Election bannerElection banner
Published:Updated:

மெல்லிசா ஒரு கோடு... இந்தப் பக்கம் ஜெட்டா... அந்தப் பக்கம் ஆக்டேவியா!

VOLKSWAGEN VS SKODA ACTAVIAதொகுப்பு: ஆதவன்

வாடிக்கையாளர்களைத் தக்கவைப்பது எப்படி என்பதை, ஃபோக்ஸ்வாகனிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். அப்டேட்டட் போலோ, புதிய வென்ட்டோ, ஜெட்டா ஃபேஸ்லிஃப்ட் என துறுதுறுவென இருக்கிறது ஃபோக்ஸ்வாகன். ஜெட்டா காருக்கு ஒரே வேலைதான்; அது ஸ்கோடா ஆக்டேவியாவை வீழ்த்த வேண்டும். ஆனால், இரண்டு கார்களும் சகோதரர்களைப் போல! காரணம், ஸ்கோடாவும் ஃபோக்ஸ்வாகன் குழுமத்தின் அங்கம்தான். மாற்றங்களுடன் வந்திருக்கும் ஜெட்டா, ஆக்டேவியாவை வீழ்த்துமா?

டிஸைன்


ஜெட்டாவின் டிஸைன், விலை உயர்ந்த பஸாத் காரை நினைவூட்டுகிறது. ஜெட்டா ஃபேஸ்லிஃப்ட் டிஸைனுக்கும், பழைய காரின் டிஸைனுக்கும் வித்தியாசங்கள் குறைவாக இருந்தாலும், கண்டுபிடித்துவிடும் அளவுக்கு மாற்றங்கள் உள்ளன. ஹெட்லைட்ஸ் முன்பைவிட ஷார்ப். LED எஃபெக்ட், இப்போது இன்னும் அதிகம். க்ரில்லில் மூன்று க்ரோம் பட்டைகள் உள்ளன. பனி விளக்குகள் புதிய டிஸைனில் இருக்கின்றன. இதெல்லாம் சின்ன டிஸைன் மாற்றங்கள்தான். காரின் டெயில்லைட்ஸ் முன்பைவிட ஷார்ப்பாக இருக்கின்றன.

ஸ்கோடா ஆக்டேவியாவின் டிஸைன் மிகவும் பக்குவப்பட்டதாக இருக்கிறது. ரொம்பவும் அலட்டாத, அதேசமயம் மனதுக்குப் பிடிக்கிற டிஸைன். ஷார்ப்பான LED டே டைம் ரன்னிங் லைட்ஸ், தேவையான இடத்தில் மட்டும் க்ரோம், கான்ட்ராஸ்ட்டான ரூஃப் போன்ற அம்சங்கள் காரை கெத்தாகக் காட்டுகின்றன. காரின் அளவுகோல்களும் கச்சிதமாக இருக்கின்றன. ஆக்டேவியாவில் 590 லிட்டர் பூட் ஸ்பேஸ். ஜெட்டாவில் 510 லிட்டர் இடவசதிதான் என்றாலும் மற்ற கார்களுடன் ஒப்பிடும்போது இதுவே அதிகம்.

மெல்லிசா ஒரு கோடு... இந்தப் பக்கம் ஜெட்டா... அந்தப் பக்கம் ஆக்டேவியா!

ஜெட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடலில், இன்டீரியரை மெருக்கேற்றியுள்ளது ஃபோக்ஸ்வாகன். இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் இப்போது கூடுதல் அழகு. ஃப்ளாட் பாட்டம் ஸ்டீயரிங் வீல் ஸ்போர்ட்டியாக இருக்கிறது. காரின் உள்ளே பாகங்களின் தரம் சூப்பர். ஜெட்டாவில் டிரைவர் தூக்கக் கலக்கத்தில் ஓட்டினால் அலெர்ட் செய்யும் வசதியும், க்ரூஸ் கன்ட்ரோல் வசதியும் ஸ்டாண்டர்டாக அளிக்கப்படுகின்றன. விலை உயர்ந்த வேரியன்ட்டில் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், லெதர் சீட்ஸ் போன்ற வசதிகளும் உள்ளன. ஆனால், சன் ரூஃப், டிரைவர் சீட் அட்ஜஸ்ட் மெமரி வசதி போன்றவை இல்லை. இந்த இரண்டு வசதிகளுமே ஆக்டேவியாவின் விலை உயர்ந்த Elegance வேரியன்ட்டில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கும் மேல், ஆக்டேவியாவில் லேட்டஸ்ட்டான டச் ஸ்கிரீன் அளிக்கப்படுகிறது. ஆக்டேவியாவின் டேஷ்போர்டு, பார்க்க செம ஸ்டைலாக இருக்கிறது. ஆனால், தரத்தில் ஜெட்டா அளவுக்கு இல்லை.

நல்ல குஷனிங், அதிக உயரம் கொண்டுள்ளன ஆக்டேவியாவின் இருக்கைகள். ஜெட்டாவின் பின்பக்க இருக்கைகளும் நல்ல சப்போர்ட் அளிக்கின்றன. நீளமான வீல்பேஸ் என்பதால், ஆக்டேவியாவில் இடம் அதிகமாக இருக்கிறது. ஜெட்டாவிலும் அதிக இடம் உண்டு. ஆனால், நடு இருக்கை வசதியாக இல்லை.

