Published:Updated:

ஈஸியான A6

AUDI A6 2.0 TDIதமிழ், படங்கள்: ஆர்.முத்துக்குமார்

டி ஏ6 சொகுசுப் பிரியர் களுக்கான ராயல் கார். 2.0, 2.7, 3.0 லிட்டர் என மூன்று இன்ஜின்களுடன் வெளிவந்த ஆடி A6 டீசலில், இப்போது 2.0 லிட்டர் மாடல் மட்டுமே விற்பனையில் இருக்கிறது. விரைவில் புதிய A6 விற்பனைக்கு வர இருக்கும் நிலையில், தற்போது விற்பனையில் இருக்கும் A6-ன் 2 லிட்டர் டீசல் மாடலை டெஸ்ட் செய்தோம்.
டிஸைன், வசதிகள்

டிஸைனில் ஆடியை அடித்துக்கொள்ள முடியாது. ஆடியின் ஃபேவரைட் LED ஹெட்லைட்ஸ் மிரட்டுகின்றன. அருவிபோல, வளைவு நெளிவுகளுடன் ஒளிரும் இதன் இண்டிகேட்டர்களுக்கு ‘வாட்டர் ஃபால் இண்டிகேட்டர்’ என்று பெயர்.

ஈஸியான A6

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உள்ளே, ஏ.சி விஷயத்தில் டிரைவர் மட்டுமின்றி, பின் பக்கப் பயணிகளையும் திருப்திப்படுத்துகிறது A6. இதன் 4 ஸோன் கிளைமேட் கன்ட்ரோல் மூலம், பின் பக்கப் பயணிகளும் தங்களுக்கு வேண்டியபடி ரிமோட் மூலமோ, மேனுவலாகவோ ஏ.சி ப்ளோயரை அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம். லெதர் சீட், சன்ரூஃப், சீட் அட்ஜஸ்ட் மெமரி, ப்ளூடூத், ரிவர்ஸ் கேமரா, இன்பில்ட் ஜிபிஎஸ், டச் ஸ்க்ரீன் மற்றும் காரின் அத்தனை விஷயங்களையும் மல்ட்டி மீடியா இன்டர்ஃபேஸ் மூலம் கட்டுப்படுத்தும் வசதி என்று ஏகப்பட்ட சிறப்பம்சங்கள் இதில் உள்ளன.

 இன்ஜின்

ஃபோக்ஸ்வாகன் குழுமத்தைச் சேர்ந்தது ஆடி. ஃபோக்ஸ்வாகன் பஸாத், சூப்பர்ப் ஆகிய கார்களிலும் ஆடியில் இருக்கும் அதே 2.0 லிட்டர் இன்ஜின். ஆனால், பவர்ஃபுல் டியூனிங் காரணமாக பெர்ஃபாமென்ஸில் முதல் இடத்தில் இருக்கிறது A6. அதிகபட்சமாக 174bhp சக்தியை வெளிப்படுத்தும் A6, 38.7kgm டார்க்கைக் கொண்டிருக்கிறது.  டீசலுக்கே உரிய அதிர்வுகள், ஐடிலிங்கில் லேசாகத் தெரிந்தாலும், பெரிய குறையாகத் தெரிய வில்லை. 0-100 கி.மீ-யை 8.2 விநாடிகளில் கடக்கிறது A6. லோ ரேஞ்ச், மிட் ரேஞ்ச், ஹை ரேஞ்ச் என்று எல்லா ரேஞ்சிலும் பவர்ஃபுல்லாக இருக்கிறது. இதற்குக் காரணம், 8 ஸ்டெப் மல்ட்டிட்ரானிக் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், தடங்கல் இல்லாமல் சக்தியை சக்கரங்களுக்குக் கடத்துவதுதான்.

