும், பெர்ஃபாமென்ஸும் சரிசமமாக இருக்கிறது. ஸ்போர்ட் மோடில், சீறிப் பாய்கிறது போல்ட். திராட்டில் ரெஸ்பான்ஸும் அதிகரித்துவிடுகிறது. மிட் ரேஞ்ச் பவர் டெலிவரி இந்த மோடில் நன்றாக இருப்பதால், ஓவர்டேக் செய்வது சுலபம். 5,500 ஆர்பிஎம் வரை சீரான பவர் டெலிவரி இருக்கிறது. ஸ்விஃப்ட், i20 கார்களைவிட ஸ்போர்ட்டியான காராக இருக்கிறது போல்ட்.

எக்கோ மோடில் மந்தமான பெர்ஃபாமென்ஸ்தான். ஸ்போர்ட் மோடைவிட 2.77 விநாடிகள் தாமதமாக மணிக்கு 100 கி.மீ வேகத்தை அடைகிறது போல்ட். திராட்டில் ரெஸ்பான்ஸ் ரொம்பவே டல்லாக இருப்பதால், நெடுஞ்சாலையில் ஓவர்டேக் செய்வது கடினமாக இருக்கிறது. சிட்டி டிராஃபிக்குக்கு இந்த மோடு ஓகே!

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, இந்த ரெவோட்ரான் பெட்ரோல் இன்ஜினின் பவர் டெலிவரி கொஞ்சம் வீக்தான். கியர் ஷிஃப்ட், போட்டி கார்களில் உள்ள அளவு ஷார்ப்பாக இல்லை. மேலும், இந்த இன்ஜினுக்கு அதிக ரெவ் கொடுத்து வேலை வாங்க வேண்டியிருக்கிறது. சத்தமும், அதிர்வுகளும் குறைவாக இருப்பது ஒரு சின்ன ப்ளஸ்!

1.3 லிட்டர் டீசல் இன்ஜின், டர்போ லேக்குக்கு ரொம்பவே ஃபேமஸ். 2,000 ஆர்பிஎம்-க்கு மேல் 4,000 ஆர்பிஎம் வரை நல்ல பவர் டெலிவரி இருக்கிறது. ஆனால், 5,000 ஆர்பிஎம்-க்கு அருகே பவர் சுமார்தான். கிளட்ச் லைட்டாக இருக்கிறது. ஃபியட்டில் இருந்து சப்ளை செய்யப்படும் இதன் கியர்பாக்ஸ் நன்றாக உள்ளது.

ஓட்டுதல் மற்றும் கையாளுமை

முன்பக்கம் இண்டிபெண்டன்ட் சஸ்பென்ஷனும், பின்பக்க, ஸ்ப்ரிங்குகளுடன் டார்ஷன் பீம் சஸ்பென்ஷனும் போல்ட் காரில் உள்ளன. ஜெஸ்ட்டைவிட இறுக்கமாக செட் செய்யப்பட்டுள்ள இந்த சஸ்பென்ஷனின் டூயல்-பாத் டாம்பர்கள், புதிய சப் ஃப்ரேம், மாற்றியமைக்கப்பட்டுள்ள ஸ்ட்ரட்டுகள் மேடு பள்ளங்களை அலட்டாமல் தாங்கிக்கொள்கின்றன. அதிக வேகங்களில் சற்று குலுங்கியபடி சென்றாலும், நம் ஊர் சாலைகளுக்கு பெர்ஃபெக்ட்டான செட்-அப் இதுதான்.

அதிக வேகங்களில் நல்ல ஸ்டெபிளிட்டி கிடைக்கிறது. பாஷ் நிறுவனத்தின் 9-வது தலைமுறை ஏபிஎஸ் சிஸ்டம், நம்பிக்கையை அளிப்பதால், தைரியமாக ஓட்ட முடிகிறது. பாடி ரோல் இருப்பதால், ஸ்விஃப்ட் அளவுக்கு ஜாலியான காராக இல்லை போல்ட்.

மைலேஜ்

எக்கோ மோடில், பெட்ரோல் போல்ட் சிட்டியில் லிட்டருக்கு 11.4 கி.மீ, நெடுஞ்சாலையில் 16.1 கி.மீ மைலேஜும் தருகிறது. எக்கோ மோடிலேயே இவ்வளவுதான் மைலேஜ் என்றால், ஸ்போர்ட், சிட்டி மோடுகளில் மைலேஜ் இன்னும் குறையும். டீசல் போல்ட் காரின் டெஸ்டிங் இன்னும் முடியவில்லை. அராய் சான்றிதழ்படி, லிட்டருக்கு 22.95 கி.மீ அளிக்கிறது போல்ட் டீசல்.

ஒட்டுமொத்தத்தில் போட்டி கார்களைவிட குறைவான மைலேஜையே அளிக்கிறது டாடா போல்ட்.

நல்ல இடவசதி, நிறைய வசதிகள், அருமையான ஓட்டுதல் தரம், விஸ்டாவைவிட ஃப்ரெஷ்ஷான டிஸைன் என, இதுவரை டாடா கார் செய்யாத விஷயங்களைச் செய்துள்ளது போல்ட். கொடுக்கும் காசுக்கு ஏற்ற கார்தான். ஆனால், டாப் எண்ட் வேரியன்ட்டுகளின் விலை அதிகம். பெட்ரோல் மாடலின் மைலேஜும் குறைவுதான். டீசல் மாடலின் பெர்ஃபாமென்ஸ் ஓகே ரகம். தரத்தைப் பொறுத்தவரை உண்மையான தீர்ப்பை வாடிக்கை யாளர்கள்தான் சொல்ல வேண்டும்.