Published:Updated:

அன்பு வணக்கம்!

அன்பு வணக்கம்!

சேர்ந்திசைக்கு இருக்கும் அழகே தனி. அதேபோல, ஒரு பத்திரிகையின் உருவாக்கத்தில் வாசகர்களும் சேர்ந்து செயல்படும்போது, அதன் அழகு மேலும் மிளிரும்.
motor.vikatan.com வலைதளத்திலும், முகநூல் மற்றும் ட்விட்டரிலும் வாசகர்கள் அனுப்பிவைக்கும் ‘ஸ்பை’ புகைப்படங்களும், ‘விஷுவல் டேஸ்ட்’ புகைப்படங்களும், பகிர்ந்துகொள்ளும் கருத்துக்களும், எல்லோராலும் மிக ஆர்வமாக ரசிக்கப்படுவதில் மோட்டார் விகடன் மகிழ்கிறது. மாதம் ஒருமுறை பத்திரிகை வெளிவரும்போது, ஆவலோடு வாங்கிப் புரட்டி ரசித்து மகிழ்கிற அதே பரவசத்தை, இப்போது தினம் தினம் வழங்குகிறது மோட்டார் விகடன். புதுப்புது விஷயங்கள் பதிவேற்றம் ஆகிக்கொண்டே இருப்பதால், மோட்டார் விகடனின் வலைதளம், முகநூல் மற்றும் ட்விட்டருடன் எப்போதும் இணைந்திருங்கள்.

பலவிதங்களிலும் இந்த இதழ் உங்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைக்கும். காரணம், 10 - 12 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில், எந்த மிட் சைஸ் டீசல் செடான் வாங்குவது என்ற கேள்விக்கு விடை சொல்லும்விதமாக மாருதி சியாஸ், ஹூண்டாய் வெர்னா, ஃபோர்டு ஃபியஸ்டா, நிஸான் சன்னி, ஹோண்டா சிட்டி, ஃபியட் லீனியா, ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோ, ரெனோ ஸ்காலா, ஸ்கோடா ரேபிட் ஆகிய ஒன்பது கார்களை அடுத்தடுத்து ஓட்டிப் பார்த்து ஒப்பிட்டு, இவற்றின் சாதகபாதகங்களை மிக நுட்பமாக அலசி ஆராய்ந்து சொல்லும் விரிவான ரிப்போர்ட், இந்த இதழில் இடம்பெற்றிருக்கிறது.

தவிர, மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட், ஹூண்டாய் i20, பென்ஸ் GLA, ஆடி A6 என அனைத்து வகை கார்களும் இந்த இதழில் இடம்பெற்றிருக்கின்றன. பைக் ஆர்வலர்களுக்காக கவாஸாகி வெர்ஸிஸ், ஹார்லி டேவிட்சன் லைவ்வயர், பெனெல்லி TNT25 பைக்குகளின் சீறல் சத்தங்களையும் இந்த இதழில் கேட்க முடியும்.
கமான்... லெட்ஸ் கோ!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

என்றும் உங்களுக்காக

ஆசிரியர்