ஓட்டுதல், கையாளுமை

எடைக் குறைப்புக்காக ஆடியின் பாடி ‘ஹைபிரிட் அலுமினியம் கன்ஸ்ட்ரக் ஷன்’ எனும் முறையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதாவது, கார் கதவுகள், பின் பக்க பூட் கதவு, பானெட் போன்றவை முழுக்க அலுமினியத்தால் ஆனவை. இதனால் கணிசமாக எடை குறைந்திருப்பதால், மைலேஜ் பழைய A6-ஐவிட 1.5 கி.மீ அதிகமாகி இருப்பதாகச் சொல்கிறது ஆடி. ஸ்க்ரீனில் உள்ள கம்ஃபர்ட்/டயனமிக்/இண்டிவிஜுவல்/ஆட்டோமேட்டிக் ஆகிய நான்கு ஆப்ஷன்கள் மூலம் நம் சாலைகளுக்குத் தகுந்தபடி இதன் டிரைவ் செலெக்ட்டை மாற்றிக் கொள்ளலாம்.

மேலும், A6-ல் உள்ள அடாப்டிவ் சஸ்பென்ஷன் சிஸ்டம் - ஆடி A8, ரேஞ்ச்ரோவர் இவோக் போன்ற ஹைடெக் கார்களில் மட்டுமே இருக்கும் விஷயம். இதில் உள்ள ‘Raise/Low’ ஆப்ஷன் மூலம் கிரவுண்ட் கிளியரன்ஸை ஏற்றி/இறக்கிக்கொள்ள முடியும். நெடுஞ்சாலையில் டயனமிக் மோட்-ஐ செலெக்ட் செய்தோம். தரையோடு தரையாக கார் இறங்கி, சஸ்பென்ஷன் ஸ்டிஃப் ஆவதை உணர முடிந்தது. ஒரு ஸ்போர்ட்ஸ் காரை ஓட்டுவதுபோல ஃபீல் கிடைத்தது.

ஈஸியான A6

ஆஃப் ரோடு மற்றும் மலைச் சாலைகளில் இண்டிவிஜுவல் மோட்-ஐ செலெக்ட் செய்தால், காரின் சம்ப் ஏரியா அடிபடாதவண்ணம் கிரவுண்ட் கிளியரன்ஸ் அதிகமாகி, சஸ்பென்ஷன் சாஃப்ட் ஆக மாறி, கப்பல் போல நம்மைத் தாலாட்டியபடி செல்கிறது A6. ஆனால், காஸ்ட்லியான இந்த செடானில், ஆடியின் குவாட்ரோ சிஸ்டமான ஆல் வீல் டிரைவ் வசதி கிடையாது; ஃப்ரன்ட் வீல் டிரைவ் மட்டுமே!

ஈஸியான A6


ஆடிக்கே உரிய ஏரோடைனமிக் டிஸைன் நீங்கள் டாப் ஸ்பீடில் வளைவில் திரும்பினாலும், பாடி ரோல் ஆகாமல் தைரியம் கொடுக்கிறது. ஆனால், நீளமான இந்த செடானின் டர்னிங் சர்க்கிள் 11.9 மீட்டர் என்பதால், சட்டென யு-டர்ன் எடுப்பது கொஞ்சம் சிரமம்.

ஆடி A6-ல் எலெக்ட்ரானிக் ஹேண்ட் பிரேக் பட்டனை ஆன் செய்துவிட்டு சிக்னல், மேடு - பள்ளங்கள் என்று எதிலும் தைரியமாக கார் ஓட்டலாம். ‘ஆட்டோ ஹோல்டு’ சிஸ்டம் தானாக ஆன் ஆவதால், சிக்னல்களில் பிரேக்கில் இருந்து காலை எடுத்தால், கார் தானாக மூவ் ஆவது A6-ல் கிடையாது. ஆக்ஸிலரேட்டரை மிதித்தால் மட்டுமே நகர்கிறது கார். ஆனால், இவையெல்லாமே நீங்கள் சீட் பெல்ட் போட்டால் மட்டுமே நடக்கும். சீட் பெல்ட் போடாமல் நீங்கள் ஆக்ஸிலரேட்டரை மிதித்தால், கார் நகர மாட்டேன் என்று அடம்பிடிக்கும். ஆடியின் இந்த ஸ்பெஷல் பாதுகாப்பு அம்சம் வரவேற்கத்தக்கது.