Published:Updated:

இது, ஐ20 க்ராஸ்ஓவர் !

சார்லஸ்

’பார்க்க எஸ்யுவி மாதிரி இருந்தாலே போதும்; ஆனால், எஸ்யுவியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை’ - இதுதான் இப்போது இந்திய கார் உலகின் ட்ரெண்ட். மிட்சுபிஷி பஜேரோ, டொயோட்டா ஃபார்ச்சூனர், செவர்லே கேப்டிவா, ஹோண்டா சிஆர்-வி போன்ற 30 லட்சம் ரூபாய் எஸ்யுவி கார்கள், சராசரி வாடிக்கையாளர்களுக்கு எட்டாக் கனி. அடுத்து டாடா சஃபாரி, மஹிந்திரா ஸ்கார்ப்பியோ போன்ற கார்கள் வந்தன. இவற்றின் விலையும் 15 லட்சம் ரூபாயைத் தாண்டுவதால், இந்த செக்மென்ட்டும் மாஸ் மார்க்கெட்டைத் தொடவில்லை.

‘இன்னும் காம்பேக்டாக வேண்டும்’ என்கிற மார்க்கெட் ரிஸர்ச்படி, ரெனோ டஸ்ட்டரின் அசாதாரண வெற்றி, இந்த மார்க்கெட்டுக்கான டிமாண்ட் இருப்பதை உறுதிசெய்தது.
டஸ்ட்டரைத் தொடர்ந்து 4 மீட்டர் நீளத்துக்குள் ஃபோர்டு கொண்டுவந்த எக்கோஸ்போர்ட், டாப் செல்லர். இதுதான் ட்ரெண்ட் என்பதை உணர்ந்தனர் கார் தயாரிப்பாளர்கள். நிஸான் டெரானோ, ஃபியட் அவென்ச்சுரா, டொயோட்டா எட்டியோஸ் க்ராஸ் என க்ராஸ் கார்களுக்கான மார்க்கெட் எகிறியது. இப்போது இந்தியாவில் விற்பனையாகும் கார்களில் 18 சதவிகிதம் இவைதான். 2016-ம் ஆண்டுக்குள் இது 25 சதவிகிதத்தை எட்டிவிடும் என்பது எதிர்பார்ப்பு. இதனால்தான், ஏற்கெனவே மார்க்கெட்டில் செம ஹிட் கொடுத்து, விற்பனைக்கு வந்த 7 மாதங்களில் 1 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை படைத்த, எலீட் ஐ20 காரின் மற்றொரு பரிமாணமாக, ஆக்டிவ் எனும் க்ராஸ்ஓவர் காரை கொண்டுவந்திருக்கிறது ஹூண்டாய்.

இது,  ஐ20  க்ராஸ்ஓவர் !

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

எட்டியோஸ் க்ராஸ், க்ராஸ் போலோ போன்றெல்லாம் சும்மா பேருக்காக இல்லாமல், முழுமையான க்ராஸ்ஓவர் கார் போலவே இருக்கிறது ஐ20 ஆக்டிவ். எலீட் ஐ20 காரின் அழகான டிஸைனைக் குலைத்து விடாமல், அதேசமயம் க்ராஸ்ஓவர் போன்ற தோற்றத்தையும் அழகாகச் சேர்த்திருக்கிறார்கள். க்ராஸ்ஓவர் கார்களுக்கே உரித்தான முன்பக்க பானெட்டுக்குக் கீழே பிளாஸ்டிக் மேலுறை (கிளாடிங்) வைக்கப்பட்டுள்ளது. ஆனால், எட்டியோஸ் க்ராஸ் போன்று இது அடிக்கும் வகையில் இல் லாமல், காரின் இயல்போடு பொருந்துவதுபோல உள்ளது. 170 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டது எலீட் ஐ20. இதை அப்படியே இன்னும் 20 மிமீ உயர்த்தி, க்ராஸ்ஓவர் டிஸைனைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

இது,  ஐ20  க்ராஸ்ஓவர் !

ஐ20 - 14 இன்ச் வீல்களை மட்டுமே கொண்டிருக்க, ஐ20 ஆக்டிவ்-ல் இருப்பது - 16 இன்ச் அலாய் வீல்கள். ஐரோப்பிய மாடல் ஐ20 காரில் இருந்த புரொஜெக்டர் ஹெட்லைட்ஸை, ஐ20 ஆக்டிவ்-ல் பொருத்தி இருக்கிறது ஹூண்டாய். LED டே டைம் ரன்னிங் விளக்குகளோடு, காரின் பின்பக்கம் பெட்ரோல் டேங்க் மூடிக்கு பெரிய கேப் ஒன்றையும் பொருத்தி இருக்கிறார்கள்.

காருக்கு உள்ளே, ஸ்போர்ட்டியான தோற்றத்தைக் கொடுக்க மெட்டல் பெடல்கள் பொருத்தப்பட்டுள்ளதோடு, முழுக்க முழுக்க கறுப்பு வண்ண கேபின் இருக்கிறது. ஆரஞ்சு வண்ணம் சேர்க்கப்பட்ட இருக்கைகள்கொண்ட ஸ்போர்ட்டியான வேரியன்ட் ஆப்ஷனும் இதில் உண்டு. இரண்டு காற்றுப் பைகள், கீ-லெஸ் என்ட்ரி, ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்ஸ், லெதர் கியர் லீவர் மற்றும் ஸ்டீயரிங் வீல், அட்ஜஸ்ட்டபிள் பின்பக்க ஹெட்ரெஸ்ட், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், பின்பக்க விண்ட் ஸ்கிரீன் வைப்பர் போன்ற வசதிகள் அனைத்தும் டீசல் மாடலில் மட்டுமே உள்ளன. பெட்ரோல் மாடலில் இந்த வசதிகள் இல்லை.

இது,  ஐ20  க்ராஸ்ஓவர் !

இன்ஜின்

ஹூண்டாய் ஐ20 காரில் இருக்கும் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.4 லிட்டர் டீசல் இன்ஜின்தான் ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் காரிலும் இருக்கிறது. கியர் ரேஷியோவில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாகச் சொல்கிறது ஹூண்டாய். இந்த முன்னேற்றம் டீசல் மாடலில் நன்றாகத் தெரிகிறது. டர்போ லேக் எதுவும் இல்லாமல், சட்டெனப் பறக்கிறது டீசல் ஐ20 ஆக்டிவ். இது, அதிகபட்சமாக 4,000 ஆர்பிஎம்-ல் 88.8 bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. பெட்ரோல் இன்ஜின் ரொம்பவும் சுமார். அதிக எடை மற்றும் குறைந்த பவர் (82bhp) காரணமாக, பெர்ஃபாமென்ஸில் சொதப்புகிறது பெட்ரோல் ஐ20 ஆக்டிவ்.

இது,  ஐ20  க்ராஸ்ஓவர் !

கோவாவில் இந்த காரை டெஸ்ட் செய்தோம். கோவாவில் நெடுஞ்சாலைகளைவிட குறுகலான சாலைகள்தான் அதிகம். வளைத்துத் திருப்பி ஓட்டுவதற்குச் சிறப்பாக இருக்கிறது ஐ20 ஆக்டிவ். கிரவுண்ட் கிளியரன்ஸ் அதிகப்படுத்தப்பட்டு இருந்தும் பாடி ரோல் அதாவது, வளைவுகளில் வளைத்து திரும்பும்போது நம் உடலும் கூடவே சேர்ந்து திரும்புவது போன்ற உணர்வு ஏற்படவில்லை.


ஐ20 காரைவிட இன்னும் கொஞ்சம் ஸ்டைலான க்ராஸ்ஓவர் வேண்டும் என்பவர்களுக்கானதுதான், ஐ20 ஆக்டிவ்!

படங்கள்: சார்லஸ்