மெல்லிசா ஒரு கோடு... இந்தப் பக்கம் ஜெட்டா... அந்தப் பக்கம் ஆக்டேவியா!

இன்ஜின்

இரண்டு கார்களிலும் கிட்டத்தட்ட ஒரே இன்ஜின்தான். ஆனால் ட்யூனிங் வேறு. இந்த 2 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின், ஆக்டேவியாவில் 141bhp சக்தியை 4,000 ஆர்பிஎம்மிலும், 32.6 kgm டார்க்கை 1,750 - 3,000 ஆர்பிஎம்மிலும் அளிக்கிறது. ஜெட்டாவில் 138bhp சக்தியை 4,200 ஆர்பிஎம்மிலும், 32.6 kgm டார்க்கை 1,750 - 2,500 ஆர்பிஎம்மிலும் அளிக்கிறது. இரண்டு கார்களிலும் 6 ஸ்பீடு டூயல் கிளட்ச் கியர்பாக்ஸ்தான்.

மெல்லிசா ஒரு கோடு... இந்தப் பக்கம் ஜெட்டா... அந்தப் பக்கம் ஆக்டேவியா!

சிட்டி டிராஃபிக்கில், ஆக்டேவியாவின் இன்ஜின்தான் உயிரோட்டமாக இயங்குகிறது. மேலும், இந்த TDI இன்ஜினின் சத்தமும் சற்று அதிகம்தான். நெடுஞ்சாலையில் இரண்டு கார்களின் இன்ஜின்களுமே நல்ல மிட் ரேஞ்ச் பவர் டெலிவரி அளிப்பதை உணர முடிகிறது. ஸ்பீடு டெஸ்ட்டிங்கில் ஆக்டேவியாதான் நம்பர் ஒன். ஆனால், அனுபவத்தில் இரண்டு கார்களுமே ஒரே மாதிரிதான் இருக்கின்றன. ஜெட்டாவில் பேடில் ஷிஃப்டர் இருப்பதால், கொஞ்சம் ஸ்போர்ட்டி, அவ்வளவுதான்.

மெல்லிசா ஒரு கோடு... இந்தப் பக்கம் ஜெட்டா... அந்தப் பக்கம் ஆக்டேவியா!

ஓட்டுதல் தரம், கையாளுமை

ஜெட்டாவில் பின்பக்கம் பிரத்யேகமான இண்டிபெண்டன்ட் சஸ்பென்ஷன் உள்ளது. ஆக்டேவியாவில் இருப்பது சாதாரண டார்ஷன் பீம் சஸ்பென்ஷன். இதனால், குறைந்த வேகங்களில் ஆக்டேவியாவின் ஓட்டுதல் தரம் கொஞ்சம் சுமார். மேலும், சத்தங்களும் அதிகம். ஜெட்டாவில் சஸ்பென்ஷன் மிக அருமையாக இருக்கிறது. சத்தங்கள் இல்லை. ஜெட்டாவில் எடை அதிகமான ஸ்டீயரிங் இருக்க, ஆக்டேவியாவில் ஈஸியாக வளைத்துத் திருப்ப, லைட்டான ஸ்டீயரிங் இருக்கிறது.

மெல்லிசா ஒரு கோடு... இந்தப் பக்கம் ஜெட்டா... அந்தப் பக்கம் ஆக்டேவியா!

அதிக வேகங்களில் ஜெட்டாதான் ஸ்டேபிளான ஓட்டுதல் தரத்தைக்கொண்டிருக்கிறது. ஆக்டேவியாவும் வேகம் எடுத்தவுடன் ஸ்மூத்தாகச் செல்கிறது. இரண்டு கார்களுமே நல்ல க்ரிப்பையும், ஸ்டெபிளிட்டியையும் கொண்டிருக்கின்றன. தொடர் வளைவுகளில் ஆக்டேவியாதான்

மெல்லிசா ஒரு கோடு... இந்தப் பக்கம் ஜெட்டா... அந்தப் பக்கம் ஆக்டேவியா!

ஜாலி. காரணம், க்விக் ஸ்டீயரிங்.

ஜெட்டா ஃபேஸ்லிஃப்ட் 2 லிட்டர் TDI ஆட்டோமேட்டிக் மாடலின் விலை 24.56 லட்சம் ரூபாய் (ஆன் ரோடு, சென்னை) ஆக்டேவியா 2 லிட்டர் Elegance ஆட்டோமேட்டிக் மாடலின் விலை 25.06 லட்சம் ரூபாய். (ஆன் ரோடு, சென்னை) இரண்டும் கிட்டத்தட்ட ஒரே கார்கள், ஒரே இன்ஜின், ஒரே குழுமம். விலையும் கிட்டத்தட்ட சமம்தான். எது பெஸ்ட்? ஃபோக்ஸ்வாகன் ஜெட்டாதான். காரணம், ஆக்டேவியா என்னதான் அழகிலும், கையாளுமையிலும் ஈர்த்தாலும், இந்த செக்மென்ட் வாடிக்கையாளர்கள் விரும்பும் ஓட்டுதல் தரத்திலும், பில்டு குவாலிட்டியிலும் ஜெட்டாதான் பெஸ்ட். முன்பைவிட அதிக வசதிகளும் ப்ளஸ் பாயின்ட்டாக இருக்கிறது. ஜெட்டாவே ஜெயம்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு