மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை ஹேட்ச்பேக் கார்களுக்கு இருந்த வரவேற்பு, இப்போது மல்ட்டி யுட்டிலிட்டி கார்கள் பக்கம் திரும்பியிருக்கிறது. மாருதி எர்டிகா, நிஸான் எவாலியா, செவர்லே என்ஜாய், ஹோண்டா மொபிலியோ, டட்ஸன் கோ ப்ளஸ் என 7 சீட்டர் கார்கள் விற்பனைக்கு வந்துகொண்டே இருப்பதை வைத்தே, இதற்கான மார்க்கெட் அதிகரித்திருப்பதைப் புரிந்துகொள்ளலாம். பட்டியல், இதோடு நிற்கப்போவது இல்லை. எர்டிகாவுக்கும் மொபிலியோவுக்கும் கடுமையான சவால் இனிமேல்தான் காத்திருக்கிறது.

ரெனோவின் 7 சீட்டர் காரான லாட்ஜி, ஏப்ரல் மாதம் விற்பனைக்கு வருகிறது. இது டொயோட்டா இனோவாவுக்கே சவால்விடும் கார். காரணம், ஸ்டைலிலும், இடவசதியிலும், பெர்ஃபாமென்ஸிலும் கடுமையான போட்டியை ஏற்படுத்தும் லாட்ஜி, இனோவாவைவிட கிட்டத்தட்ட 3 - 4 லட்சம் ரூபாய் விலை குறைவாக இருக்கும். எந்தெந்த விஷயங்களில் லாட்ஜி பெஸ்ட்; எங்கே எல்லாம் இனோவா ஸ்கோர் செய்கிறது; லாட்ஜியின் பெர்ஃபாமென்ஸ் எப்படி என ஓட்டிப் பார்த்து, முழுமையான டெஸ்ட் ரிப்போர்ட்டை இந்த இதழில் வெளியிட்டிருக்கிறோம். 7 சீட்டர் கார் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்களுக்கு, இந்த டெஸ்ட் ரிப்போர்ட் மிக உதவியாக இருக்கும்.

2015 - ஸ்கூட்டர்களுக்கான ‘வெல்கம் பேக்’ ஆண்டு. 1980-களில் ஸ்கூட்டர்கள்தான் இந்திய ஆண்களின் அடையாளம். அதன் பிறகு வந்த மேக்ஸ்-100, ஸப்ளெண்டர் பைக்குகள், நடுத்தர வயது ஆண்களுக்கான பைக்குகளாக மாறிவிட்டன. இப்போது காலச் சக்கரம் மீண்டும் ஸ்கூட்டர் பக்கம் சுழல ஆரம்பித்திருக்கிறது. பிரான்ஸின் புகழ்பெற்ற ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான பெஜோ (Peugeot) நிறுவனத்தை வாங்கியிருக்கும் இந்தியாவின் மஹிந்திரா நிறுவனம், பெஜோ ஸ்கூட்டர்களை வரிசை கட்டி இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டுவரவிருக்கிறது. ஸ்கூட்டர்தானே என்று யாரும் ஜஸ்ட் லைக் தட் கடந்துவிட முடியாது. காரணம், 100சிசி, 125சிசி ஸ்கூட்டர்களோடு 270சிசி, 400சிசி என பவர்ஃபுல் பைக்குகளுக்கு இணையாக, பவர்ஃபுல் ஸ்கூட்டர்களையும் களமிறக்க இருக்கிறது மஹிந்திரா.

இன்னொரு பக்கம், சென்னையில் தொழிற்சாலை அமைத்து வாகனத் தயாரிப்பைத் துவக்கிவிட்ட யமஹா, முதலில் வெளியிட இருக்கும் டூ வீலர் எது தெரியுமா? 125சிசி ஸ்கூட்டர். ரகசியமாக டெஸ்ட் செய்யப்படும் கார், பைக்குகளைப் படம் பிடித்து அனுப்புவதில் வல்லவர்களான நம் வாசகர்களில் ஒருவர், யமஹாவின் புதிய ஸ்கூட்டரையும் படம் பிடித்து அனுப்பினார். ‘மோட்டார் விகடனுக்குப் பயந்தே இரவிலும், தொழிற்சாலைக்கு உள்ளேயும் நாங்கள் புதிய கார்களை டெஸ்ட் செய்ய வேண்டியிருக்கிறது. எப்படி கார்கள் டெஸ்ட் செய்யப்படும் நேரத்தைக் கண்டுபிடிக்கிறீர்கள்?’ என்றார், சமீபத்தில் நாம் சந்தித்த கார் தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் நிர்வாக இயக்குநர். இந்தப் பாராட்டு உங்களுக்குத்தான் வாசகர்களே!

என்றும் உங்களுக்காக

ஆசிரியர்