Published:Updated:

வருகிறது பேட்ரோல்!

NISSAN CARNIVALரா.ராஜா ராமமூர்த்தி

இந்தியாவிற்கு வந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை ‘நிஸான் கார்னிவல்’ என்ற பெயரில் கொண்டாடியது நிஸான்.


டெல்லியில் உள்ள புத் இன்டர் நேஷனல் ரேஸ் ட்ராக்கில்தான், நிஸான் டிரைவ் கொண்டாட்டம் நடைபெற்றது. ரேஸ் ட்ராக் என்பதால், 370Z, GTR ஸ்போர்ட்ஸ் கார்கள் இருக்கும் என எதிர்பார்த்தால், அதைவிட ஸ்பெஷலான இரண்டு கார்களை விளையாடக் கொடுத்தது நிஸான்.

அதில், முதல் கார் நிஸான் பேட்ரோல் எஸ்யுவி. பார்ப்பதற்கு ஏலியன் Vs ப்ரிடேட்டர் படத்தில் இருந்து வந்த வேற்றுக் கிரக வாகனம்போல பிரம்மாண்டமாக இருக்கிறது பேட்ரோல். 18 இன்ச் வீல்களுடன் இது சாலையில் செல்வதைப் பார்ப்பதற்கே மிரட்டலாக இருக்கிறது. இதன் 5.6 லிட்டர் V8 பெட்ரோல் இன்ஜின், பெர்ஃபாமென்ஸில் அதிர வைக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வருகிறது பேட்ரோல்!

 ஆஃப் ரோடிங்கிலும் இதன் லோ ரேஞ்ச்  டார்க் டெலிவரி, 4 வீல் டிரைவ் சிறப்பாக இருக்கிறது. ஆக்ஸிலரேஷன் டெஸ்ட்டில் 3.5 டன் எடைகொண்ட பேட்ரோல் சீறிய விதத்தில் மிரண்டுபோனோம். ஃபுல் ஆக்ஸிலரேஷனில் இருந்து சடன் பிரேக் போட்டால், பாடி மொத்தமும் முன்பக்கம் சாயாமல் கட்டுக்கோப்பாக நிற்கிறது பேட்ரோல். மோசமான சாலைகளில் ஓட்டுகிறோம் என்பதையே உணர முடியாத அளவுக்கு, ஸ்ட்ராங்கான கட்டுமானத்தைக்கொண்டிருக்கிறது. ‘எதற்கு சம்பந்தம் இல்லாமல் பேட்ரோல் எஸ்யுவியை இங்கே கொண்டுவந்து ஓட்டக் கொடுக்கிறீர்கள்? என்று நிஸான் அதிகாரிகளிடம் கேட்டால், ‘சீக்கிரம் சொல்வோம்!’ என்கிறார்கள். ஆமாம், நீங்கள் எதிர்பார்ப்பது சரிதான். விரைவில் இந்தியாவில் வரவிருக்கிறது பேட்ரோல் எஸ்யுவி.

வருகிறது பேட்ரோல்!

5.6 லிட்டர் பெட்ரோல் V8 இன்ஜினை ஓட்டிவிட்டு வந்தால், லீஃப் (Leaf) எலெக்ட்ரிக் காரைக் கொடுத்தது நிஸான். 80 KW எலெக்ட்ரிக் மோட்டார்கொண்ட நிஸான் லீஃப், புகைப்படங்களில் சிறிதாகத் தெரிந்தாலும் நேரில் பெரிய காராக இருக்கிறது. டிராக்கில் வளைத்துத் திருப்பி ஓட்டுவதற்கும் எளிதாக இருக்கிறது. முழு வளைவில், ஆக்ஸிலரேட்டரை ஏறி மிதித்தால், டயர் ஸ்கிரீச்சுகளோடு திரும்புகிறது லீஃப். பார்ப்பதற்கு க்யூட்டாக இருக்கும் லீஃப், விரட்டி ஓட்டுவதற்கு நன்றாக இருப்பது பெரிய ப்ளஸ். மேலும், இன்ஜின் சத்தம், அதிர்வுகள் சுத்தமாக கிடையாது என்பதால், விரட்டிய அலுப்பே தெரியவில்லை.
இது தவிர, சன்னி, மைக்ரா கார்களும் ரேஸ் ட்ராக்கில் வட்டமடித்தன.

நிஸானின் 10 ஆண்டு கொண்டாட் டமாக,  விரைவில் விற்பனைக்கு வரட்டும் பேட்ரோல்.

வீ ஆர் வெயிட்டிங்!